வாத்தி கம்மிங்.. என்னது இது பார்முலா இல்லையா? போன் நம்பரா? முடுஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்.!

|

தயாரிப்பை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் விளம்பரங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க பல வித்தியாசமான விளம்பரங்களை நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

ஒரு தயாரிப்பை பயன்படுத்திப் பார்ப்பதற்கு முன்னரே விற்பனை செய்ய வேண்டுமானால் அதற்கான விளம்பர யுக்தி மிகவும் வலுவாக இருக்க வேண்டும். மக்களை கவரும் விதத்தில் அமைய வேண்டும். அப்படி வித்தியாசமான விளம்பரங்கள் என்ற கலாச்சாரத்தைத் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலாக பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது பள்ளி, கல்லூரிகள் என்று கல்வி நிறுவனங்களும் கூட இந்த யுக்தியை ஆரம்பித்து விட்டன.

வாத்தி கம்மிங்.. என்னது இது பார்முலா இல்லையா? போன் நம்பரா?

மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வித்தியாசமான விளம்பரங்களைச் செய்து வந்த பள்ளிகள், இப்போது ஆசிரியர்களையும் வித்தியாசமாகத் தேடி வருகின்றன. பொதுவாகவே ஒரு பதவிக்கான தேர்வில் பல நிலைகள் இருக்கும். அனைத்து நிலையையும் வெற்றி கொண்டு செல்பவர்கள் தான் அந்தப் பதவியை அடைய முடியும். அந்த வகையில் ஆசிரியர் தேவை விளம்பரத்தையே ஒரு விதமான தேர்வு போல் வடிவமைத்து வெளியிட்டுள்ளது குஜராத்தில் இருக்கும் ஒரு பள்ளி.

குஜராத்தின் நவ்சாரி (Navsari) மாவட்டத்தில் அமைந்துள்ள பக்தாஸ்ரம் (Bhaktashram) என்ற தனியார் பள்ளி, கணக்கு ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை வித்தியாசமான முறையில் வடிவமைத்துப் பகிர்ந்துள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்ணை அறிந்து கொள்ள அந்த விளம்பரத்தில் அவர்கள் கொடுத்துள்ள கணக்கிற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.

இது பிரபல தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா (Harsh Goenka) என்பவரின் கண்களில் பட அவர் அதனைத் தனது டிவிட்டர் (Twitter) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது இணையதளத்தில் பேசு பொருளாகியுள்ளது. பகிரப்பட்டு இரண்டு நாட்களில் இந்த பதிவு 15 லட்சம் வியூக்களையும் (Views) 12 ஆயிரம் லைக்களையும் (Likes) பெற்றுள்ளது.

மேலும் சில கமெண்ட்களும் அந்த பதிவின் கீழ் வந்த வண்ணம் உள்ளன. அந்தப் பதிவின் கீழ் அபிஷேக் கோத்தாரி என்ற நபர் "நேரம் மிச்சம்! கணக்கின் தீர்வை கண்டுபிடித்து பள்ளிக்கு கால் செய்பவர் உடனடியாக வேலைக்கு அமர்த்தப்படுவார். ஹா ஹா.." என்று கமெண்டை பகிர்ந்து உள்ளார்.

வாத்தி கம்மிங்.. என்னது இது பார்முலா இல்லையா? போன் நம்பரா?

ஆனால் பொலவ்ஸ்கி ஜென்னத் என்பவருக்கு வேறொரு கருத்து இருப்பது போலத் தெரிகிறது. அவர் வெளியிட்ட கமெண்டில், "இல்லை, என்னுடைய பார்வையில் இந்த விளம்பரம் முட்டாள்தனமாகத் தெரிகிறது. இன்றைய காலநிலையில் கூகுளின் உதவியுடன் ஐந்து வயது சிறுவன் கூட இந்த கணக்கின் தீர்வை கண்டுபிடிக்கலாம் என்று அவர் கமெண்ட் செய்துள்ளார்.

அப்படியே ஒருவர் இதன் தீர்வை கண்டுபிடித்து பள்ளிக்கு கால் செய்தாலும், அவருக்கு மீண்டும் நேர்காணல் நடக்கும். இது தேவையில்லாதது என்று அவர் தனது கமெண்ட்டில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு எல்லாம் மேலே சென்று சிம்ப்ளி ப்ரபீன் என்ற ஒருவர் அந்த கணக்கைத் தாமாகவே சால்வ் (Solve) செய்து அதற்கான தீர்வை அந்த ட்விட்டர் பதிவின் கீழ் கமெண்ட் செய்துள்ளார்.

இறுதி பதிவில் இந்த சிக்கலான பார்முலாவிற்கு விடை கிடைத்துள்ளது. இந்த பார்முலா பின்னணியில் ஒளிந்துள்ள மொபைல் நம்பர் எண் 9428163811 ஆகும். இந்த பத்து இலக்க எண் தான் அந்தப் பள்ளியை தொடர்பு கொள்வதற்கான தொலைப்பேசி எண் என்று கூறப்படுகிறது. கால்குலேட்டர் பயன்படுத்தவில்லை, யாரிடமும் உதவி கேட்கவில்லை என்று ஒரு நபர் அந்த போஸ்டில் கமெண்ட் செய்துள்ளார்.

இந்த விடையைக் கண்டுபிடித்தவருக்கு ஏதேனும் பரிசுத்தொகையோ, விருதோ கிடைக்குமா சார்!" என்று கமெண்ட் செய்து அதனுடன் தான் தீர்வு கண்டதைப் புகைப்படம் எடுத்து இணைத்துப் பகிர்ந்துள்ளார். இந்த விளம்பரம் உண்மையிலேயே பயனுள்ளதா? இதைப் பற்றிய உங்களது கருத்து என்ன? என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Unlock Phone Number To Get Hired As Maths Teacher Ad Went Viral On Internet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X