உஷார் மக்களே.! இப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தா அதை நம்பாதீங்க.! EB பில் மூலம் பண மோசடி!

|

உங்களுடைய EB பில் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை, அதை உடனே செலுத்துங்கள், இல்லையென்றால் உங்கள் மின்சார இணைப்பு இன்றிரவே துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கும் SMS உங்கள் போனிற்கு வந்தால், உடனே பதட்டம் அடையாதீர்கள். குறிப்பாக, அந்த SMS உடன் அனுப்பப்பட்டுள்ள இணைப்பை மட்டும் கிளிக் செய்துவிடாதீர்கள். இது ஒரு புதிய நூதனமுறை மோசடியாகும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி வழக்குகள்

இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி வழக்குகள்

இந்தியாவில் சைபர் கிரைம் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. NCRB தகவல் படி, இந்தியாவில் 4047 ஆன்லைன் வங்கி மோசடி வழக்குகள், 2160 ஏடிஎம் மோசடி வழக்குகள், 1194 கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி வழக்குகள் மற்றும் 1093 OTP மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது. இப்போது, ​​நாடு முழுவதும் இதுவரை நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றிய மற்றொரு மோசடியும் நடந்து வருகிறது. புதிய மோசடி மக்களை EB கட்டணத்தைக் கட்டும் படி பரிந்துரைக்கிறது.

ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்த பணமும் அபேஸ்!

ஒரே கிளிக்கில் ஒட்டுமொத்த பணமும் அபேஸ்!

மோசடி செய்பவர்கள் மக்களுக்கு தங்களுடைய மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை என்று ஒரு லிங்க் உடன் ஒரு எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள். இந்த லிங்க்கை பொது மக்கள் கிளிக் செய்வதன் மூலம், அவர்களின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் எடுக்கப்படுகிறது. இந்த மின் கட்டண மோசடி, கடந்த பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், பல பயனர்களின் வங்கிக் கணக்குகளை மோசடி செய்பவர்கள் காலி செய்து வருகின்றனர்.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

சைபர் கிரைம் மோசடியில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சைபர் கிரைம் மோசடியில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இதுபோன்ற மோசடிகள் குறித்து அதிக விழிப்புடன் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சில டிப்ஸ்களையும் இந்த பதிவுடன் இணைத்துள்ளோம். சைபர் கிரைம் அதிகாரிகள் ஜார்க்கண்டில் உள்ள ஒரு மாவட்டத்திலிருந்து மோசடி செய்தவர்களைக் கைது செய்துள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் மோசடி லிங்க் வருகிறதா? உஷார்!

SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் மோசடி லிங்க் வருகிறதா? உஷார்!

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது என்பதனால், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளை நீங்கள் ஒருபோதும் கிளிக் செய்யக் கூடாது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். இனி உங்களுக்குத் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களிடம் இருந்து ஏதேனும் லிங்க் அனுப்பப்பட்டால் உஷாராக இருங்கள்.

உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?

இப்படி ஒரு மெசேஜ் வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமா?

இப்படி ஒரு மெசேஜ் வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமா?

குறிப்பாக உங்களுக்கு, "அன்புள்ள நுகர்வோர், உங்கள் முந்தைய மாத பில் புதுப்பிக்கப்படாததால் இன்று இரவு உங்கள் மின்சாரம் நிறுத்தப்படும். உடனே கட்டணத்தைச் செலுத்தப் பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்." என்று குறிப்பிடும் மெசேஜ் வந்தால், அதை முதலில் நம்ப வேண்டாம். கை தவறிக் கூட, இந்த மெசேஜ் உடன் அனுப்பப்படும் லிங்க்கை கிளிக் செய்துவிட வேண்டாம்.

அதிகாரிகள் போல பேசி உங்களை ஏமாற்றுவார்களா?

அதிகாரிகள் போல பேசி உங்களை ஏமாற்றுவார்களா?

பாதிக்கப்பட்டவர்கள் SMS இல் வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்தால், அவர்கள் ஒரு டெலிகாலருக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது அவர்களின் நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்கப்படும் இணையதள பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். இங்கு, உங்கள் பேமேன்டை செலுத்த, உங்களுடைய வங்கி விபரங்கள் கோரப்படும். உங்கள் வங்கி விபரங்களை உள்ளிட்டவுடன் உங்கள் கணக்கில் இருந்து நேரடியாகப் பணம் எடுக்கப்படும் .

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

ஆன்லைன் மூலம் ஒட்டுமொத்த பணத்தையும் திருடிவிடுவார்கள்

ஆன்லைன் மூலம் ஒட்டுமொத்த பணத்தையும் திருடிவிடுவார்கள்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த மோசடிக்காரர்கள் அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு அதிகாரிகள் போல பேசி, உங்கள் வங்கி விபரங்களைச் சேகரித்துக்கொண்டு, பணத்தைத் திருடிவிடுகிறார்கள். இந்த மோசடியில் இதுவரை சிக்கி பணத்தை இழந்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சிக்கலில் சிக்காமல் இருப்பதற்கு மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

என்ன செய்தால் இது போன்ற சிக்கலில் இருந்து தப்பிக்கலாம்?

என்ன செய்தால் இது போன்ற சிக்கலில் இருந்து தப்பிக்கலாம்?

அதிகாரிகள் போல் அல்லது சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மூலம் உங்களை யாரும் தொடர்பு கொண்டால் அவர்களை எப்போதும் நம்ப வேண்டாம். உங்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும், அல்லது உங்கள் ATM கார்டு சேவை நிறுத்தப்படும் என்று பல வழிகளில் உங்களை மோசடி செய்யக் காத்திருக்கின்றனர் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, OTP போன்ற தகவலை உங்களிடம் கேட்டால், நிச்சயமாக அது மோசடிக்கான அறிகுறி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Beware Of EB Bill Scam In India Useful Protection Tips 2022 To Stay Safe From Scammers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X