எப்புட்றா? உங்கள் மொபைல் லோகோவில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்! ஆப்பிள் டூ ஒன்பிளஸ்!!

|

ஒரு கம்பெனிக்கு பெயரும் வாடிக்கையாளர்களும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அதன் LOGO என்பது. ஒரு கம்பெனியின் பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதன் லோகோவை வைத்து ஏறத்தாழ கணித்துவிடலாம் அது ஒரிஜனலா இல்லையா என்று. ஒவ்வொரு லோகோவிலும் பல்வேறு ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது.

LOGO என்பது மிக பிரதானம்

LOGO என்பது மிக பிரதானம்

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் டிவி, ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைக் கடையில் பாக்கெட் ஆக வாங்கும் பொருட்கள், பால் பாக்கெட் என அனைத்திலும் லோகோக்கள் இடம்பெற்றிருக்கும். அதாவது அதன் முத்திரை பொருத்தப்பட்டிருக்கும்.

இப்படி நாம் அன்றாடம் பல லோகோக்களை பார்த்து வருகிறோம். இதில் சிலவை நம் நியாபகத்தில் இருக்கும், எங்காவது பார்த்தால் கூட இது அந்த கம்பெனியை குறிக்கிறது என நியாபகம் வந்துவிடும். பலவைகளை நாம் நியாபகம் வைத்துக் கொள்வது இல்லை.

சின்னத்தை வைத்தே கணித்து விடலாம் அது என்ன கட்சி என்று. அந்தளவிற்கு கட்சிகள் தங்களது சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேபோல் தான் ஒரு கம்பெனிக்கு LOGO (முத்திரை) என்பது.

பார்த்து பார்த்து உருவாக்கப்படும் லோகோக்கள்

பார்த்து பார்த்து உருவாக்கப்படும் லோகோக்கள்

லோகோவை நிறுவனங்கள் அவ்வளவு சாதாரணமாக உருவாக்கி விட மாட்டார்கள். ஒரு நிறுவனம் தங்களுக்கான லோகோவை உருவாக்குவதற்கு பெரிதளவு மெனக்கிடுவார்கள். அதில் பல ரகசியத் தகவலை உட்பொதிக்க முயற்சிப்பார்கள்.

தங்களது போட்டி நிறுவனத்துக்கு லோகோ மூலமாகவே பதிலடி கொடுக்க நினைப்பார்கள். அதே சமயத்தில் தங்களது லோகோவை வாடிக்கையாளர்கள் மனதில் நிரந்தரமாக நியாபகம் வைத்துக் கொள்ளும்படி உருவாக்குவார்கள்.

ஸ்மார்ட்போன் லோகோக்களில் இருக்கும் ரகசியம்

ஸ்மார்ட்போன் லோகோக்களில் இருக்கும் ரகசியம்

இன்றை தினங்களில் பெரும்பாலானோர் கைகளில் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பிராண்டும் தனித்தனி லோகோக்களை கொண்டிருக்கிறது.

அதற்கான அர்த்தங்களையும் அதற்குள் இருக்கும் ரகசியங்களையும் அறிந்துக் கொள்வது உங்களை கண்டிப்பாக வியப்படைய வைக்கும்.

ஸ்மார்ட்போன் லோகோக்கள் மற்றும் அதற்குள் இருக்கும் ரகசியங்களை பார்க்கலாம்.

LG

LG

அமெரிக்க சந்தையை 20% LG கைப்பற்றி இருக்கிறது. உலகளவில் டாப் 10 இடத்தில் எல்ஜி இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு லாக்-ஹூய் என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் சிறந்த விளங்கி இருக்கிறது. காலப் போக்கில் இதன் பெயர் LG என மாற்றப்பட்டிருக்கிறது. LG என்பதன் விரிவாக்கம் "Life is Good" என்பதாகும்.

இந்த லோகோவில் உள்ள ரகசியம் என்னவென்றால், ஒரு சிவப்பு நிற வட்டத்தில் LG என்ற எழுத்து இடம்பெற்றிருக்கும். இன்னும் உற்று நோக்கினால் தெரியும் இது ஒரு மனிதர் முகத்தை குறிக்கிறது என்று. மேல் வலது புறத்தில் உள்ள புள்ளி கண் போன்றும், L என்ற எழுத்து மூக்கு போன்றும் இருக்கும். பின் G என்ற எழுத்தை நோக்கினால் இது ஒரு மனித முகத்தை பிரதபலிப்பது போல் இருக்கும்.

Nokia

Nokia

ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நிறுவனம் என்றே இதை குறிப்பிடலாம். பொறியாளர் ஃப்ரெட்ரிக் ஐடெஸ்டாம் என்பவரால் 1865 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் 1 சதவீதம் மட்டுமே சந்தை மதிப்பை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் Connecting People என்ற ஸ்லோகனை அறிவித்தது. தற்போது வரை நிறுவனம் இதே குறியீட்டில் Nokia என்ற பெயர் லோகோ உடன் இயங்கி வருகிறது.

Lenovo

Lenovo

உலக சந்தையில் டாப்-10 இடத்தை பிடித்திருக்கும் மற்றொரு நிறுவனம் லெனோவா. இந்த நிறுவனமானது Liu Chuanzhi மற்றும் அவரது குழுவினரால் 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த கம்பெனியின் லோகோ கிட்டத்தட்ட 12 முறை மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது உச்சரிப்பதற்கு ஏதுவாக கம்பெனியின் பெயரே லோகோவாக வைக்கப்பட்டிருக்கிறது.

OnePlus

OnePlus

சமீபகாலமாக அசுர வளர்ச்சி அடைந்து வரும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் நிறுவனம் என்றே OnePlusஐ குறிப்பிடலாம். OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் 48% பங்கைக் கொண்டிருக்கிறது. 2013 இல் தொடங்கப்பட்ட ஒன்பிளஸ் ஒப்போவின் துணை நிறுவனமாகும்.

இதன் லோகோ 1+ ஆகும். ஒப்போவின் 1+ எனவும் சிலர் இதை தெரிவிக்கின்றனர். ப்ரீமியம் அம்சங்களுடன் மிட் ரேன்ஜ் விலையில் கேட்ஜெட்களை வழங்குவதால் பிறரை விட 1+ என குறிப்பிடும் வகையில் இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Xiaomi

Xiaomi

Xiaomi, 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீன நிறுவனமாகும். உலக சந்தையில் 6-வது இடத்தில் இந்த நிறுவனம் இருக்கிறது. குறிப்பாக இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் சந்தையில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

இதன் லோகோ mi ஆகும். இந்த வார்த்தை Mobile Internet என்ற சொல்லை குறிக்கிறது. அதேநேரத்தில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த mi என்பது Mission Impossible என்ற சொல்லை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo

Vivo

இதுவும் ஒரு சீன நிறுவனமாகும். உலக சந்தையில் 5-வது இடத்தில் Vivo இருக்கிறது. கம்பெனியின் பெயரே லோகோவாக இருக்கிறது. Vivo என்ற சொல் நீல நிற வண்ணத்தில் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும். இது நிறுவனத்தின் தத்துவத்தை பிரதிபலிக்கிறது. ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக Vivo மாறும் எனவும் ஸ்டைலான சாதனங்களை உருவாக்கும் என்பதையும் இந்த லோகோ குறிப்பிடுகிறது.

OPPO

OPPO

2001 இல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. உலக சந்தை பங்கின் அடிப்படையில் இந்த நிறுவனம் 4-வது இடத்தில் இருக்கிறது. OPPO என்ற பெயரே லோகோவாக இருக்கிறது. OPPO என்ற சொல்லில் உள்ள நான்கு எழுத்துகளும் வட்ட வடிவத்தில் தோன்றும். இந்த சுற்று வட்டங்கள் மொபைல்களின் கேமராக்களை குறிக்கிறது. அதன்படி OPPO போன்கள் பிரத்யேகமாக செல்பி கேமராக்களுக்கு உகந்ததாக இருக்கும்.

Apple

Apple

அடுத்த இரண்டு நிறுவனங்களும் உலகளவில் புகழ் பெற்ற நிறுவனங்கள் தான். தற்போது Apple நிறுவனத்தின் லோகோ குறித்த விவரத்தை தான் பார்க்கப்போகிறோம். தற்போதுள்ள லோகோ ஆனது பல மாற்றங்களுக்கு பிறகு 1998 இல் முழுமை பெற்றது.

ஆப்பிள் நிறுவனத்துக்கான லோகோ உருவாக்கும் பணி ஆனது முதலில் ரொனால்ட் வெய்ன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் லோகோ தயாரிக்கும் பணி என் தலையில் விழுந்தது என எண்ணி ஐசக் நியூட்டன் ஆப்பிள் மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்ற போது அவர் தலையில் ஆப்பிள் விழுந்த நிகழ்வை ஒப்பிட்டு நியூட்டனின் புகைப்படத்தை லோகோவாக வைக்க ரொனால்ட் வெய்ன் முயன்றிருக்கிறார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு இந்த லோகோ அவ்வளவு பிடித்தமாக இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றொரு கிராஃபிக் டிசைனர் ஆன ராப் ஜானோஃப் என்பவரிடம் புதிய லோகோவை உருவாக்கும் பணியை கொடுத்திருக்கிறார். இவர் தான் ஆப்பிள் லோகோவில் ஒரு பைட்(கடி) உடன் வடிவமைத்துள்ளார்.

இந்த ஆப்பிள் லோகோவிற்கு ரெயின்போ வண்ணம் பூசி இருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆரம்பத்தில் ஆப்பிள் லோகோ ரெயின்போ வண்ணத்தில் தான் இருந்திருக்கிறது. காலப்போக்கில் வண்ணம் மாற்றப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் லோகோ

ஆப்பிள் லோகோவில் இந்த கடிக்கப்பட்ட பகுதிக்கு பின்னால் பல விளக்கங்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த லோகோவை மக்கள் தக்காளிப் பழத்துடன் ஒப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த லோகோ ஆப்பிள் பழத்தை சுவை நிரம்பக் கடித்தது போல் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

Samsung

Samsung

மொபைல் சந்தையை ஆளும் நிறுவனம் என்றே Samsung நிறுவனத்தை குறிப்பிடலாம். Samsung லோகோ குறித்து பார்க்கையில், இதன் பெயருடன் நீல நிறத்தில் ஒரு நீள்வட்டம் இடம்பெற்றிருக்கும். இந்த நீள்வட்டமானது பிரபஞ்சத்தையும் நிறுவனத்தின் நிரந்தர வெற்றியைக் குறிப்பதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவில் உள்ள அந்த கடித்த பகுதியின் துண்டு தான் இந்த சாம்சங் லோகோ என நகைச்சுவையாக கூறப்படுவதும் உண்டு.

Best Mobiles in India

English summary
Secrets Hidden Behind the Logo's of Mobile Phone Companies: Every Mobile Users Should Know This

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X