Home
Mobile

மார்கெட் காலி.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போனானது இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கவே, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டன. இப்போது, ரேம், ஸ்டோரேஜ் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ வி70 எப்இ விலை (Vivo V70 FE Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.37,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.40,999 ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,999 ஆக இருக்கிறது. டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரியின் எக்ஸ் தளத்தில் இந்த விலைகள் கசிந்துள்ளன. ஆனால், பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளன.

மார்கெட் காலி.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. 90W பாஸ்ட் சார்ஜிங்!

விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): 200 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா கிடைக்கிறது. 120 டிகிரி வைடு ஆங்கிள் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 85 எம்எம் போர்ட்ராய்டு, 23 எம்எம் போர்ட்ராய்டு உள்ளிட்ட மல்டிபிள் போகல் லென்த் கிடைக்கிறது.

மான்சூன் ப்ளூ (Monsoon Blue), நர்தெர்ன் லைட்ஸ் பர்பிள் (Northern Lights Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. டார்க்னெஸ் க்ளோவ் டெக்னாலஜி (Darkness Glow Technology) பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆகவே, யூவி மற்றும் சன்லைட் எக்ஸ்போசருக்கு பிறகு லோவ் லைட்டிங்கின்போது மிளிரக்கூடியாக பேக் பேனல் கிடைக்கிறது.

ஏஐ மேஜிக் வெதர் (AI Magic Weather), ஏஐ மேஜிக் லேண்ட்ஸ்கேப் (AI Magic Landscape), ஏஐ ஃபோர்-சீசன் போர்ட்ராய்டு (AI Four-Season Portrait), ஏஐ ப்ளோரல் ஃபிளெஸ்ஸிங் (Al Floral Blessing) ஆகிய ஏஐ கேமரா பீச்சர்களை கொடுத்து உள்ளது. மேலும், டெலிபோட்டோ என்ஹான்ஸ்மெண்ட் கொண்ட 30X சூப்பர்ஜூம் (SuperZoom) கிடைக்கிறது.

90W ஃபிளாஸ்சார்ஜிங் (FlashCharge) கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 60 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ள முடியும். கேமிங், ஹீட் கன்ட்ரோல்களுக்கு ஏற்ப மல்டி-சீனாரியோ பைபாஸ் சார்ஜிங் (Multi-Scenario Bypass Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 6.83 இன்ச் 1.5K அல்ட்ரா கிளியர் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது.

இதில் 1900 நிட்ஸ் எச்பிஎம் ஸ்கிரீன் பிரைட்னஸ், 449 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் & IP69 ரேட்டிங் கொண்ட டாப்-கிரேடு டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust and Water Resistance) உள்ளது. 48 மணி நேரங்களுக்கு ரெயின் (மழை) ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும்.

அண்டர்வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography) கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கிறது. மேலும், கேமிங் ஹைப்பர்சென்ஸ் ஆடியோ (Gaming HyperSense Audio) கிடைக்கிறது. ஓர்ஜின் ஐலேண்ட் (Origin Island), பிரைவேட் ஸ்பேஸ் (Private Space) கிடைக்கிறது. 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

இந்த பீச்ச்ர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. ஏப்ரல் 2ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட், அமேசான் மற்றும் விவோ இந்திய ஆகிய தளங்களில் கிடைக்க இருக்கிறது. ரூ.40,000 பட்ஜெட்டில் பிரீமியம் கேமரா பீச்சர்களுக்கு இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் பக்கா தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V70 FE With 200MP Camera 7000mAh Battery Price RAM Storage Leaked Ahead Of Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X