PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!

|

PUBG அல்லது BGMI என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு கண்கள் அகலமாக விரிந்துவிடும். இதற்கு இரண்டு கரணங்கள் உள்ளது. அந்த கேமை விளையாடும் நபர்களுக்கு அடடே.! என்ற ஒரு குஷியில் கண்கள் அகலமாக விரிவடையும். மற்றொரு புறம், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த வார்த்தையைக் கேட்டால், அவர்களுடைய சாதாரண கண்கள் கோபத்தில் நெற்றிக் கண்களாக மாறிவிடும்.

அந்த அளவிற்கு இந்த கேம்கள் இந்தியாவில் பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியாக இருந்தாலும், இந்த ஆன்லைன் கேம்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டன. இதற்கான முக்கிய காரணம் என்றால், இவை சீனாவை தளமாகக் கொண்டு இயங்கிய கேம்கள் என்பதனால், இந்தியாவிற்குள் இவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், சில PUBG மற்றும் BGMI ரசிகர்கள், இந்த கேமை மற்ற நாட்டு சர்வர்களில் இருந்து டவுன்லோட் செய்து விளையாடி வந்தனர்.

PUBG / BGMI கேம் தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.!

இண்டஸ் பெட்டில் ராயல் (Indus Battle Royale) கேம் அறிமுகம்.!

ஆனால், அதுவும் சிலருக்குத் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய கேமர்கள் ஃபிரீ ஃபயர், ஏபெக்ஸ், COD போன்ற கேம்களை விளையாடி வந்தனர். ஆனால், இது எதுவுமே PUBG / BGMI வழங்கிய மிரட்டலான கேமிங் அனுபவத்தை வழங்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த கேமிற்கான மாற்று கேமை பல நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தாலும், இந்தியா இப்போது ஒரு புதிய கேமை அறிமுகம் செய்யவுள்ளது.

இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கேம் ஆகும். இதை இண்டஸ் பெட்டில் ராயல் (Indus Battle Royale) என்று அலைகிறார்கள். இந்த கேம் பப்ஜி மற்றும் பிஜிஎம்ஐ ஆகிய கேம்களின் பயனர்களை ஈர்க்கும் விதத்தில் சொந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமிற்காக ட்ரைலர் வீடியோவும் கூட இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கேமின் தரத்தைப் பார்த்தால், நீங்களே இது ஒரு இந்தியத் தயாரிப்பா என்று ஷாக் ஆகிவிடுவீர்கள்.

'இது' அதுல என்று உங்களையே மிரள வைக்கும் கேமிங் அனுபவம்.!

அந்த அளவிற்கு இதன் கேமிங் தரம் மற்றும் கிராபிக்ஸ் தரம் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், PUBG அல்லது BGMI பயனர்கள் இந்த கேமை பார்த்தால், இது அப்படியே அது மாதிரியே இருக்கிறதே என்று கட்டாயம் நினைக்கும் விதத்தில் இதன் உருவாக்கம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கதை களம் சற்று வித்தியாசமானது என்றாலும் கூட, இதன் கேமிங் அனுபவம் Apex கேமை உரித்து வைத்தது போல் நம்மை உணர வைக்கிறது.

இப்போது இந்த கேமிற்கான ப்ரீ-ரெஜிஸ்டிரேஷன் துவங்கியுள்ளது. இந்தியாவில் இந்த கேம் இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. விரைவில் இந்த கேம் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது. நீங்கள் ஒரு கேமர் என்றாலோ, அல்லது PUBG அல்லது BGMI விளையாடிய தீவிரமான ரசிகர் என்றாலோ கட்டாயம் இந்த கேமை நீங்கள் ஒருமுறையாவது ட்ரை செய்து பார்க்க வேண்டும்.

PUBG / BGMI கேம் தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.!

இந்த கேமிங் கதை களம் என்ன தெரியுமா?

இந்த கேமிங் ட்ரைலர் வீடியோவை பார்த்தால், இந்த கேமில் என்னென்ன சுவாரசியமான விஷயங்கள் புதைந்திருக்கிறது என்று உங்களுக்கே புரியும் மக்களே. இந்த கேமில் காஸ்மியம் என்ற இந்த பிரபஞ்சத்தில் ஒரு அரிய பொருளை நீங்கள் பெற முயற்சிக்கும் இண்டர்கலெக்டிக் சிண்டிகேட் COVEN இல் பணிபுரியும் ஒரு கூலிப்படையான மித்வாக்கரின் பாத்திரத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று விளையாட்டின் முன்மாதிரி கூறுகிறது.

இந்த அமைப்பு இந்தோ-பியூச்சரிசம் என்ற அடிப்படையாகக் கொண்டது, இது அடிப்படையில் தொலைதூர எதிர்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு மேம்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தைக் குறிக்கிறது. இந்த கேம் முற்றிலும் பியூச்சர்ஸ்டிக் தளத்தில் இயங்குகிறது. இந்த கேமின் வீடியோவை பார்த்துவிட்டு உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Indian Made Indus Battle Royale Pre-registrations Open for Android

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X