"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ஒட்டுமொத்த பயனர்களுக்கு கூகுள் நிறுவனம் (Google) ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் கீழ் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - டெலிட் செய்ய வேண்டும்!

"எதை" டெலிட் செய்ய வேண்டும்? "அதை" டெலிட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்!

மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்!

கூகுள் நிறுவனம், ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் ஒரு பொதுவான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

"உங்கள் ஸ்மார்ட்போனிற்கு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபாத்தான ஆப்கள்" என்கிற பட்டியலின் கீழ் 16 ஆப்களின் பெயர்களை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், அவைகளை உடனே டெலிட் செய்யுமாறும் 'வார்னிங்' கொடுத்துள்ளது!

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

போன் பேட்டரியையும், மொபைல் டேட்டாவையும்!

போன் பேட்டரியையும், மொபைல் டேட்டாவையும்!

ஒரு பாதுகாப்பு நிறுவனத்தால் (McAfee) அடையாளம் காணப்பட்டு, பின்னர் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருந்து நீக்கப்பட்டுள்ள இந்த 16 ஆப்களுமே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பேட்டரியையும், மொபைல் டேட்டாவையும் மிகவும் வேகமாக "உறிஞ்சுவதாக" குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, பயனர்களுக்கே தெரியாமல் விளம்பரங்களைக் கிளிக் செய்ய வைப்பது, ஸ்மார்ட்போனில் உள்ள க்யூஆர் கோட் ஸ்கேனர், ஃபிளாஷ் டார்ச் போன்றவைகளை இயக்குவது போன்ற "திருட்டு வேலைகளிலும்" ஈடுபட்டுள்ளது.

இன்னொரு கொடுமையான விஷயம்!

இன்னொரு கொடுமையான விஷயம்!

எல்லாவற்றை விடவும் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்படுவதற்கு முன், இந்த 16 ஆப்களும் மொத்தம் 20 மில்லியன் டவுன்லோட்களை சந்தித்து உள்ளன.

ஆக, இந்த ஆபத்தான ஆப்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அப்படி இருந்தால் அவைகளை உடனே டெலிட் / அன்இன்ஸ்டால் செய்யவும்!

வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!வயிறு எரியுதுனு புலம்பும் OnePlus போன் பயனர்கள்.. சொந்த கம்பெனியே வச்ச புது ஆப்பு!

அந்த 16 ஆப்களின் பட்டியல்:

அந்த 16 ஆப்களின் பட்டியல்:

01. High-Speed Camera
02. Smart Task Manager
03. Flashlight+
04. Calendar notepad
05. K-Dictionary
06. BusanBus

ஜாய்கோட் முதல் குவிக் நோட் வரை!

ஜாய்கோட் முதல் குவிக் நோட் வரை!

07. Joycode
08. Currency Converter
09. EzDica
10. Instagram Profile Downloader
11. Ez Notes
12. Flashlight
13. Calculator
14 & 15. Flashlight+ ஆப்பை போலவே மேலும் இரண்டு ஆப்பிள்.
16. Quick Note

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

டெலிட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

டெலிட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்ட இந்த 16 ஆப்களும் "com.liveposting" மற்றும் "com.click.cas" எனப்படும் ஆட்வேர் கோட் உடன் வந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரண்டுமே லிங்க்ஸ் (Links) மற்றும் விளம்பரங்களை கிளிக் செய்ய அனுமதிக்கும் லைப்ரரி (Library) ஆகும்.

இது உங்களுக்கு தெரியாமலேயே லிங்க்குகளையும், விளம்பரங்களையும் கிளிக் செய்ய வைக்கும், அதன் விளைவாக உங்கள் போன் பேட்டரியும், மொபைல் டேட்டாவும் விரைவாக காலி ஆக்கும்!

யோசிக்கவே வேண்டாம்!

யோசிக்கவே வேண்டாம்!

மேலே பட்டியலிடப்பட்டுள்ள 16 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் டவுன்லோட் செய்து இருந்தாலும் கூட - எந்தவிதமான இரண்டாம் கட்ட யோசனையும் இல்லாமல் - அதை உடனே டெலிட் செய்யவும்.

மேலும் இதுபோன்ற ஆபத்தான ஆப்களில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை காப்பாற்ற - கண்மூடித்தனமாக ஆப்களை இன்ஸ்டால் செய்யும் பழக்கத்தை கைவிடவும். எப்பொழுதுமே அதிகாரப்பூர்வமான ஆப்களையும், நல்ல ரிவ்யூஸ் உள்ள ஆப்களை மட்டுமே டவுன்லோட் செய்யவும்!

Best Mobiles in India

English summary
Immediately delete these 16 dangerous apps from your android phone new security warning from Google

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X