இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

|

நாம் எதிர்பார்ப்பதை விடத் தொழில்நுட்ப வளர்ச்சி மிக வேகமாக அனைத்து துறையிலும் முன்னேறி வளர்ந்து வருகிறது. இந்த அசாதாரண வளர்ச்சி சிலரைக் கவலையடைய வைத்துள்ளது. இதனால், சிலர் உண்மையிலேயே தொழில்நுட்ப வளர்ச்சி சரியான திசையில் தான் செல்கிறதா என்ற கேள்வியை அண்மையில் எழுப்பினார்கள். இந்த கேள்வியை மதித்து, சில ஆய்வுகளும் நடத்தப்பட்டது. இந்த ஆய்விற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், என்ன தெரிவிக்கப்பட்டிருந்தது என்று தெரியுமா?

தொழில்நுட்ப வளர்ச்சி சரியான திசையில் செல்கிறதா?

தொழில்நுட்ப வளர்ச்சி சரியான திசையில் செல்கிறதா?

'மனிதக்குலத்திற்குத் தொழில்நுட்பத்தின் மூலம் சில அச்சுறுத்தல்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த தொழில்நுட்ப முன்னேற்றம் நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் சரியான திசையில் தான் செல்கிறது' என்று அதில் குறிப்பிடபட்டறிந்தது. உண்மையில், மனித குளத்தின் வாழ்க்கைத் தரத்தைத் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்படுத்தி வருகிறது. இதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். அந்த வகையில், மனித வாழ்க்கை தரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடிய ஒரு புதிய கண்டுபிடிப்பை கவாஸாகி (Kawasaki) நிறுவனம் தற்போது உருவாக்கியுள்ளது.

நடனமாடி 'பார்ட்டி' செய்த ரோபோக்களின் வீடியோ

பாஸ்டன் டைனமிக்ஸின் ரோபோ நாய், ஸ்பாட் போன்ற ரோபோக்கள் அண்மையில் நடனமாடி ஒட்டுமொத்த இணையத்தையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வை யாரும் மறந்திருக்க முடியாது. ஒருவேளை, ரோபோக்கள் அற்புதமான நடனமாடி பார்ட்டி செய்த வீடியோவை நீங்கள் பார்க்கத் தவறியிருந்தால், இந்த வீடியோவை பார்வையிடுங்கள். ஆனால், நாம் இந்த பதிவில் பார்க்க வந்தது நடனம் ஆடும் ரோபோக்களை பற்றியதல்ல, ஆடாக நடமாடும், வாகனமாகச் செயல்படும் ஒரு ஆடு ரோபோவை பற்றித் தான் என்பதை நினைவுபடுத்துகிறோம்.

Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்

Kawasaki அறிமுகம் செய்த ரோபோ ஆடு

Kawasaki அறிமுகம் செய்த ரோபோ ஆடு

வாகன உற்பத்தியாளர் நிறுவனமான கவாஸாகி (Kawasaki) நிறுவனம், நான்கு கால்களில் திறமையாக வடிவ நடைப் பயணம் செய்யும் ரோபோ ஆட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச ரோபோ கண்காட்சியில் வெளியிடப்பட்ட கவாசாகியின் பெக்ஸ் என்ற ரோபோ தான் இந்த ஆடு ரோபோ. ஆப்பிரிக்கா மற்றும் யூரேசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஐபெக்ஸ் என்ற ஆடு இனத்தின் பெயரைத் தொடர்ந்து, இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, நிறுவனம் ரோபோ பேக்ஸ் (Bex) என்று அழைக்கிறது.

Bex ரோபோ ஆடு இதையெல்லாம் செய்யுமா?

Bex ரோபோ ஆடு இதையெல்லாம் செய்யுமா?

இந்த Bex ரோபோ, ஒரு அசல் ஆடு போல சுற்றி நடப்பதைத் தவிர, பெக்ஸ் ஒரு மனிதனைத் தன் முதுகில் சுமந்து செல்லக் கூடிய படி வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய, நாம் ஒரு குதிரையில் ஏறி சவாரி செய்வது போன்ற அனுபவத்தை இந்த ரோபோ வழங்குகிறது. கவாஸாகி நிறுவனம், இந்த ரோபோ பெக்ஸின் டெமோ வீடியோவை இணையத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், இந்த ரோபோட்டிக் ஆட்டுக்கு நீண்ட கழுத்து மற்றும் கொம்புகள் இருப்பதும், இது நகரும் போது ஒளிரும் LED விளக்குகளால் ஜொலிப்பதையும் வீடியோ காட்டுகிறது.

செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..

இரண்டு நிலையில் பயணிக்கும் ரோபோவா இந்த ரோபோ ஆடு?

இரண்டு நிலையில் பயணிக்கும் ரோபோவா இந்த ரோபோ ஆடு?

இது சைடு-பார் மற்றும் நீண்ட கால்களைக் கொண்டுள்ளது. அவை தாழ்த்தப்பட்டால் சக்கரங்கள் முளைக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட்டிக் பேக்ஸ் ஆடு, சுமார் 100 கிலோ எடை வரை சுமந்து செல்லக்கூடியது. குறிப்பிட்ட இரண்டு நிலைகளிலும், இந்த ஆட்டை சவாரிக்கு அழைத்துச் செல்லலாம். அதாவது, கால்களை பயன்படுத்தி நடைப் பயணமாகப் பயணிக்கலாம், அல்லது சக்கரங்களைப் பயன்படுத்தி இதை ஒரு வாகனம் போலவும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறது கவாஸாகி நிறுவனம்.

கவாஸாகி நிறுவனத்திற்கு இந்த ஐடியா எப்படி தோன்றியது?

கவாஸாகி நிறுவனத்திற்கு இந்த ஐடியா எப்படி தோன்றியது?

கவாஸாகி 2015 ஆம் ஆண்டு வலுவான மனித வடிவிலான இயங்குதளத்தை (RHP) உருவாக்கத் தொடங்கியது. மனித உருவம் கொண்ட ரோபோக்கள் மற்றும் சக்கர ரோபோக்களுக்கு இடையில், ஒரு வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்தோம். அதனால் தான் பெக்ஸ் என்ற நான்கு கால் கொண்ட நடை ரோபோவை உருவாக்கத் தொடங்கினோம். மனித வடிவிலான ரோபோக்களின் வளர்ச்சியில் பயிரிடப்பட்ட நடைப்பயிற்சி தொழில்நுட்பம் நிச்சயமாக quadruped வாக்கிங் ரோபோக்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நம்பியதன் விளைவே இந்த பெக்ஸ்." என்று RHP திட்டத்தின் தலைவர் மசாயுகி சௌபே கூறியுள்ளார்.

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?

பெக்ஸ் ரோபோ பற்றிய சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா?

பெக்ஸின் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அதன் மேல் உடல் நமது பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோ ஆடு பயன்படுத்தப்படும் பயன்பாட்டிற்கு ஏற்ப அதை நீங்கள் மாற்றியமைக்கலாம். இன்றைய காலகட்டத்தில் இப்படி ​​ஒரு ரோபோ ஆட்டின் பயன்பாடுகள் அதிகம் தேவையில்லையே என்று நினைக்கலாம். ஆனால், கவாஸாகி நிறுவனம் அப்படி நினைக்கவில்லை. கவாஸாகி மனதில் இந்த ரோபோ ஆட்டிற்கான சில பயன்பாடுகள் உள்ளது என்பதை நம்புகிறது.

பொதி சுமக்கும் வாகனமா இந்த ரோபோ?

பொதி சுமக்கும் வாகனமா இந்த ரோபோ?

கட்டுமான தளங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் இதைப் பொதி சுமக்கும் இயந்திரமாகப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அப்படி, இந்த ரோபோ ஆடு பொதி சுமக்கப் பயன்படுத்தப்பட்டால், அதன் உடல் வெளிப்படையாக அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். அல்லது, நீங்கள் இதை ஒரு வாகனமாக மட்டும் பயன்படுத்த விரும்பினால் அதற்கும் இதில் ஆதரவு உள்ளது. எலெக்ட்ரிக் வாகனமாக இதைப் பயன்படுத்தி அதன் முதுகில் குதித்து சவாரி செய்யலாம். இதை நீங்கள் தன்னிச்சையாகவும் இயக்கலாம் அல்லது மனித கட்டுப்பாடு மூலமும் இயக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

Best Mobiles in India

English summary
Kawasaki Introduced Bex Rideable Robotic Goat That Actually Carries 100 Kg : Read more about this in Tamil GizBot : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X