களைக்கட்ட போகும் பொங்கல்.. வரிசைக்கட்டி நிற்கும் 5G ஸ்மார்ட்போன்கள்! ரெடியா இருங்க.!

|

இன்னும் சில தினங்களில் 2023 இல் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். 2022 இல் எந்த துறை சிறப்பாக இருந்ததோ இல்லையோ ஸ்மார்ட்போன் துறை என்பது சீரும் சிறப்புமாக இருந்தது. ஆனால் அதோடு முடியவில்லை, 2023 ஜனவரியில் ஏணைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவதற்கு வரிசைக்கட்டி நிற்கிறது.

பொங்கல் மாதத்தில் அறிமுகமாக இருக்கும் 5ஜி போன்கள்

பொங்கல் மாதத்தில் அறிமுகமாக இருக்கும் 5ஜி போன்கள்

ஜனவரி மாதத்தை பண்டிகை மாதம் என்றே குறிப்பிடலாம். புத்தாண்டில் தொடங்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் போகி, பொங்கல், ஜல்லிக்கட்டு என கோலாகலமாக பல பண்டிகைகள் ஜனவரியில் இருக்கிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் அறிமுகமாக இருக்கும் புதிய 5ஜி போன்கள் குறித்து பார்க்கலாம். இந்த அனைத்து போன்களும் ஜனவரியில் தான் அறிமுகமாகும் என்பத தகவலின் அடிப்படையிலானது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Redmi Note 12 சீரிஸ்

Redmi Note 12 சீரிஸ்

Redmi Note 12 சீரிஸ் இல் மூன்று போன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் முன்னதாகவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. தற்போது இந்த ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 12 சீரிஸ் இல் ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ+ உள்ளிட்டவைகள் அடங்கும்.

மெலிதான வடிவமைப்பு

மெலிதான வடிவமைப்பு

Redmi Note 12 5G ஸ்மார்ட்போனானது அதன் ப்ரோ மாடல்கள் போன்றே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பின்புற பேனல் மட்டும் சற்று வளைந்த வடிவில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் மிகவும் மெலிதானதாக இது இருக்கும் என சியோமி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன் மையத்தில் பஞ்ச் ஹோல் வசதியோடு செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

Redmi Note 12 5G விலை

Redmi Note 12 5G விலை

Redmi Note 12 5G விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரையிலான விலைப் பிரிவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் இந்தியா, சியோமியின் இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் கடைகளில் இது விற்பனைக்கு கிடைக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ப்ளூ மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் வெளியாகலாம்.

OnePlus 11 5G

OnePlus 11 5G

ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 11 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது பக்கா ப்ளாக்ஷிப் போன் ஆகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போனும் 2023 இன் முதல் பாதியில் அறிமுகமாக இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது சமீபத்திய மற்றும் மேம்பட்ட சிப்செட் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.

iQOO 11 5G

iQOO 11 5G

iQOO 11 5G ஸ்மார்ட்போனானது 2023 ஆம் ஆண்டில் அறிமுகமாக இருக்கும் மற்றொரு ப்ரீமியம் ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்த தற்போது சீனாவில் அறிமுகமாகி விற்பனைக்கும் கிடைத்து வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

இதில் 6.78 இன்ச் AMOLED 144Hz டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

OIS ஆதரவு கொண்ட 50 எம்பி சாம்சங் ஜிஎன்5 முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 13 எம்பி ஸ்னாப்பர் என மூன்று கேமராக்கள் இடம்பெறும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Check out the list of 5G smartphones that will be launched on January 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X