2 ப்ளூடூத் இயர்போன்ஸ் அல்லது ஸ்பீக்கரை ஒரே நேரத்தில் போனில் இயக்கலாமா? இதை ட்ரை செய்யுங்க.!

|

ப்ளூடூத் (Bluetooth) என்பது கேட்ஜெட்கள் (Gadget) ஒன்றோடு ஒன்று இணைப்பில்லாமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் ஒரு அம்சமாகும். ஆரம்ப காலத்தில் ஒரு போனிலிருந்து மற்றொரு போனிற்கு தகவல் பரிமாற மட்டுமே பயன்பட்டு வந்த இந்த ப்ளூடூத் அம்சம், இப்போது பல்வேறு மேம்பாடுகளை அடைந்து பல வடிவங்களைப் பெற்றுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் ப்ளூடூத் ஹெட்செட் (Headset) இல்லாத ஒருவரைப் பார்ப்பது அரிது. மேலும் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது, போகும் வழியிலும் சரி, வசிக்கும் இடத்திலும் சரி, உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கப் பலர் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை (Bluetooth Speakers) கையோடு கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டனர்.

2 ப்ளூடூத் இயர்போன்ஸ் அல்லது ஸ்பீக்கரை ஒரே நேரத்தில் போனில் இயக்கலாமா?

இதுவரை நாம் பயன்படுத்தி வந்த ப்ளூடூத் இணைப்புகள் ஒரு ஸ்மார்ட் போனில் இருந்து ஒரு ப்ளூடூத் டிவைஸில் (Bluetooth device) மட்டுமே இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஒரு ஸ்மார்ட்போனுடன் ஒரு ப்ளூடூத் டிவைஸ் மட்டுமே இணைக்கப்படும் என்ற கட்டுப்பாட்டினால் வெவ்வேறு அறையில் தனித்தனியாக அமர்ந்து வேலை பார்க்கும் நண்பர்களுடன் சேர்ந்து பாடல்கள் கேட்பது கடினமாகிவிட்டது.

அனைவருக்கும் கேட்கும் படி, சத்தமாக ஸ்பீக்கரில் பாடல் போட்டால் மற்றவர்களுக்குத் தொல்லையாக இருக்கும். சரி அப்போ இதற்கு என்ன தான் தீர்வு? இந்தப் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு தான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சமீப காலமாக புது அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளது.

அதுதான், டுவல் ஆடியோ (Dual Audio) அம்சம். இது பழைய ஸ்மார்ட்போன்களில் இருக்காது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்திற்கு மேல் வெர்ஷன் (Version) உள்ள OSகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

2 ப்ளூடூத் இயர்போன்ஸ் அல்லது ஸ்பீக்கரை ஒரே நேரத்தில் போனில் இயக்கலாமா?

மேலும், உங்கள் ஸ்மார்ட் போனின் ப்ளூடூத் v5-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் இருந்தால் மட்டுமே ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு ப்ளூடூத் டிவைஸ்களை கனெக்ட் செய்து, ஒரே நேரத்தில் இருந்து டிவைஸ்களிலும் பாடல்களை கேட்டு மகிழ முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

உங்கள் ஸ்மார்ட் போனில் இந்த இரண்டு அம்சங்களும் இருக்கும் பட்சத்தில், இப்போது எப்படி இரண்டு ப்ளூடூத்களை கனெக்ட் செய்வது என்று பார்க்கலாம்.

- முதலில் உங்கள் ஸ்மார்ட் போனின் ப்ளூடூத்தை ஆன் செய்து நீங்கள் கனெக்ட் செய்யவிருக்கும் இரண்டு ப்ளூடூத் ஹெட்போன் அல்லது ஸ்பீக்கர் ஆகியவற்றை உங்கள் போனுடன் பேர் (Pair) செய்யவும்.
- பிறகு இரண்டு ப்ளூடூத் ஆடியோ டிவைஸ்களையும் (Audio Device) ஒன்றிரண்பின் ஒன்றாக தனித்தனியே உங்கள் ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத்தில் இணைக்கவும்.
- பேரிங் செய்த பின்னர் ப்ளூடூத் செட்டிங்ஸின் திரையில் வலது ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவியம்.
- அதிலிருந்து, அட்வான்ஸ் செட்டிங்ஸ் (Advanced Settings) தேர்வுக்குள் நுழையவும்.
- அதனுள் இருக்கும் டுவல் ஆடியோ என்பதை தேர்வு செய்து இரண்டு ப்ளூடூத் டிவைஸுகளை ஒரே சமயத்தில் உங்கள் ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொள்ளவும்.
- உங்களிடம் ஆண்ட்ராய்டு 10 வெர்ஷனிற்கு மேல் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் இருக்குமாயின் குவிக் பேனலில் (Quick Panel) உள்ள மீடியா (Media) என்பதை தேர்வு செய்து அதன் மூலமும் இரண்டு ஆடியோ அவுட்புட்களை (Audio Output) கனெக்ட் செய்து கொள்ளலாம்.

ஐபோன் பயனர்கள் கண்ட்ரோல் சென்டருக்கு (Control Centre) சென்று ஏர் ப்ளே ஐகானை (Airplay Icon) தேர்வு செய்யவும். அதன் பிறகு நீங்கள் ஆடியோவை ப்ளூடூத் மூலம் பகிர நினைக்கும் டிவைஸ்களை தேர்வு செய்ய வேண்டும். இணைப்பில் இருக்கும் ஏதேனும் ஒரு டிவைஸை டீசெலக்ட் (Deselect) செய்தால் அந்த டிவைஸிற்கு செல்லும் ஆடியோ துண்டிக்கப்படும்.

இப்படி செய்தால், உங்களால் ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் டிவைஸ்களை இயக்க முடியும். ட்ரை செய்து பாருங்கள்.

Best Mobiles in India

English summary
How to connect two bluetooth earbuds and speakers on iPhone and Android smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X