6000 ரூபாய்க்கு இப்படி ஒரு போனா? இந்த போனை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!

|

Tecno இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ரெடியாகி வருகிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 2023 (Tecno Spark Go 2023) என்ற அறிமுகத்துடன், இந்தியாவில் நிறுவனம் அதன் ஸ்பார்க் தொடர் வரிசையைப் புதுப்பிப்பதாக வதந்தி பரவுகிறது. வரவிருக்கும் டெக்னோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது நுழைவு நிலை விவரக்குறிப்புகளுடன் வரும் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த போனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், ஒரு புதிய கசிவு வரவிருக்கும் டெக்னோ ஸ்பார்க் கோ 2023 இன் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் போனின் தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

6000 ரூபாய்க்கு இப்படி ஒரு போனா? இந்த போனை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!

PassionateGeekz இன் அறிக்கை படி Tecno Spark Go 2023 இன் வடிவமைப்பையும் இந்த பக்கம் வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் Tecno Spark Go 2023 விலை என்ன? இதில் என்னென்ன அம்சங்களை நிறுவனம் வழங்கியுள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

Tecno Spark Go 2023 விரைவில் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போன் இந்தியாவில் ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்துடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 3ஜிபி ரேம் உடன் 32ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெறும் ரூ.6,999 விலைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு சிறப்பு விற்பனை விலை என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், இதில் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இருக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த போன் POCO C50 மற்றும் Redmi A1 போன்றவற்றுக்கு எதிராகப் போட்டியிடும். இது தவிர சமீபத்தில் வெளியான இந்த போனின் பாக்ஸ் விபரங்களையும் டிப்ஸ்டர் லீக் செய்துள்ளார். இதன் படி, இந்த ஸ்மார்ட்போனின் மோனிக்கரை காட்டுகிறது. இது தவிர, போனின் லைவ் படம் மற்றும் போனின் அனைத்து முக்கிய விவரக்குறிப்புகளையும் இந்த லீக் பட்டியலிடுகிறது.

வெளியான லைவ் புகைப்படங்களின் படி, இந்த போன் 16.66 cm டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது தோராயமாக 6.55 இன்ச் அளவு ஆகும். இந்த டிஸ்ப்ளே ஒரு HD+ தெளிவுத்திறனைக் கொண்டிருக்கும் டிஸ்பிளே ஆகும். இதன் மேல் முன் கேமராவிற்கான ஒரு வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் உள்ளே 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டிருக்கும்.

6000 ரூபாய்க்கு இப்படி ஒரு போனா? இந்த போனை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!

இது USB Type-C போர்ட்டையும் கொண்டிருக்கும். இது தவிர, இந்த டிவைஸ் 13MP பிரைமரி கேமராவுடன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்கும், இது VGA சென்சார் அல்லது 2MP டெப்த் சென்சார் உடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் LED பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது AI ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் ஆதரிக்கும்.

இது மூன்று வண்ண விருப்பங்களையும் பின்புற பேனல் வடிவமைப்பையும் காட்டுகிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஒரு தட்டையான பிரேம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எண்ட்லெஸ் பிளாக், யுயுனி ப்ளூ மற்றும் நெபுலா பர்பில் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும். இது டூயல் கேமரா அமைப்பு மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் பின்புறத்தில் ஒரு சதுர கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது.

இந்த போனின் முன்பக்கத்தில் 5MP முன் கேமரா உள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது. இது MediaTek Helio A22 சிப்செட் உடன் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆஃப்லைன் சந்தைகளைத் தவிர, அமேசான் வழியாக இந்தியாவில் வாங்குவதற்கும் இந்த போன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 6000 ரூபாய் விலை பிரிவில் அட்டகாசமான அம்சத்துடன், சூப்பர் கூல் டிஸைனுடன் வரவிருக்கும் இந்த போனை கவனிக்க மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
Tecno Spark Go 2023 Price and Specification Details Revealed in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X