பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!

|

முந்தைய காலத்தில் 'அதோ பாரு காக்கா, குருவி'.. 'ஐயையோ பூச்சாண்டி வருகிறான்' என்று கூறி, வேடிக்கை காண்பித்துத் தான் பிள்ளைகளுக்குச் சோறு ஊட்டுவார்கள்.. ஆனால், இன்றைய நிலைமை வேறு. போனில் யூடியூப் (YouTube) திறந்து வீடியோவை பிளே செய்தால் தான், குழந்தைகளுக்கு அன்றைய பொழுதிற்கான சோறே இறங்குகிறது.

இப்படி நமது கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) நம்மைப் பாதித்ததோ இல்லையோ.! அது நமக்கு தெரியாது. ஆனால், இது நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அதிகம் பாதித்துவிட்டது என்பதே உண்மை. பிள்ளைகளின் கையில் போனை பார்க்கும் போதெல்லாம் பெற்றோர்களுக்கும் ஒரு பதட்டம் மற்றும் கோவம் எழுகிறது. இதற்கான காரணம் பல இருந்தாலும், பிள்ளைகள் தவறான பாதையில் சென்றுவிடக்கூடாது என்பதே பெற்றோர்களின் பொதுவான கவலையாக இருக்கிறது.

பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? இதை படிங்க.!

பேசிக் போன் ரூல்ஸ்களை உங்கள் வீட்டில் உடனே புகுத்துவது ஏன் முக்கியமானது?

இந்த கவலை எல்லாம் உங்களுக்கு இருக்கவே கூடாது என்றால், சில பேசிக் மொபைல் போன் ரூல்ஸ்களை (Basic Mobile Phone Rules) நீங்கள் உங்கள் வீட்டில் கட்டாயம் புகுத்திட வேண்டும். குழந்தைகளையும், சிறுவர்களையும் நல்ல வழியில் வழி நடத்துவது நம்முடைய கடமை என்பதனால், இந்த விஷயங்களை நீங்களும், உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களும் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது.

அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டில் 13-19 வயதிற்குள் இருக்கும் பதின்ம வயது இளைஞர்கள் (Teenagers) இருந்தால், இந்த மொபைல் ரூல்ஸ்களை (Mobile Rules) நீங்கள் பின்பற்றுவது மிகவும் சிறப்பானது. டீனேஜர் வயதை பிள்ளைகள் கடக்கும் வரை, பெற்றோரின் சரியான அரவணைப்பும், பொறுமையான வழிநடத்தலும் கட்டாயம் தேவை என்பதனால், இதை கவனமாகக் கையாள்வது மிகவும் முக்கியமானது.

பெற்றோர்கள் இதை கொஞ்சம் தந்திரமாக தான் செய்ய வேண்டும்.!

பதின்ம வயதினருக்கான செல்போன் (Cellphone) ரூல்ஸ் விதிகளை நிறுவுவது கொஞ்சம் தந்திரமான காரியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்றைய பெற்றோர்கள் பலருக்கும் ஸ்மார்ட்போனின் முழு பயன்பாடு பற்றித் தெரிந்திருக்கவில்லை. போனில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்ற முழு விபரங்களும் சில பெற்றோர்களுக்கு தெரியவில்லை என்பதனால், இது ஒரு வித சிக்கலை உருவாக்குகிறது.

தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து விரைவாக மாறி வருகிறது. சமீபத்திய ஸ்மார்ட்போன் சாதனங்கள் அனைத்தும், சமூக வலைப்பின்னல் தளங்கள் (Social media) மற்றும் பலவிதமான மொபைல் ஆப்ஸ்களுடன் (Mobile Apps) வருகிறது. இங்கு தான் சிக்கலே அரம்பாகிறது. தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல், பல பதின்ம வயதினர் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பொறுப்பைக் கையாள போராடுகிறார்கள். எது சரி? எது தவறென்று தெரியாமல் திசை மாறிச் செல்கிறார்கள்.

பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? இதை படிங்க.!

டீன் ஏஜ் பிள்ளைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய போன் ரூல்ஸ் இது தான்..

எனவே உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்வு செய்ய உதவும் விதிகளை நிறுவுவது முக்கியம். சரி, வாருங்கள் என்னென்ன விதிகளை உங்கள் பிள்ளைகள் பின்பற்றினால், அவர்களின் டீன் ஏஜ் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்று பார்க்கலாம்.

1. பள்ளிக்கு நேரத்திற்கு முன் செல்போன் பயன்படுத்தக்கூடாது.
2. பள்ளி விதிகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். பள்ளிக்கு போன் எடுத்துச் செல்லக் கூடாது.
3. உணவு சாப்பிடும் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது.
4. உங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக நேரம் செலவழிப்பது முக்கியம். அந்த நேரத்தில் செல்போன் இருக்கக் கூடாது.
5. படிக்கும் நேரத்தில் செல்போன் கிடையாது.
6. உறங்கும் நேரத்தில் (குறிப்பாக நள்ளிரவில்) செல்போன் பயன்படுத்த முடியாது.
7. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது.
8. படுக்கையறைக்கு செல்போனை எடுத்துச் செல்லக் கூடாது.
9. இதை மீறினால், செல்போன் கட் செய்யப்படும் என்ற தெளிவான விதியை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? இதை படிங்க.!

ரூல்ஸ் போடுவதை விட 'இதை' பெற்றோர்கள் செய்வது மிகவும் முக்கியம்.!

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளின் பார்வையில் இருந்து பார்க்கையில், இந்த விதிகளை நீங்கள் கட்டாயப்படுத்தி அவர்கள் மேல் புகுத்துவது போல் தோன்ற வாய்ப்புள்ளது. இதை நீங்கள் ஏன் செய்கிறீர்கள், காரணம் என்ன என்பதை அவர்களுடன் நட்பு விதமாகப் பேசி புரிய வைப்பதும் பெற்றோரின் கடமை என்பதை மறந்துவிடாதீர்கள். கடுமையாக இல்லாமல், நட்பாக இந்த விதிகளைப் பின்பற்ற வைப்பது உங்களின் சாமர்த்தியம்.

சரி, சீரியஸ் ஆனது போதும்.. உங்களுடைய முதல் ஸ்மார்ட்போனை நீங்கள் என்ன வயதில் வாங்கினீர்கள் என்றும், அதேபோல், உங்கள் வீட்டில் இருக்கும் பதின்ம வயது இளைஞர்கள் என்ன வயதில் போன் வாங்கி தரச் சொல்லி உங்களிடம் அடம்பிடித்தார்கள் என்று கமெண்டில் கமெண்ட் செய்யுங்கள். கொஞ்சம் ஃபன் மோட்டிற்குச் செல்லலாம்.

Best Mobiles in India

English summary
What Are Good Mobile Phone Rules and Why Should Teenage Kids Should Follow It

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X