iPhone 15-ஏ இன்னும் வரலை.. அதுக்குள்ள iPhone 16 தான் பெஸ்ட்னு சொல்றாங்க.! என்ன பண்றது?

|

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஐபோன் 14 (iPhone 14) சீரிஸ் மாடல்களின் விற்பனை இந்தியாவில் (India) அமோகமாக நடந்து வருகிறது. ஐபோன் 14 மாடல்களின் ப்ரோ (iPhone 14 Pro) மாடல்களை வாங்க பெரும்பாலான வாடிக்கையாளர்கள் EMI விருப்பத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

EMI விருப்பத்தின் மூலம் இப்போது வெறும் 1 ரூபாய் முன்பணத்துடன் ஐபோன்கள் வாங்க கிடைக்கிறது என்பதனால், வியாபாரம் எதிர்பார்த்ததை விட அமோகமாக இருக்கிறது.

ஐபோன் 15-ஏ இன்னும் வெளிவராத நிலையில் ஐபோன் 16 பற்றி வெளியான தகவல்.!

ஐபோன் 15-ஏ இன்னும் வெளிவராத நிலையில் ஐபோன் 16 பற்றி வெளியான தகவல்.!

உலகளவில் இப்போது ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புது வரவான ஐபோன் 15 ப்ரோவை (iPhone 15 Pro) பற்றிய தகவல்கள் சில காலமாக இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடல்கள் வேகமான ரேம்-களைப் (faster RAM) பெறக்கூடும் என்று ஒரு புதிய கசிவு வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் 15 சாதனமே இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஐபோன் 16 (iPhone 16) பற்றிய தகவல் புது லெவல் ஹைப்பை உருவாக்கியுள்ளது.

ஐபோன் 15 ஐ விட ஐபோன் 16 தான் பெஸ்ட்டா.! எப்படி?

ஐபோன் 15 ஐ விட ஐபோன் 16 தான் பெஸ்ட்டா.! எப்படி?

ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் ஏ18 பயோனிக் (A18 Bionic chipset) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ18 பயோனிக் டிஎஸ்எம்சியின் (TMSC) புதிய உற்பத்தி வரிசையில் தயாரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 15 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், காத்திருக்கும் ஐபோன் ரசிகர்களின் மனநிலை ஐபோன் 16 தகவலால் மாறியுள்ளது.

காரணம் வரவிருக்கும் ஐபோன் 16 மிகவும் வேகமான ரேம் (iPhone 16 could get faster RAM) அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குழந்தைங்க சொல் பேச்சு கேட்கலையா? போன் யூஸ் பண்றாங்களா? அப்போ இதை செய்ங்க.!குழந்தைங்க சொல் பேச்சு கேட்கலையா? போன் யூஸ் பண்றாங்களா? அப்போ இதை செய்ங்க.!

எது.! ஐபோன் 15 பெரிய வேகத்தை பெறாதா? என்னப்பா சொல்றீங்க.?

எது.! ஐபோன் 15 பெரிய வேகத்தை பெறாதா? என்னப்பா சொல்றீங்க.?

அதேசமயம் ஐபோன் 15 பெரிய வேகத்தை பெறாது என்றும் பேச்சுக்கள் வலுத்துள்ளது. ஐபோன் 16 மற்றும் அதன் சீரிஸ் மாடல்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் வதந்திகள் ஏற்கனவே வரத் தொடங்கியுள்ளன.

ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் TSMC-யின் 3nm செயல்முறை அடிப்படையிலான A18 பயோனிக் சிப்பில் "LPDDR5X RAM" உடன் இயங்கும் என்று MacRumors ஆல்வெளியிடப்பட்ட டிப்ஸ்டர் ShrimpApplePro இன் ட்வீட் கூறுகிறது.

ஐபோன் 15 அல்ட்ரா தான் துவக்கமே.!

ஐபோன் 15 அல்ட்ரா தான் துவக்கமே.!

iPhone 16 தொடரில் iPhone 16 Pro மற்றும் iPhone 16 Ultra ஆகியவை இருக்கலாம் என்றும் இந்த தகவல் கூறியுள்ளது.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை "ஐபோன் 15 அல்ட்ரா (iPhone 15 Ultra)" என மறுபெயரிடக்கூடிய ஐபோன் 15 வரிசையுடன் 'அல்ட்ரா' மோனிகரை ஆப்பிள் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தெரியாதவர்களுக்கு, ஐபோன் 14 வரிசையில் உள்ள தற்போதைய ப்ரோ மாடல்கள் LPDDR5 ரேமைப் பயன்படுத்துகின்றன - அதே நேரத்தில் ப்ரோ அல்லாத வகைகளில் LPDDR4X ரேம் அம்சத்தை பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது பபுள்-கம் இல்லை டிஸ்பிளே தான்.! இழுக்க-இழுக்க விரியும் புது Samsung ஸ்கிரீன் அறிமுகம்.!இது பபுள்-கம் இல்லை டிஸ்பிளே தான்.! இழுக்க-இழுக்க விரியும் புது Samsung ஸ்கிரீன் அறிமுகம்.!

ஐபோன் 15 சீரிஸ் இல் A17 சிப்செட்-ஆ.! உறுதியா?

ஐபோன் 15 சீரிஸ் இல் A17 சிப்செட்-ஆ.! உறுதியா?

டிப்ஸ்டர் லீக்ஸ் இன் கூற்றுப்படி, ஐபோன் 15 ப்ரோ தொடரில் எந்த ஸ்டோரேஜ் மேம்படுத்தலும் கிடைக்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இதில் LPDDR5 ரேமை நிறுவனம் பயன்படுத்தும்.

இருப்பினும், ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் ரேம் 6ஜிபியில் இருந்து 8ஜிபி வரை உயர்வதைக் காணலாம் என்று கூறப்படுகிறது.

ஆப்பிளின் நீண்ட கால சிப் சப்ளையர்களான TSMC, M2 Pro சிப்களை தயாரித்து முடித்த பிறகு, புதிதாகக் பீல்ட் செய்யப்பட்ட 3nm உற்பத்தி வரிசையில் A17 பயோனிக் சிப்செட்டைத் தயாரிக்க உள்ளது என்று கூறப்படுகிறது.

iPhone 15 Pro எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

iPhone 15 Pro எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

ஆப்பிள் இந்த ஆண்டு செப்டம்பர் 2023 இல் iPhone 15 வரிசையை வெளியிடும் (iPhone 15 launch date) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 15 'ப்ரோ' மாடல்கள் பெரிய மேம்படுத்தல்கள் மற்றும் மேம்பாடுகளைப் பெறவில்லை என்றாலும், முழுத் தொடரும் இறுதியாக USB Type-C சார்ஜிங் போர்ட்டைக் கொண்டு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

ஆப்பிளின் போர்ட்ஃபோலியோவில் உள்ள iPad மற்றும் MacBook போன்ற தயாரிப்புகள், இப்போது சில காலமாக USB-Cயை பயன்படுத்தி வருகின்றன என்பது கவவிக்கத்தக்கது.

செவ்வாயில் பனிப்பொழிவு - NASA.! பூமி போல உறைந்து நிறம் மாறுகிறதா ரெட் பிளானட்.!செவ்வாயில் பனிப்பொழிவு - NASA.! பூமி போல உறைந்து நிறம் மாறுகிறதா ரெட் பிளானட்.!

ஐபோன் 16 தான் பெஸ்ட்னு சொல்றாங்க.! என்ன செய்யுறது?

ஐபோன் 16 தான் பெஸ்ட்னு சொல்றாங்க.! என்ன செய்யுறது?

அதேபோல், ஐபோன் 15 ப்ரோ அதன் மையத்தில் இயங்கும் A17 பயோனிக் உடன் மேம்படுத்தப்பட்ட ஜூம் செய்யும் திறன்களுக்கான பெரிஸ்கோப் லென்ஸைப் பெறலாம் என்று கூறப்படுகிறது.

மறுபுறம் அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 16 சீரிஸ் A18 சிப்செட் உடன் வேகமான ரேம் மற்றும் உயர் திறன் கொண்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 15 ஐ விட ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் பெஸ்டான அம்சங்களை கொண்டிருக்கும் என்றாலும், நீங்கள் அதை உங்கள் கையில் பெற செப்டம்பர் 2024 வரை காத்திருக்க வேண்டும் என்பதே உண்மை.!

Best Mobiles in India

English summary
iPhone 16 Pro models are expected to be powered by the A18 Bionic and Faster RAM

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X