இது ஐடியா அதிரடி-ஏப்ரல் 1 முதல் இலவச இன்கம்மிங் மற்றும் நேஷனல் ரோமிங்.!

முன்னணி நெட்ஒர்க் நிறுவனங்களுள் ஒன்றான ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக தனது சேவைகளுக்கான கட்டணங்களை குறைத்துள்ளது.

By Ilamparidi
|

நெட்ஒர்க் துறையில் எப்போது ஜியோ தனது அறிமுகத்தினை நிகழ்த்தியதோ அன்று முதல் பிற நெட்ஒர்க் நிறுவனங்களுக்கு பெருத்த சவாலாக உள்ளதென்றால் அது மிகையில்லை.தனது அதிரடியான இலவச சலுகைகள் வழியாக மிகக் குறைந்த காலத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைச் சென்றடைந்ததோடு மட்டுமன்றி,பிற நெட்ஒர்க் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை தனது இலவச சலுகைகள் வழியாக தன் பக்கம் கவர்ந்து அதிகப்படியான போட்டியினை உருவாக்கியது.

ஜியோவின் இத்தகைய தொடர்ச்சியான இலவச சலுகைகள் அறிவிப்பினுக்கு பிறகு ஏனைய நெட்ஒர்க் நிறுவனங்கள் கண் விழித்துக்கொண்டன.ஆகையால்,தமது சேவைகளுக்கான கட்டணங்கள் அனைத்தும் குறைக்கத் துவங்கி எப்படியேனும் தமது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள முயலுகின்றன.

அந்தவகையில் தற்போது,நாட்டின் மூன்றாவது பெரிய நெட்ஒர்க் சேவையினை வழங்கிடக்கூடிய ஐடியா நிறுவனமானது தனது பயனாளர்களுக்காக இலவச இன்கம்மிங் அழைப்புகள்,நேஷனல் ரோமிங் உள்ளிட்டவற்றை இலவசமாக பெறமுடியுமென அறிவித்ததோடு மேலும் தனது பல சேவைகளுக்கான கட்டணங்களைக் குறைத்துள்ளது.அதுகுறித்த மேலதிக தகவல்கள் கீழே..

ஜியோ:

ஜியோ:

தொலைத்தொடர்புத் துறையில் இல்லாத வகையில்,வேறு எந்த நெட்ஒர்க் நிறுவனமும் செய்திடாத துணியாததினை ஜியோ தமது அறிமுகத்தின் போதே செய்துகாட்டி பெரும்பான்மையான வாடிக்கையாளர்களைத் தம் பக்கம் இழுத்தது.தமது எல்லா சேவைகளையும் இலவசமாக வழங்கத்துவங்கியதே வேறு இந்நிறுவனமும் செய்திடத் துணியாத பெருமுயற்சியாகும்.

விலைகுறைப்பினை நிகழ்த்திட வேண்டிய நிர்பந்தம்:

விலைகுறைப்பினை நிகழ்த்திட வேண்டிய நிர்பந்தம்:

அது வரையில் நெட்ஒர்க் நிறுவனங்கள் நிர்ணயளித்த விலைகளிலேயே தமக்கான சேவைகளினை பெற்று வந்த வாடிக்கையாளர்களின் பெருமகிழ்ச்சிக்கு வித்திடும் வகையில் தமது அறிமுகத்தின் போதே தமது எல்லா சேவைகளும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அதிரடி காட்டி பிற நெட்ஒர்க் நிறுவனங்களை அலற வைத்தது ஜியோ.அறிமுக சலுகையை புத்தாண்டு சலுகை என நீட்டித்தது போக தற்போது ஜியோ ப்ரைம் உறுப்பினரானால் இந்த சலுகைகளை தொடர்ந்து பெற முடியுமென தெரிவித்துள்ளதால்,ஏனைய நெட்ஒர்க் நிறுவனர் தமது சேவைக்களுக்கான கட்டணங்களை குறைத்தே ஆக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

விலை குறைப்பு:

விலை குறைப்பு:

அதன் விளைவாக தற்போது ஜியோ தனது சேவைகளுக்கான கட்டணங்களை பெருமளவில் குறைத்துள்ளது.இலவச இன்கம்மிங்,நேஷனல் ரோமிங் உள்ளிட்டவற்றோடு மட்டுமன்றி,தனது பிற அழைப்புகள் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களையும் பெருமளவில் குறைத்துள்ளது.

டேட்டா மற்றும் நேஷனல் ரோமிங்:

டேட்டா மற்றும் நேஷனல் ரோமிங்:

ஐடியா நிறுவனம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் டேட்டா மற்றும் நேஷனல் ரோமிங் உள்ளிட்டவற்றிற்கான கட்டணங்களை குறைத்துள்ளது.தற்போது இன்கம்மிங் ரோமிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.0.45,அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ 0.85 மற்றும் எஸ்டிடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு ரூ1.15 யும் கட்டணங்களாக வசூலிக்கப்படுகிறது.ஏப்ரல் 1 முதல் இலவச இன்கம்மிங் அழைப்புகளையும்,மேலும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் இதர சேவைகளையும் பெற இயலுமென ஐடியா நிறுவனத்தின் தலைமை விற்பனை அலுவலர் ஷாஷி சங்கர் தெரிவித்துள்ளார்.

இன்டர்நேஷனல் ரோமிங்:

இன்டர்நேஷனல் ரோமிங்:

பல அம்சங்களை உள்ளடக்கிய இன்டர்நேஷனல் ரோமிக் வசதிகளை ஐடியா வழங்கிக் உள்ளது.400 அவுட்கோயிங் நிமிடங்கள்,100 மெசேஜ்கள்,மற்றும் பல வித டேட்டா பேக்குகள்,இலவச இன்கம்மிங் அழைப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய பேக்குகளை வழங்கிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.82/- மற்றும் ரூ.83/-க்கு எல்லாமே கிடைக்கும் - ஏர்செல் அதிரடி.!

Best Mobiles in India

Read more about:
English summary
National roaming: Idea to offer free incoming.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X