வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!

|

இயற்கை மிகவும் விசித்திரமானது.. பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது.. மனிதர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியதும் கூட.. இப்படி இயற்கையின் அதிசயங்கள் பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம். நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலர் என்றால், கட்டாயமாக இந்த பதிவை படித்தே ஆக வேண்டும்.

ஏனென்றால், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு இயற்கை நிகழ்வு இப்போது இணையத்தில் ஒரு பேச்சு பொருளாக மாறியுள்ளது. UFO அதாவது அடையாளம் தெரியாத அன்ஐடென்டிபைட் பிளையிங் ஆப்ஜெக்ட் என்று கூறப்படும், ஏலியன் விண்கலம் போல துருக்கி வானில் ஒரு விசித்திரமான மேகம் (UFO-Like Cloud) உருவெடுத்துள்ளது. இதை பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டு, பல பதிவுகளை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு பார்த்த அதிசயம்

மொத்த ஊரும் ஆன்னு பார்த்த அதிசயம்

வியாழன் அன்று, துருக்கியின் பர்சாவில் மிதக்கும் ஒரு வினோதமான மேகம் காணப்பட்டது. இதை மக்கள் கண்டு ஆச்சரியத்தில் உறைந்தனர். சில மக்கள் இந்த விசித்திரமான நிகழ்வை மக்கள் அவர்களின் ஸ்மார்ட்போன் கேமராவில் படம்பிடிக்கத் துவங்கிவிட்டனர். இன்னும் சிலர் சமூக ஊடகங்களில் இந்த விசித்திரமான மேகத்தின் புகைப்படங்களைப் பதிவிட்டு, அவர்களின் வினோதமான கருத்துக்களை வெளியிடத் துவங்கிவிட்டனர்.

ஏலியனின் ஹை-டெக் தொழில்நுட்பத்தால் இந்த மேகம் உருவானதா?

இந்த மேகம் ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருளின் (UFO) வடிவத்தை உருவாக்கியது. இதனால் சில மக்கள், இதை ஒரு ஏலியன் விண்கலம் போன்ற பணியில் பார்க்கத் துவங்கிவிட்டனர். ஏலியனின் வினோதமான தொழில்நுட்பத்தால், அதன் UFO விண்கலம் மேகங்களால் சூழப்பட்டு, அதன் அசல் அடையாளத்தை அந்த பறக்கும் தட்டு மறைத்துக் கொண்டது என்றெல்லாம் சிலர் கட்டுக்கதை கட்ட துவங்கிவிட்டனர். 'உருட்டில் இது வேற மாதிரியான உருட்டாகும்'.

UFO போன்ற தோற்றத்தைக் காண்பித்த மேகத்தால் பரபரப்பு.!

இணையத்தில் பல படங்கள் ஒரு அற்புதமான சூரிய உதயத்தை விசித்திரமான மோகத்துடன் காட்டியது. வானத்தின் மத்தியில் ஒரு பெரிய மேகம் துருக்கிக்கு மேலே மிதந்தது, மேகத்தின் நடுவில் ஒரு பெரிய துளை UFO போன்ற தோற்றத்தைக் காண்பித்தது. மக்கள் இதை காரில் சென்ற பொழுதும் கூட, வீடியோ எடுத்துள்ளனர். ட்விட்டர் பயனர் பைரன் ஜே.வாக்கர் என்பவர் ஒரு கிளிப் மற்றும் மேகத்தின் பல படங்களை வெளியிட்டு, #UFO லெண்டிகுலர்/ஸ்பையிங் போஹ்ன் மேகங்கள் எனப்படும் அரிய இயற்கை நிகழ்வின் காட்சிகள் என்று எழுதி இருந்தார்.

வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு பார்த்த அதிசயம்

இது மேகம் தானா?

இன்னும் பலர், பல வினோதமான கருத்துக்களுடன், ஏலியனை தொடர்புப் படுத்தி சில பதிவுகளையும் பதிவிட்டிருந்தனர். ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படி எல்லாம் நடப்பதை நாம் பார்த்திருக்கிறோம் தான், ஆனால், இது ஏலியனின் ஹை-டெக் தொழில்நுட்பத்தால் உருவான உருவம் இல்லை என்பதே உண்மை. இது இயற்கையாகவே உருவாகக் கூடிய ஒரு நிகழ்வு தான். ஆனால், இது இப்படித் தாழ்ந்த இடத்தில் தோன்றியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

உண்மையில் இந்த மேகத்தின் உருவத்திற்கு என்ன காரணம் தெரியுமா?
இப்படி UFO வடிவத்தில் மேகம் உருவாகும் நிகழ்வு லெண்டிகுலர் மேகம் (Lenticular Clouds) என்று அறியப்படுகிறது. துருக்கியில் தோன்றிய இந்த லெண்டிகுலர் மேகம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே வானில் நிலைத்து இருந்திருக்கிறது. அதன் பிறகு அது தடயமே இல்லாமல் சில நொடியில் காணாமல் போனது. பொதுவாக லெண்டிகுலர் மேகங்கள் சுமார் 2,000 - 5,000 மீட்டர் உயரத்தில் தான் உருவாகின்றன.

துருக்கியில் இந்த மேகம் தோன்ற காரணம் என்ன?

ஆனால், துருக்கியில் எந்த சரியான காரணமும் இல்லாமல் இந்த லெண்டிகுலர் மேகங்கள் வானில் தோன்றி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற ஒரு மேகத்தை நீங்கள் நம்முடைய ஊரில் பார்த்தால், என்னென்ன வினோதமான கருத்துக்களைப் பதிவிடுவீர்கள் என்று கீழே கமெண்ட் செய்யுங்கள். இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து, அவர்களின் விசித்திரமான ஐடியாவையும் கேட்டு ஜாலி பண்ணுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
UFO-Like Cloud In Turkey Went Viral On Internet But It Is a Lenticular Cloud

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X