ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.!

|

அடேங்கப்பா.! இது புதுசால இருக்கு.! "ரோபாட்களுக்கு (Robots) உணர்ச்சி இல்லை என்று யார் சொன்னது சனா?" என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எந்திரன் படத்தில் கேட்ட கேள்வியை போல, இப்பொழுது விஞ்ஞானிகள் உருவாக்கும் புது வகை ரோபோட்களும் கேட்கப் போகின்றன.! எதிர்காலத்தில் இதே கேள்வியை, விரைவில் சில ரோபோட்களும் கேட்க போகின்றன என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் - இந்த கேள்வியை சனாவிடம் கேட்கப் போவதில்லை, நம்மிடம் கேட்கப் போகின்றன.! ஆம், உணர்ச்சிகளை உணரக்கூடிய ரோபாட்களை விஞ்ஞானிகள் இப்பொழுது உருவாக்கி வருகின்றனர். இஸ்ரேலில் உள்ள டெல் ஆவிவ் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள், உலகத்தில் முதல் முறையாக வாசனைகளை முகர்ந்து பார்த்து உணரக் கூடிய ரோபோட்டை உருவாக்கி உள்ளனர்.

ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்காம்.!

கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறதல்லவா? ஆனால், இது தான் உண்மை.! இவர்கள் உருவாக்கிய உள்ள ரோபோட் வாசனைகளை உணரக் கூடிய திறன் கொண்டவை என்று கூறியுள்ளனர். இந்த ரோபோட்கள் பத்தாயிரம் மடங்கு அதிகமாக வாசனைகளை உணரும் திறன் கொண்டவை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாய்களை விட பல மடங்கு மோப்ப சக்தி இதற்கு உண்டாம்.! விஞ்ஞானிகள் இந்த ரோபோட்டை பயோ-ஹைபிரிட் ரோபோட் என்ற பெயரிட்டுள்ளனர்.

இதற்கான காரணம் என்னவென்றால், இந்த ரோபோட்டின் அடிப்படை - பாலைவனத்தில் இருக்கும் லோக்கஸ்ட் (Locust) வெட்டுக்கிளியின் ஆண்டனாவின் உதவியுடன், எலக்ட்ரிக் நோடில் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன. இதன் வழி இவை இயக்கப்படும் காரணத்தினால் தான், இதை பயோ-ஹைபிரிட் ரோபோட் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

இந்த ரோபோட்டின் எலக்ட்ரிகல் சிஸ்டம், வாசனைகளை ஆண்டனா மூலம் நுகர்ந்து அது என்ன பொருள் என்பதை அடையாளம் காண்கிறது. இதற்காக, இந்த ரோபாட்டிற்கு பல விதமான வாசனைகள் பற்றிய தகவல்கள் புகுத்தப்பட்டுள்ளன. உண்மையில், இந்த ரோபோட்கள் எலக்ட்ரிக் சிக்னலில் காண்பிக்கப்படும் சிக்னல் அவுட்புட்டை வைத்து, அது என்ன பொருள் என்பதை கண்டுபிடிக்கின்றன.

இந்த ரோபோட் இப்பொழுது எட்டு விதமான வாசனைகளை மிகவும் துல்லியமாக அடையாளம் காண்கின்றதாம். இந்த வாசனை பொருள்களில் லெமன், ஜெரானியம், மர்சிப்பான் போன்ற பொருட்களின் வாசனையும் அடக்கப்பட்டுள்ளது.

ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்காம்.!

அதேபோல், இந்த ரோபோட் முன் இரண்டு விதமான வாசனைகளை விஞ்ஞானிகள் கலந்த போதிலும், இது அவற்றை தனித்தனியாக அடையாளம் காண்கிறதாம்.

வாசனை மூலம் பொருட்களை அடையாளம் காணும் இந்த ரோபோர்ட்டின் முயற்சி உண்மையில் நம்மை வியக்க வைக்கிறது. இந்த ரோபோட்டை விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் நாய்களுக்கு பதிலாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்களில் வெடிகுண்டு மற்றும் போதை பொருட்களை கண்டறியப் பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளனர். 'ரோபோட்களால் மனிதனின் வேலை பறிபோனதை தொடர்ந்து இனி நாய்களின் வேலையும் பறிபோகும் நிலை உருவாவது' தெளிவாகிறது.

சில விலங்குகள், அதனுடைய மோப்ப சக்தியை வைத்து எதிரிகளை அடையாளம் காண்கின்றன; சில நேரங்களில் நோயாளிகளையும் அடையாளம் காண்கின்றன; அதேபோல், ஆபத்தையும் அடையாளம் காண்கின்றன. இந்த ஐடியாவை அடிப்படையாக வைத்து தான் விஞ்ஞானிகளின் இந்த ரோபோட்டிற்கு நுகரும் சக்தியை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் இனிவரும் காலத்தில், ரோபோட்களுக்கு வாசனை திறன் மட்டும் இன்றி உணரும் திறன், டச் திறன், சைட் திறன் போன்ற பல உணர்ச்சி திறன்களை விஞ்ஞானிகள் கற்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இனி எதிர்காலத்தில் வரும் ரோபாட்களுக்கும் மனிதர்கள் போன்ற உணர்ச்சி இருக்கும் என்றால் மனிதனுடன் ரோபோட் எப்படி பழகும் என்பதை யோசித்துப் பாருங்கள்? அல்லது ரோபோட்கள் மனிதனுடன் எப்படி பழகும் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.!

Best Mobiles in India

English summary
Robot Gets The Sense Of Smell Using Locust Antennae Future Robots May Get Sense Of Touch and Feel

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X