Home
News

ஒத்த ரீசார்ஜ்.. இனி Aitel-க்கு 77 நாட்கள்.. வாய்ஸ் கால்கள்.. 600 எஸ்எம்எஸ்.. 6ஜிபி டேட்டா.. உடனே இதை பண்ணுங்க!

தினசரி டேட்டா இல்லாமல், லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plan) மலிவான விலைக்கு அதிக வேலிடிட்டி கிடைக்கிறது. பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்திலும் அப்படியான திட்டங்கள் இருக்கின்றன. இதில் 77 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் கஸ்டமர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

லம்ப்-சம் டேட்டா திட்டங்களானது, தினசரிக்கு டேட்டாவை கொடுக்காது. ஒட்டுமொத்த வேலிடிட்டிக்கும் சேர்த்தே குறைவான டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆகவே, டேட்டாவை பெரிதாக எதிர்பார்க்க முடியாது. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்காக ரீசார்ஜ் செய்ய திட்டமிடும் கஸ்டமர்கள், கூடுதலாக கொஞ்சம் டேட்டாவும் வேண்டுமானால், இவற்றை பெறலாம்.

ஒத்த ரீசார்ஜ்.. இனி Aitel-க்கு 77 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஏர்டெல் ரூ. 489 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 489 Prepaid Plan): லம்ப்-சம் டேட்டா, வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் எஸ்எம்எஸ் மற்றும் 77 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஸ்பேம் அலெர்ட், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ஓடிடி சந்தாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 77 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் (Unlimited Local, STD, Roaming Voice) சலுகைகள் வழங்கப்படும். இதே 77 நாட்களுக்கும் மொத்தமாகவே 6 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இந்த டேட்டா போதாத பட்சத்தில் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படாது. ஆகவே, வேலிடிட்டிக்கு முன்பாகவே 6 ஜிபி டேட்டாவை முழுவதும் தீர்த்துவிட்டால், 1 எம்பி டேட்டாவுக்கு 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சம் முறையில் கொடுக்கப்பட்டு உள்ளது.

77 நாட்களுக்கு மொத்தமாக 600 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொடுக்கப்படும். இந்த லிமிட் முடிந்துவிட்டால், அதற்கு பிறகு கட்டணம் செலுத்தி எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகள் 77 நாட்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவை இந்த திட்டம் கொடுத்து உள்ளது.

ரூ.4,000 மதிப்புள்ள இந்த சந்தாவை 12 மாதங்களுக்கு ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஸ்பேம் அலெர்ட் சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. ஆகவே, இன்-கம்மிங் கால்கள் மற்றும் இன்-கம்மிங் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து கொள்ள முடியும். இதற்கு கூடுதல் கட்டணம் கிடையாது.

ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hellotunes) சலுகைகளை கொடுத்து உள்ளது. 30 நாட்களுக்கு ஒரு டியூனை மாற்றி கொள்ளலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவில் ப்ரீ-வெர்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வளவு சலுகைகளும் ரூ.489 விலைக்கு கிடைக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு 77 நாட்கள் வேலிடிட்டி மற்றும் டேட்டாவுடன் திட்டங்கள் கிடையாது.

டேட்டா இல்லாமல், வெறும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொண்ட திட்டம் வேண்டுமானால், ஏர்டெல் ரூ.469 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இதில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்த ஓடிடி மட்டும் இல்லை. மற்ற சலுகைகள் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 489 Prepaid Plan 77 Days Validity 600 SMS 6GB Data Unlimited Local STD Roaming Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X