உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!

|

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்த அகில இந்திய காவல்துறை உயரதிகாரிகள் கூட்டதில் இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிட்டரிகளிலிருந்து (Union Territory) 100-க்கும் மேற்பட்ட டிஜிபிக்கள் மற்றும் தலைமை ஆயுதப்படையினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் 5ஜி நெட்வொர்க் (5G Network) தொடர்பான ஆபத்துகள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை சில ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் சேர்ந்து சமர்ப்பித்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் 5ஜி தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் மற்றும் உண்மைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார்.! 5G ஆபத்தானதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை என்ன தெரியுமா?

5G நெட்வொர்க்கால் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா?

அதன் முக்கிய குறிப்புகளாக 5ஜி நெட்வொர்க் சுலபமாக அணுகக் கூடிய வகையில், வெளிப்படையான இணையதள புரோடோகால்களை (Protocol) கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாகப் பல சைபர் (Cyber) தாக்குதலுக்கு மக்கள் ஆளாக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆய்வறிக்கையில் 5ஜி தொடர்பாகக் கூறப்பட்டுள்ள மற்ற முக்கியமான ஆபத்தான தகவல்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

5ஜி தொழில்நுட்பம் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதே நேரத்தில் இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இன்டர்நெட் ஆப் திங்ஸ் (Internet of Things, IoT) சாதனங்களை இயக்க ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்-ற்கு (Artificial intelligence) பெரும் உதவிக்கரமாக 5ஜி இருக்கும் என்ற வகையில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், கிரிப்டோகரன்சி (Cryptocurrency), வங்கிகளுக்கான பணப்பரிவர்த்தனைகள் போன்றவையும் இந்த 5ஜி நெட்வொர்க்களை பயன்படுத்திச் செய்யப்படும் பொழுது அதில் ஆபத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, சமூக விரோதிகள் போதை பொருள் கடத்தல், ஹியூமன் மற்றும் ஆர்கன் ட்ராபிக்கிங் (Human and Organ trafficking), பண மோசடி போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட இந்த ஆரம்பக்கால 5ஜி நெட்வொர்க்கை சுலபமாகப் பயன்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார்.! 5G ஆபத்தானதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை என்ன தெரியுமா?

5G பற்றி ஐ.பி.எஸ் அதிகாரிகள் சொன்ன ஷாக்கிங் உண்மை.!

கேட்கவே ஷாக்கிங்காக இருக்கிறதல்லவா.! இன்னும் விஷயம் இருக்கு.. தொடர்ந்து படியுங்கள். நெட்வொர்க் ஃபங்க்ஷன் விர்ச்சுவலைசேஷன் (Network Function Virtualisation) மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களது தொடர்பு எண்ணை கண்காணிக்க முடியாத படி செய்து, காவல்துறையிடம் இருக்கும் டேட்டாக்களை (data) பாதிப்படையச் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அபாயங்கள் மட்டுமின்றி, சைபர் குற்றங்களான மொபைல் நெட்வொர்க் மேப்பிங் (Mobile Network Mapping) போன்றவையும் நிகழ வாய்ப்புள்ளதாம்.

டிஸ்ட்ரிபியூட்டட் டினையல் ஆஃப் சர்வீஸ் (Distributed Denial of Service), பேட்டரியை சீக்கிரம் காலியாக செய்தல், போனின் செயல்பாட்டினை பாதித்தல், மொபைல் IMSI கேப்சர் (Capture), மால்வேர் இன்ஜெக்ஷன் (Malware injection), DNS ஸ்பூஃப்ஃபிங் (Spoofing), அப்ளிங்க் மற்றும் டவுன்லிங்க் இம்பெர்சொனேஷன் (Uplink and Downlink impersonation) போன்றவற்றைச் சுலபமாகக் கையாள இந்த ஆரம்பநிலை 5ஜி நெட்வொர்க் வழிவகுக்கும் என்று அந்த கூறப்பட்டுள்ளது.

எந்த ஒரு தொழில்நுட்பமும் ஆரம்பக் காலத்தில் இருக்கும் பொழுது இத்தகைய அபாயங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதால், இவற்றிலிருந்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது எப்படி என்பது குறித்த ஆலோசனைகளும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களுக்கான IOT-க்களை வாங்கும் பொழுது அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து நன்கு ஆராய்ந்து பிறகு வாங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உஷார்.! 5G ஆபத்தானதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை என்ன தெரியுமா?

இத்தைகைய சிக்கலில் இருந்து தப்பிக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்?

அப்படி வாங்கும் பொருட்களை நம்பகமான இணையதளங்களிலிருந்து வாங்க வேண்டும். குறிப்பாகச் சீனாவிலிருந்து எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மொபைல் ஆபரேட்டர்கள் ஹைபிரிட் கிளவுட் (hybrid cloud) மாதிரியான டேட்டா சேகரிப்பு திட்டங்களைக் கையாள ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக நெட்வொர்க் ஆபரேட்டர்கள் அனைத்து திசைகளிலும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் சமர்ப்பித்த 5ஜி நெட்வொர்க்கின் ஆபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சில ஆபத்துகள் 5ஜி நெட்வொர்க்குடன் மறைமுகமாகச் செயல்பட வாய்ப்புள்ளது என்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சரி, நீங்கள் சொல்லுங்கள்.. உங்கள் விருப்பம் 4ஜி நெட்வொர்க்கா? அல்லது 5ஜி நெட்வொர்க்கா? என்று, உங்கள் தேர்விற்கான காரணம் என்ன என்பதையும், உங்கள் கருத்தையும் கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
IPS Officers Submitted 5G warning Paper at DGPs Meet Held in New Delhi

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X