பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!

|

நாணயத்தில் (Coin) இரண்டு பக்கம் இருப்பது போல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல பக்கம் இருக்கிறதென்பதே உண்மை. ஒரு நபர் மற்றவர் முன் ஒரு மாதிரியாகவும், தனிமையில் அவருக்கே உரிய சில குணாதிசயங்களுடன் இருப்பது இயல்பே. இப்படி எல்லோருக்கும் நல்லது கெட்டது என்று இரண்டு பக்கங்கள் உள்ளது.

ஒருவரைப் பார்த்தவுடன், அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் கண்டறிய முடியுமா? என்றால், முடியாது.! என்று தான் அனைவரும் சொல்வார்கள். ஆனால், அது அந்த காலம். இப்போது ஒருவரை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவருடைய பிரௌசர் ஹிஸ்டரியை (Browser history) கொஞ்சம் புரட்டிப்பார்த்தால் போதும், உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா முடியும்.!

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை பிரௌசர் ஹிஸ்டரி சொல்லிவிடுமா?

இன்றைய சூழ்நிலையில், நமது மொபைல் போனை (Mobile Phone) வைத்துத் தான் நாம் ஏராளமான 'விஷயங்களைச்' செய்து வருகிறோம். குறிப்பாக, இணையத்தில் 'பல விஷயங்களை' நாம் சர்ச் (Search) செய்து பார்வையிடுகிறோம். இதையெல்லாம், கூகுள் நிறுவனம் தனது சர்வரில் (Google server) பத்திரமாக சேமித்து வைக்கிறது. இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.

இருந்தாலும் கூட, நமது பிரௌசர் ஹிஸ்டரி பற்றிய விபரங்களை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறோம் என்பதே உண்மை. இதை மறுப்பவர் இங்கு யாரேனும் இருக்கிறீர்கள் என்றால், அது அதிசயம் தான். நல்லதோ, கெட்டதோ, உங்கள் போனில் உள்ள பிரௌசர் ஹிஸ்டரியை நீங்கள் மற்றவரிடம் இருந்து 'மறைத்து' (How to hide browser history) பாதுகாக்க விரும்பினால், அதற்கு பாஸ்வோர்ட் லாக் (Password lock) போடலாம்.

எது பிரௌசர் ஹிஸ்டரியை மட்டும் பாஸ்வோர்ட் போட்டு லாக் செய்யலாமா (Broswer history password lock)? என்று கண்கள் விரிந்து பார்க்கும் உங்கள் ஆர்வம் எங்களுக்குப் புரிகிறது. ஆம், என்பதே இதற்கான பதில். உங்கள் போனில் உள்ள பிரௌசர் ஹிஸ்டரி விபரங்களை மற்றவர் அணுகாமல் இருக்க, அதை பாஸ்வோர்ட் லாக் எனபில் (Password lock enable) செய்து, உங்கள் பிரைவேட் பிரௌசர் ஹிஸ்டரி விபரங்களை மறைத்து வைக்கலாம்.

பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா முடியும்.!

எது.! பிரௌசர் ஹிஸ்டரியை பாஸ்வோர்ட் போட்டு லாக் செய்யலாமா?

அதை எப்படிச் செய்வதென்ற டிப்ஸை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். சிலர், இது எல்லாம் ஒரு சிக்கலாப்பா? ஹிஸ்டரியை மொத்தமாக டெலீட் (Clear browser history) செய்துவிட்டு வேலையைப் பாருங்கள் என்று சாமர்த்தியமாக சிலர் ஐடியா கொடுக்கலாம். ஆனால், நீங்கள் டெலீட் (Delete) செய்யும் தகவல்களை மீண்டும் ரிஸ்டோர் (Restore) செய்து பார்க்க வாய்ப்புகள் உள்ளது என்பதே த்ரில்லிங் ஆன உண்மை.

இன்னும் சிலர், சாமர்த்தியமாக இதற்காகத் தான் நான் 'Incognito' மோடில் பிரௌஸ் செய்கிறேன் என்று கெத்தாகக் கூறிக்கொள்வார்கள். ஆனால், Incognito பிரௌசர் ஹிஸ்டரியையும் (Incognito browser history) நாம் பார்க்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் சொல்லுங்க.. சரி, விஷயம் என்னவென்றால், நீங்கள் என்ன தான் திறமையாக உங்கள் பிரௌசர் ஹிஸ்டரி தடயங்களை அழிக்க முயன்றாலும், அது பாதுகாப்பானதல்ல என்பதே உண்மை.

உங்கள் போனை வாங்கும் நபர் திறமைசாலி என்றால், கட்டாயமாக உங்கள் ஒட்டுமொத்த ஹிஸ்டரியையும் பார்வையிட முடியும். இத்தகைய விஷயங்களில் இருந்து தப்பிக்க நாம் எடுக்கும் ஆயுதம் தான் பிரௌசர் ஹிஸ்டரி பாஸ்வோர்ட் லாக்கிங். சரி, இதை எப்படி உங்கள் போனில் ஆக்டிவேட் (How to activate browser history password lock) செய்வதென்று பார்க்கலாம் வாங்க. இந்த வசதியை உங்கள் கூகுள் குரோம் (Chrome) பிரௌசர் இப்போது வழங்குகிறது.

பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா முடியும்.!

இப்படி செஞ்சா இனி உங்கள் பிரௌசர் ஹிஸ்டரியை மற்றவர்கள் பார்க்க முடியாது.!

இப்படி ஒரு அம்சம் இருப்பதே பலருக்கும் தெரியாது. கூகுள் குரோமில் இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம்.

- முதலில் உங்களது ப்ரௌசரில் activity.google.com என்ற இணையத்தள முகவரிக்குச் செல்ல வேண்டும்.
- அதில் Manage my activity verification என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.
- பிறகு, Require extra verification, Don't require extra verification என்று இரண்டு தேர்வுகள் இருக்கும்.
- அதில் Require extra verification என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
- சேவ் (Save) செய்யும்போது உங்களது Gmail கணக்கை உள்ளீடு (Login) செய்ய சொல்லிக் கேட்கப்படும்.
- உங்கள் இமெயில் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து லாகின் செய்யவும்.
- பின் உங்களது ஆக்டிவிட்டி பேஜ் (Activity page) பாஸ்வேர்ட் போட்டால் மாட்டுமே ஓப்பன் ஆகும்.

இந்த அம்சம் கூகுள் குரோம் மட்டுமின்றி, ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) மாதிரியான மற்ற பிரௌசர்களிலும் பயன்படுத்தலாம். ஆக்டிவிட்டி பக்கத்தில் கூடுதல் வெரிஃபிகேஷனை (Extra verification) ஆக்டிவேட் (Activate) செய்த பின்னர், இனி எப்போது நீங்கள் ஹிஸ்டரியை ஓப்பன் செய்தாலும் பாஸ்வேர்ட் கேட்கப்படும். இதன் மூலம் உங்கள் ப்ரௌசிங் ஹிஸ்டரி பாதுகாப்பாக இருக்கும்.

உங்கள் டிவைஸில் இருக்கும் ஒவ்வொரு ப்ரௌசருக்கும் தனித்தனியாக நீங்கள் எக்ஸ்டரா வெரிஃபிகேஷனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்கள் உங்கள் ப்ரௌசிங் ஹிஸ்டரியை பார்க்க முடியாமல் செய்துவிடலாம்.

Best Mobiles in India

English summary
Google Chrome Browser History Password Lock Try This Tricks To Stay Safe

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X