யாருக்கும் தெரியாம சீக்ரெட் மெசேஜ் அனுப்பனுமா? அப்போ இந்த ட்ரிக்கை ட்ரை செய்யுங்க.!

|

புகழ்பெற்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் (Apple) புதிய அம்சங்கள் கொண்ட தனது ஐஓஎஸ் 16 அப்டேட்டை (iOS 16) சமீபத்தில் அறிவித்தது. இந்த அப்டேட்டில் தனது பிரத்தியேகமான செய்தி அனுப்பும் செயலியான ஐமெசேஜில் (iMessage) புதிய சுவாரசியமான அம்சங்களை புகுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இந்த புதிய அம்சத்தில் ஐபோன் (iPhone) மற்றும் ஐபேட் (iPad) பயனாளர்கள் லைட் எஃபெக்ட்டுடன் (Light effect) மிமோஜிக்கள் (Memoji) மற்றும் செய்திகளை அனுப்புவதற்கான அம்சத்தைச் சேர்த்துள்ளது. மேலும், ஐஓஎஸ்16 மேம்பாட்டில் புதிய அம்சமாக ஐமெசேஜ் செயலி மூலம் ஒருவர் மெசேஜ்களை இன்விசிபிள் இங்க் (Invisible Ink) கொண்டு அனுப்பலாம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

யாருக்கும் தெரியாம சீக்ரெட் மெசேஜ் அனுப்பனுமா? இந்த ட்ரிக் ட்ரை செய்க!

இந்த இன்விசிபிள் இங்க் அம்சம் மூலம் அனுப்பப்படும் மெசேஜ்களை தொட்டு திறக்கும் வரை அந்த மெசேஜ் யார் கண்களுக்கும் தெரியாது. இந்த அம்சம் மூலம் தனிப்பட்ட செய்திகளையும் நீங்கள் சீக்ரெட் மெசேஜ் ஆக அனுப்பிக்கொள்ளலாம். அந்த மெசேஜ் பெறும் நபர் அதனை ஸ்வைப் (Swipe) செய்யும் வரை அந்த செய்தி வெளிப்படுத்தப்படாமல் இருக்கும்.

கேட்பதற்கு இது மிகவும் சாதாரணமானது போலத் தெரிந்தாலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் சிறப்பு வாழ்த்து அல்லது செய்திகளை அனுப்ப இந்த லைட் எஃபெக்ட் மற்றும் இன்விசிபிள் இங்க் அம்சங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இப்போது, இந்த இன்விசிபிள் இங்க்கை பயன்படுத்தி எப்படி செய்தி அனுப்புவது என்று பார்க்கலாம்.

யாருக்கும் தெரியாம சீக்ரெட் மெசேஜ் அனுப்பனுமா? இந்த ட்ரிக் ட்ரை செய்க!

- இந்த அம்சத்தை ஐஓஎஸ் 16 அப்டேட் உள்ள ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்படுத்த முடியும்.
- ஆகையால், முதலில் உங்கள் ஆப்பிள் சாதனங்களில் ஐஓஎஸ்16-ஐ அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
- பிறகு ஐமெசேஜஸ் ஓபன் செய்து, அதில் நீங்கள் இன்விசிபிள் மெசேஜ் அனுப்ப விரும்பும் கான்டாக்டை (Contact) தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியை டைப் (Type) செய்துகொள்ள வேண்டும்.
- தேவைப்பட்டால் மிமோஜி அல்லது புகைப்படங்களை உங்கள் மெசேஜ் உடன் சேர்த்துக்கொள்ளலாம்.
- சென்ட் (Send) பட்டனை சிறிது நேரம் அழுத்தவேண்டும்.
- அதில் வரும் க்ரே (Grey) நிறப் புள்ளியைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
- பிறகு, அதில் இருக்கும் இன்விசிபிள் இங்க் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- வேண்டுமென்றால் பிரிவ்யூ (Preview) செய்தும் பார்த்துக்கொள்ளலாம்.
- மிமோஜிக்கள் மற்றும் புகைப்படங்களுக்குக் கூடுதல் எஃபெக்ட்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
- ஸ்லாம் (Slam), லவுட் (Loud), ஜென்டில் (Gentle) மற்றும் பல எஃபெக்டுகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். - அதற்கான ப்ரிவ்யூக்களையும் பார்க்கலாம்.
- இறுதியாக சென்ட் பட்டனை அழுத்தினால் உங்கள் மெசேஜ்ஜை நீங்கள் அனுப்பிவிடலாம்.
- இன்விசிபிள் இங்க் மூலம் அனுப்பும் செய்தி என்பதால் நீங்கள் அனுப்பும் மெசேஜ் ப்ளர்ராக (Blur) அனுப்பப்படும்.
- அப்படி ப்ளர்ராக்கி அனுப்பப்படும் செய்தி ஸ்க்ரீனில் (Screen) தெரியாது.
- இன்விசிபிள் இங்க் மூலம் அனுப்பப்படும் மெசேஜ்ஜை டாப் (Tap) செய்து ஹோல்ட் (Hold) செய்யும் வரை எழுத்துக்களை வெளிப்படையாகக் காட்டாது.
- இனி நீங்கள் உங்கள் நண்பர்கள், பாய் ஃப்ரெண்ட் (Boy Friend) அல்லது கர்ள் ஃப்ரெண்டுகளுக்கு (Girl Friend) அனுப்பும் மெசேஜ்களை யாரும் பார்த்துவிடுவார்களோ என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

Best Mobiles in India

English summary
How To Send Invisible Message From iMessage iPhone iOS 16 Update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X