Home
News

Vi அடிச்சான் பாரு.. மாசம் ரூ.192 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 15 ஜிபி டேட்டா!

விஐ (Vi) சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு 6 மாதங்கள் வேலிடிட்டி வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வெறும் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், டேட்டா சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொண்ட ப்ரீபெய்ட் திட்டமாக இது இருக்கிறது. அன்லிமிடெட் நைட் டேட்டா, வீக்கெண்ட டேட்டா ரோலோவர் போன்ற கூடுதல் டேட்டா சலுகைகளை இதில் எதிர்பார்க்க முடியாது. அதேபோல போஸ்ட் டேட்டாவும் கிடைக்காது. லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும்.

Vi அடிச்சான் பாரு.. மாசம் ரூ.192 போதும்.. 180 நாட்கள் வேலிடிட்டி!

விஐ ரூ. 1149 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Vi Rs 1149 Prepaid Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 6 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, மாதத்துக்கு ரூ.192 மட்டுமே செலவாக இருக்கிறது. இந்த விலைக்கு வெறும் சிம் ஆக்டிவ் (SIM Active) மட்டுமல்லாமல், லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் முழுவதும் அன்லிமிடட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். 15 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது.

ஆகவே, கூடுதல் டேட்டா தேவைப்படும்பட்சத்தில் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டேட்டாவை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சம் முறையில் கிடைக்கும். தினசரி லிமிட்டில் அனுப்பி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மொத்தமாக 1800 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும் இதை தேவைக்கு ஏற்ப அனுப்பி கொள்ளலாம்.

இந்த சலுகைகளை தவிர வேறு சலுகைகள் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், மலிவான விலைக்கு கிடைத்து உள்ளது. இதே வேலிடிட்டியுடன் தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் திட்டத்தை கேட்டால், ரூ.1749 விலைக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. இதில் தினசரி எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், நைட் டேட்டா, டேட்டோ ரோலோவர் சலுகைகளும் கிடைக்கும்.

விஐ ரூ. 1749 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Vi Rs 1749 Prepaid Plan Details): முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே 180 நாட்கள் வேலிடிட்டி இதிலும் கிடைக்கிறது. ஆனால், தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவை பயன்படுத்தாமல் விட்டால், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகைக்கு செல்லலாம்.

அதாவது, திங்கள் முதல் வெள்ளி வரையில் பயன்படுத்தாமல் போன டேட்டாவை சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் இலவச அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) கிடைக்கிறது. இந்த டேட்டா தினசரி டேட்டாவில் கழிக்கப்படாது. முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படும்.

மேலும், டேட்டா டிலைட்ஸ் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. மாதத்துக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கொடுத்து உள்ளது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. டேட்டா தேவைக்கு ஏற்ப திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vi Rs 1149 Prepaid Plan Offer 15GB Data 180 Days Validity 1800 SMS Check 6 Months Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X