Just In
- 55 min ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 1 hr ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 1 hr ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 2 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- Finance
அதானி-யை புலம்பவிட்ட Hindenburg.. 88 கேள்விக்கு வரிக்கு வரி விளக்கம்..!
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- News
ஜன.,30ல் காங்கிரசுடன் இணைப்பு? மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் திடீர் ‛ஹேக்’!பரபர
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Movies
யோகி பாபு -தர்ஷா குப்தா ஜோடி சேரும் மெடிக்கல் மிராக்கிள்.. பட்டையை கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
யுவர் ஹானர்.! எனக்கு நீதி வேண்டும்.! கோர்ட்டுக்கே நேரில் வழக்காட வந்த AI ரோபோட்.!
உலகமே கணினி மயம் ஆக்கப்பட்ட நிலையில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) சிறிது சிறிதாக மனிதர்களின் வாழ்க்கையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டது. மனிதன் செய்யும் அனைத்து வேலைகளையும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) அறிவு கொண்ட ரோபோக்கள் செய்து முடிப்பதை நாம் பல திரைப்படங்களில் பார்த்து பிரமித்துப் போயிருப்போம்.

முழு AI கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ரோபோட்டால் என்னவெல்லாம் செய்ய முடியும் தெரியுமா?
இதுபோல ஒரு ரோபோட் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கூட யோசித்து இருப்போம். அது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக்கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்.
நமது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோனில் உள்ள ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வசதி மூலம் நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் இப்போது சில வினாடிகளில் பதில் கிடைக்கிறது.

நீதி கேட்க பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ரோபோட்
உலகமே இப்போது ஒருவரின் விரல் நுணியில் வந்துவிட்டது என்று கூட நாம் கூறலாம்.
ஒரு சிறிய சைஸ் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஏஐ (AI) அம்சத்திற்கே இவ்வளவு திறமை என்றால், முழுமையாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கொண்டே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ரோபோட்விற்கு என்னென்ன திறமைகள் எல்லாம் இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

நீதி கேட்டு வழக்காடும் உலகின் முதல் AI வழக்கறிஞர் ரோபோ.!
மனிதனின் வேலையை சுலபப்படுத்தும் விதமாக வீட்டு வேலைகளைச் செய்வதற்கு, கட்டுரைகள் எழுதுவதற்கு என்று இதுவரை சாதாரண வேலைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட்களை - 'டு-நாட்-பே (DoNotPay)' என்ற நிறுவனம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஆம், இந்த நிறுவனம் ஒரு ரோபோவை வழக்கறிஞராக உருவாக்கியுள்ளது.

பிப்ரவரி மாதம் விசாரணைக்கு நேரில் ஆஜராக போகிறதா இந்த ரோபோ?
சாட்பாட் (Chatbot) சேவைகள் வழங்கும் ஒரு நிறுவனமாக UK மற்றும் அமெரிக்கா நாடுகளில் உள்ள மாநிலங்களில் தற்போது செயல்பட்டு வரும் "டு-நாட்-பே" நிறுவனம் ஒரு ரோபோட் வழக்கறிஞரை நிகழ் நேர வழக்கு ஒன்றைக் கையாள அறிமுகம் செய்துள்ளது.
ஒரு ரோபோ வழக்கறிஞராகச் செயல்படப் போவது இதுவே முதல் முறையாகும். இந்த வழக்கு வரும் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வரப்போகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

யாருக்காக இந்த ரோபோ கோர்ட்டில் வழக்காட போகிறது தெரியுமா?
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த டு-நாட்-பே நிறுவனம், சாமானிய மக்களுக்காக விதிக்கப்படும் பார்க்கிங் டிக்கெட் வழக்கு கையாள்வதற்கான சேவையை தற்போது வழங்கி வருகிறது.
இனி வரும் காலத்தில் இமெகிரேஷன் உரிமை (Immigration Rights), மற்ற சமூகப் பிரச்சனைகள் (Social issues) ஆகியவற்றிற்கான சட்ட ஆலோசனையை வழங்கி தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க இந்த ரோபோ லாயர்களை பயன்படுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வழக்கறிஞர் ரோபோட்
இதுவரை சாட்பாட் மூலம் ஆலோசனைகள் கூறி வந்த இந்த டூ நாட் பே ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட்டுகள், முதல் முறையாகச் சட்ட பூர்வ வழக்கறிஞராக ஒரு வழக்கைக் கையாள உள்ளது.
இந்த முதல் வழக்கில் அதிக வேகத்திற்காக அபராதம் விதிக்கப்பட்ட தன்னுடைய கட்சிக்காரருக்குச் சாதகமாக இந்த டூ நாட் பே ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட் ஆஜராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய கட்சிக்காரரை இந்த ரோபோட் வழங்கறிஞர் காப்பாற்றுமா?
நியூ சயின்டிஸ்ட் (New Scientist) என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை முற்றிலுமாக ஆராய்ந்து தன்னுடைய கட்சிக்காரருக்கு என்னென்ன வாதங்களை வைக்க வேண்டும் என்ற ஆலோசனையை ஹெட்போன் மூலம் வழிநடத்த உள்ளது.

இந்த வழக்கு தோல்வி அடைந்தால் என்னாகும் தெரியுமா? தண்டனையை யார் ஏற்றுக்கொள்வார் தெரியுமா?
சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த வழக்கில் தோல்வி அடைந்தால் அதற்கான அபராத தொகை எவ்வளவு ஆனாலும் அதை செலுத்தத் தயாராக உள்ளதாக டூ நாட் பேயின் நிறுவனர் ஜோஸ்வா ப்ரௌடர் (Joshua Browder) தெரிவித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இது கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், நீதி மன்றத்தில் ஒரு ரோபோ வழக்காடுவதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

இந்த வழக்கு எங்கே? எப்போது நடத்திறது?
டூ நாட் பே நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸை பயன்படுத்தி தனது வாடிக்கையாளர்கள் பார்க்கிங் டிக்கெட் (Parking Ticket), வங்கி கட்டணம் மாதிரியான பிரச்சனைகளில் சமாளிக்க சட்ட ஆலோசனை கூறப்போவதாக தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் நடக்க உள்ள இந்த வழக்கில் ரோபோ ஆஜராக இருக்கும் அதன் ஆதரவாளர் பெயர், நீதிமன்றத்தின் விலாசம், தேதி என்று அனைத்து விபரங்களும் ரகசியமாக டூ நாட் பே நிறுவனம் பாதுகாத்து வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470