Just In
- 36 min ago
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- 1 hr ago
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- 14 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 14 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
Don't Miss
- News
வெளுத்து வாங்கும் மழை.. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம்!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Movies
தளபதி 67 பட பூஜையில் லோகேஷ் கொடுத்த ஹின்ட்.. கண்டிப்பா அப்போ இது LCU தானா? சீக்கிரம் சொல்லிடுங்க!
- Sports
"அந்த ரிஸ்க்கை மட்டும் எடுக்கல.. இல்லைனா.." இந்தியாவின் வரலாற்று வெற்றி.. ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உங்க போனை சர்வீஸ்-க்கு தரப்போறீங்களா? இதை செஞ்சுட்டு கொடுங்க.! இல்லாட்டி ரிஸ்க் ஜாஸ்தி.!
உங்கள் கையிலேயே சிறு குழந்தை போல தவழ்ந்து கொண்டிருக்கும், உங்கள் ஸ்மார்ட்போனிற்கு (smartphone) எந்த நேரத்தில் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.! எப்போது வேண்டுமானாலும், உங்களுடைய சாதனம் "திடீரென பழுதடையலாம்" (mobile repair) - இப்படியான நேரத்தில், உங்கள் ஸ்மார்ட்போனில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்ய, நீங்கள் ஒரு சர்வீஸ் சென்டருக்கு (mobile service center)தான் நேரில் செல்ல வேண்டியதுள்ளது.

உங்கள் போனில் இருக்கும் பிரைவேட் டேட்டா மற்றும் தகவல்கள் பத்திரம்.!
இது தான் வழக்கமாக நடக்கும் விஷயமும் கூட, இந்த மாதிரியான நேரங்களில் உங்களுடைய ஸ்மார்ட் போன் அடுத்தவரின் கைகளில் புழங்கப் போகிறது.. ஆம், 'புழங்கப் போகிறது' என்பதை அழுத்தமாகவே தான் கூறுகிறோம்.
இந்த நேரங்களில், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள உங்களுடைய பிரைவேட் தகவல்களைப் (smartphone private data) பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமானது. இதை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சர்வீஸ் சென்டரில் உங்கள் போனை கொடுப்பதற்கு முன்னால் நீங்கள் செய்ய வேண்டிய கட்டாய வேலைகள் இது தான்.!
ஒரு ஸ்மார்ட்போன் சர்வீஸ் சென்டரில் (smartphone service center) உங்களுடைய போனை கொடுப்பதற்கு முன்னால், நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கப் போகிறோம்.
வாருங்கள் அவற்றைப் பார்க்கலாம்.! முதலில் உங்களுடைய ஸ்மார்ட் போனை மூன்றாம் நபரிடம் கொடுக்கும் போது - கட்டாயம் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள டேட்டாக்களை பேக்கப் (mobile data backup) எடுத்து வைப்பது சிறந்தது.

ஏன் உங்கள் போன் டேட்டாவை பேக்-அப் எடுப்பது முக்கியமானது தெரியுமா?
அதிலும், குறிப்பாக சர்வீஸ் சென்டரில் (service center) உங்கள் டிவைஸை கொடுக்கும் போது, இதைச் செய்வது மிகவும் முக்கியமானது.
ஏனெனில், உங்கள் ஸ்மார்ட்போனை சரி செய்யும் பொழுது - சில நேரங்களில் சாப்ட்வேர் ரீசெட் (software reset) செய்ய வேண்டிய சூழ்நிலை கூட உருவாகலாம்.
அந்த தருணத்தில், உங்கள் போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் அளிக்கப்பட்டுவிடும். இதனால், அவற்றை முன்கூட்டியே பேக்கப் எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பானது.

உங்கள் போனில் இருந்து இவற்றை வெளியில் எடுக்க மறக்காதீர்கள்.!
அடுத்தபடியாக, உங்கள் ஸ்மார்ட்போனை சர்வீஸ் சென்டரில் கொடுப்பதற்கு முன்பாக - உங்கள் போனில் இருக்கும் சிம் கார்டை (SIM card) எஜக்ட் செய்ய வேண்டும். அதேபோல், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மெமரி கார்டையும் (SD Memory Card) ரிமூவ் செய்ய வேண்டும்.
பெரும்பாலான மீடியா பைல்கள் (mobile media files) அனைத்தும், உங்களுடைய மெமரி கார்டில் தான் சேவ் (save) செய்யப்பட்டு இருக்கும் என்பதனால், உங்கள் பிரைவேட் தகவல்கள் மற்றும் டேட்டாக்கள் அனைத்தும் அதிகமாக இதில் தான் ஸ்டோர் (private data storage) செய்யப்பட்டிருக்கும்.

இவற்றை ரிமூவ் செய்வது ஏன் பாதுகாப்பானது தெரியுமா?
இவற்றை ரிமூவ் செய்வது மிகவும் பாதுகாப்பானது.
அதிகப்படியான பாதுகாப்பிற்கு - உங்கள் போன் மெமரியில் ஸ்டோரேஜ் (phone memory storage) செய்யப்பட்டுள்ள டேட்டா தகவல்களையும், உங்கள் மெமரி கார்டில் மாற்றிய பின் அந்த கார்டை ரிமூவ் செய்வது மிகவும் சிறப்பானது.
டேட்டாவை பாதுகாப்பது என்ற முடிவுக்கு வந்த பின், கட்டாயம் அவற்றை முழுமையாக பாதுகாப்பது தானே சிறந்தது. அப்போது தானே அந்த பாதுகாப்பிற்கே ஒரு அர்த்தம் கிடைக்கும்.!

இதை நோட் செய்து.. கவனிக்காமல் விட்டுவிட்டால்.. ரிஸ்க் ஜாஸ்தி.!
அடுத்தபடியாக, நீங்கள் செய்ய வேண்டியது - உங்கள் போனின் பின்புறத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் IMEI நம்பர் விபரங்களைத் தனியாக நோட் செய்து வைத்துக் கொள்வது தான்.
ஏனெனில், நீங்கள் சர்வீஸ் சென்டரில், உங்கள் போனை கொடுக்கும் நேரத்தில், உங்கள் ஸ்மார்ட் போன் போலவே அதே மாடலில், அதே நிறத்தில் வேறொரு நபர் அவருடைய போனை கொடுத்திருந்தால்; உங்களுடைய போன் (phone) கைமாற்றப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் போனில் IMEI நம்பர் கண்களுக்கு தெரியவில்லையா? அப்போ இதை செய்யுங்க.!
அதனால், உங்கள் ஃபோனின் உள்ள IMEI விபரங்களை நீங்கள் எப்பொழுதும் நோட் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
உங்கள் போனின் பின்புறத்தில் IMEI விபரங்கள் இல்லை என்றால் உடனே பதற வேண்டாம் மக்களே.. உங்கள் ஸ்மார்ட்போனை எடுத்து, டயல் பேட் சென்று *#06# என்று டைப் செய்து டயல் செய்யுங்கள்.
உடனே! உங்கள் போனிற்கு சொந்தமான IMEI விபரங்கள் டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும். அவற்றைத் தனியாக நோட் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் போனில் கூகிள் அக்கௌன்ட் லாகின் செய்யப்பட்டுள்ளதா? உஷார்.!
உங்கள் போனை சர்வீஸ் சென்டரில் ஒப்படைப்பதற்கு முன்பாக, உங்கள் போனில் லாகின் (Log-in) செய்யப்பட்டிருக்கும் கூகுள் அக்கவுண்ட்ஸ் (Google accounts) கணக்குகளை லாக் அவுட் செய்வது நல்லது.
பிறகு, உங்களுடைய இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற கணக்குகளையும் லாக்அவுட் செய்வது அருமையானது.
முக்கியமான அகௌண்ட்களை லாக் அவுட் (Logout) செய்த பின் உங்களுடைய ஸ்மார்ட்போனை சர்வீஸ் சென்டரில் ஒப்படைப்பது பாதுகாப்பானது.

சென்சிட்டிவ் டேட்டா எதுவும் உங்கள் போனில் உள்ளதா? அப்போ இதை செஞ்சே ஆகணும்.! இல்லாட்டி ரிஸ்க் ஜாஸ்தி.!
அடுத்தபடியாக, உங்களுடைய போனில் - உங்கள் தொடர்பான சென்சிட்டிவ் டேட்டாக்கள் (sensitive mobile data) எதுவும் ஸ்டோர் செய்யப்பட்டிருந்தால்; அவற்றை உங்கள் மெமரி கார்டுக்கு (memory card) மாற்றிய பின், ஒரு முறை உங்கள் போனை மொத்தமாக ஃபேக்டரி ரீசெட் (Factory reset) செய்வது மிகவும் பாதுகாப்பானது.
உங்கள் போன், உங்கள் கண்ட்ரோலில் இல்லாத நேரத்தில் கட்டாயம் ஃபேக்டரி ரீசெட் செய்த பின்பு அவற்றை மற்றவர்களிடம் ஒப்படைப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

எந்த சர்வீஸ் சென்டரில் போனை ஒப்படைக்கப் போகிறீர்கள்?
இந்த அனைத்து விஷயங்களையும் பின்பற்றிய பிறகு உங்கள் ஸ்மார்ட் ஃபோனை எந்த சர்வீஸ் சென்டரில் வழங்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
ஏனெனில் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் கோளாறை சரி செய்யத் தெரிந்த மற்றும் கைதேர்ந்த சர்வீஸ் பார்ட்னர்களிடம் உங்கள் டிவைஸை ஒப்படைப்பது மட்டுமே பாதுகாப்பானது. அதுவே மனநிறைவான தீர்வை வழங்கும்.

செர்டிஃபைட் மொபைல் சர்வீஸ் சென்டரை தேர்வு செய்வது சிறப்பானதா?
வேலை தெரியாத வேலைக்காரர்களிடம் உங்கள் போனை ஒப்படைத்தால், பிற்காலத்தில் உங்கள் ஃபோனில் இன்னும் சில கோளாறுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
இதனால், எப்போதும் செர்டிஃபைட் மொபைல் சர்வீஸ் சென்டரை (certified mobile service center) அணுகுவது மிகவும் சிறப்பானது.
இந்த சிறிய-சிறிய விஷயங்களை, நீங்கள் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டால், உங்களுடைய டேட்டாவும் உங்களுடைய ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470