நியூ-இயர் கிஃப்ட் பார்சலில் 4 மனித மண்டை ஓடுகள்.! எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது தெரியுமா?

|

உங்களுக்கு மிகவும் பிடித்தமானவருக்கு, இந்த புத்தாண்டில் ஒரு பெஸ்ட் கிஃப்ட்டை (New Year Best Gifts) வழங்க வேண்டும் என்றால் - நீங்கள் என்ன கிஃப்ட்டை வழங்குவீர்கள்? பெரும்பாலானோர், இந்த புத்தாண்டை இனிமையாகத் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில், சாக்லேட் (chocolates) அல்லது ரெட் ஒயின் (red wine) அல்லது இன்னும் மிக சுவாரசியமான பொருட்களை அல்லது அந்த நபருக்கு பிடித்தமான பொருட்களைத் தான் கிஃப்டாக (gift) வழங்குவார்கள்.

நியூ-இயர் கிஃப்ட் பார்சலில் 4 மனித மண்டை ஓடுகள்.! அதிர்ந்த அதிகாரிகள்!

ஆனால், மெக்ஸிகோ ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் ஆபிஸர்களால் (Mexico airport customs officer) கைப்பற்றப்பட்ட ஒரு கிஃப்ட் பேக்கேஜ்ஜில் என்ன பொருள் இருந்தது தெரியுமா? இதுவரை, கஸ்டம்ஸ் அதிகாரிகளால் விமான நிலையங்களில் ஏகப்பட்ட பல விசித்திரமான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் போதை மாத்திரைகள் (drugs), மிருகங்கள் (animals), முதலைகள் (crocodiles), ஆமைகள் (tortoise), தங்க கட்டிகள் (gold bars) என்று பலவிதமான பொருட்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.

என் சில நேரங்களில், பிணங்கள் (dead bodies) கூட கைப்பற்றப்பட்டுள்ளனவாம். ஆனால், இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக ஒரு கிஃப்ட் பேக்கேஜிற்குள் (new year gift package) நான்கு மனித மண்டை ஓடுகள் (human skulls) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆம், உண்மையான மனிதர்களுடைய 4 மண்டை ஓடுகள் ஒரு பெரிய அட்டை பெட்டிக்குள் (cardboard parcel box) அடைக்கப்பட்டு கிஃப்ட் பேக் செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மெக்சிகோ விமான நிலையத்தில் உள்ள கஸ்டம் ஆபிஸர்கள், ஒவ்வொரு பேக்கேஜ் ஆக எக்ஸ்-ரே கருவி (X-Ray device) மூலம் எக்ஸ்ரே செய்த போது இந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது. முதலில் அதிகாரிகள் எக்ஸ்-ரே ஸ்கேன் (X-Ray scan) செய்த போது சில வினோதமான அடையாளம் தெரியாத ஒரு பொருளின் பிம்பங்களை எக்ஸ்-ரே மெஷின் டிஸ்ப்ளேவில் பார்த்துள்ளனர். அவர்கள் கண்ட காட்சி மிகவும் வினோதமாக இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது.

அதனால், கஸ்டம் ஆபிஸர்கள் அந்த பேக்கேஜை திறந்து பார்த்தபோது - அதற்குள் நான்கு உருளைப் பொருட்கள் பிளாஸ்டிக் (plastic) மற்றும் அலுமினியம் காகிதத்தால் (aluminium paper) முழுமையாகச் சுற்றி மூடப்பட்டுள்ளதைப் பார்த்துள்ளனர். உருளை பொருளில் சுற்றி இருந்த அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பிரித்தபோது அதற்குள் நான்கு மனித மண்டை ஓடுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர்.

நியூ-இயர் கிஃப்ட் பார்சலில் 4 மனித மண்டை ஓடுகள்.! அதிர்ந்த அதிகாரிகள்!

இதுவரை விமான நிலையத்தில் இப்படி ஒரு பிடிப்பு பிடிபட்டதில்லை என்றும்; இந்த பார்ஸல் எங்கிருந்து வந்தது என்றும் அதிகாரிகள் சோதனை செய்யத் தொடங்கினர். அதேபோல் இந்த பார்சல் எங்கே அனுப்பப்படுகிறது என்பதையும் சோதனை செய்தனர். இதற்காக, பெறுநர் (receiver) மற்றும் அனுப்புநர் (sender) விபரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

தென் கரோலினா மாகாணத்தில் உள்ள மிக்கோகான் மாகாணத்தில் உள்ள தெற்கு நகரமான அபாஸ்டிங்கனில் இருந்து இந்த பார்சல் அமெரிக்காவில் உள்ள ஒரு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர். பெறுநர் பெயரை அதிகாரிகள் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்-ரே மெஷின் (X-Ray machine), அட்டைப் பெட்டிக்குள் விசித்திரமான வடிவங்களைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த மனித மண்டை ஓடுகள் யாருடையது? இது எப்படி பார்சல் அனுப்பப்பட்டது? என்பது போன்ற பல கோணத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது கொலை செய்யப்பட்டுப் பழிவாங்கும் நோக்கத்தில் ஏதேனும் சைக்கோ கொலைகாரனால் பார்சல் அனுப்பப்பட்டதா? அல்லது மருத்துவ ஆராய்ச்சிக்காக பார்சல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏதுவாக இருப்பினும், மெக்சிகன் பார்சல் விதிகளை இந்த பார்சல் மீறி உள்ளதால் அனுப்புநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெக்சிகோ விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் மெக்சிகோ விமான நிலையத்தில் பெரும்பாலும் போதைப் பொருட்கள் மட்டுமே சிக்கி வந்த நிலையில் முதன்முறையாக மனித மண்டை ஓடுகள் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Mexico Airport X-Ray Machine Detects 4 Human Skulls In a New Year Gift Parcel

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X