Just In
- 11 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 13 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 13 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 14 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மொபைல் பேசி வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பகீர் ரிப்போர்ட்.!
வாகனங்களின் பெருக்கம், நெரிசல், கவனக்குறைவு, அவசரமான வாழ்க்கைமுறை மாதிரியான பல காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அப்படி விபத்துகளுக்கு இருக்கும் பல காரணிகளில் முக்கியமான ஒன்று செல்போன் (cellphone) பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டுவது என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.
என்ன தான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும், காவல்துறையும் பல நடவடிக்கைகள் எடுத்தாலும், மக்களின் போதுமான அலட்சியத்தால் எதுவும் இந்தியாவில் பலன் தரவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் இந்தியச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் "இந்தியாவில் நடந்த சாலை விபத்துகள் 2021-2022" என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கு.

இந்த அறிக்கையில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்பட்ட கவனச்சிதறல் காரணமாக நடந்த விபத்துகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மொபைல் போன் (mobile phone) பயன்படுத்தியதால் மட்டுமே 1997 சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும் - அந்த விபத்துகளில் (accidents) 1040 உயிரிழப்புகள் நடந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டிக் கூறப்பட்டுள்ளது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சாலை விபத்துக்கள் நிகழ்வதைக் குறைக்கவும் செல்போன் பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுபவருக்கு 2020 வரை ரூ. 1000 ஆக இருந்த அபராத தொகை அதன் பின்னர் ரூ. 5000 ஆக ஐந்து மடங்கு அதிகரித்துத் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் விபத்துகள் குறையவில்லை என்பதே வேதனை.
மொபைல் போன்களைப் பயன்படுத்திக்கொண்டு வாகனங்கள் ஓட்டுவதைக் குற்றமாக அறிவித்து அபராதம் விதித்தாலும் மக்கள் கவனமாக இருப்பது போலத் தெரியவில்லை. இன்னும் பலர், வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு போன் பேசும் பழக்கத்திற்கு மாறாமல், வாகனம் ஓட்டிக்கொண்டே ஒற்றை கை அல்லது சாய்ந்த கழுத்துடன் வாகனங்களைக் கவனம் இன்றி ஓட்டி வருகின்றனர்.
இதனால், அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து தவிர, அவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் ஆபத்தே அதிகமாக இருக்கிறது. இன்னும் கூகிள் மேப்ஸ் (Google Maps) பார்த்து வழி பிடித்து செல்கிறேன் என்று சில நேரங்களில் கவனக்குறைவால் விபத்தைச் சந்தித்துள்ளனர். வாகனம் ஓட்டுபவரின் கவனத்தைச் சிதறடிக்காமல் வழிகளைக் கண்டுபிடித்துச் செல்வதற்காக மட்டும் வாகனம் ஓட்டும்போது மொபைல் போனை பயன்படுத்தலாம் என்று சலுகை கொடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது அதுவே வினையாகிவிட்டது போல் தெரிகிறது. செல்போன் பேசுவது, கவனக்குறைவு என்று பல காரணங்களால் இந்தியாவில் மொத்தம் 4,12,432 சாலை விபத்துக்களும் அதில் சுமார் 1,53,972 உயிரிழப்புகளும் நிகழ்ந்திருக்கிறது என்று கணக்குகள் காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த விபத்துகளினால் 3,84,448 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 4 லட்சம் விபத்துகளில் 555 சிக்னலில் சிவப்பு விளக்கை மதிக்காமல் சென்றதால் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், 222 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சாலைகளில் இருக்கும் பள்ளங்களின் காரணமாக ஏற்பட்ட விபத்துகள் 3625 ஆகும். அதில் 1481 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களை கவனிக்காமல் சென்றது மக்களின் குற்றம் என்றாலும், அந்த சாலைகளை சரியாகப் பராமரிக்காமல் தவறவிட்டது அரசு அதிகாரிகளின் குற்றமாகவே இருக்கிறது.
சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணிகள் இருப்பதால் அவற்றைத் தவிர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுக்குமே சம பொறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த 2023 ஆம் ஆண்டில் நீங்கள் என்ன புதிய தீர்மானத்தை (New year resolutions) எடுத்திருந்தாலும் சரி, இனி இந்த ஆண்டு முதல் ட்ராபிக் ரூல்ஸ் (Traffic rules) மற்றும் சட்டங்களைச் (Traffic rules and laws) சரியாக கடைப்பிடிப்பேன் என்று ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.
இது உங்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உயிரையும் காக்கும். இனி உங்கள் முன் யாராவது வாகனம் ஒட்டிக்கொண்டு ஸ்மார்ட்போனில் (smartphone) பேசினால், அவர்களை தடுத்து, திட்டி கூட அவர்கள் செய்வது தவறான காரியம் என்பதைப் புரிய வையுங்கள். இதன் மூலம் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கே பெரும் உதவியைச் செய்த சூப்பர் ஹீரோவாக நீங்கள் வளம் வரலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470