விரைவில் அம்மா ஸ்மார்ட்போன்..!!

Written By:

தமிழ் நாட்டில் இயங்கி வரும் மகளிர் சுய உதவி குழுக்களின் பயிற்றுநர்களுக்கு விரைவில் அம்மா ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விரைவில் அம்மா ஸ்மார்ட்போன்..!!

தமிழக சட்டமன்றத்தில் இன்று இது குறித்த திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து முதற்கட்டமாக சுமார் 20,000 மொபைல் போன்களை வழங்க சுமார் ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது நாள் வரை தமிழ் நாட்டில் இயங்கி வரும் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்ந்த அனைத்து கணக்கு வழக்குகளும் பல்வேறு பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய திட்டத்தின் கீழ் தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்றை பிரித்யேகமாக உருவாக்கி முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட கைபேசிகள் அம்மா கைபேசி எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read more about:
English summary
Amma Mobile Phone Scheme in Tamil Nadu. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot