பொளந்து கட்டிய OPPO.. 8000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 12GB ரேம்.. 512GB மெமரி.. எந்த மாடல்?
ஓப்போ கே15 ப்ரோ (OPPO K15 Pro) மற்றும் ஓப்போ கே15 ப்ரோ+ (OPPO K15 Pro+) ஸ்மார்ட்போன்களின் ஸ்டோரேஜ், ரேம், கலர் மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளன. இந்த ஓப்போ கே15 ப்ரோ சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி சீன மார்கெட்டில் ஓப்போ கே15 ப்ரோ சீரிஸ் (OPPO K15 Pro Series) வெளியாக இருக்கின்றன. இந்த வெளியீட்டு தேதி மற்றும் டிசைன் குறித்த ஹிண்ட்டுடன் போஸ்டரை ஓப்போ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து கீக்பெஞ்ச் (Geekbench) வெப்சைட்டில் ஸ்டோரேஜ், ரேம், கலர் மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஓப்போ கே15 ப்ரோ கலர், ஸ்டோரேஜ் (OPPO K15 Pro Colour, Storage): சைபர் விங்க் (Cyber Wing), கோல்டன் லெஜண்ட் (Golden Legend), போட்டோடஸ்ட் (Photodust) மற்றும் ஓர்ஜின் கிரே (Origin Gray) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்க உள்ளது.
ஓப்போ கே15 ப்ரோ+ கலர், ஸ்டோரேஜ் (OPPO K15 Pro+ Colour, Storage): சைபர் விங்க் (Cyber Wing), போட்டோடஸ்ட் (Photodust) மற்றும் ஓர்ஜின் கிரே (Origin Gray) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. முந்தைய மாடலை போலவே 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்க உள்ளது.
ஓப்போ கே15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 7500mAh பேட்டரி கிடைக்க உள்ளது. ஓப்போ கே15 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே கீக்பெஞ்ச் வெப்சைட் வழியாக தெரியவந்துள்ளது. இருப்பினும், சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்ட போதே கசிந்துவிட்டன.
ஆகவே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட்டானது, ஓப்போ கே15 ப்ரோபிளஸ் ஸ்மார்ட்போனில் கிடைக்க உள்ளது. ஓப்போ கே15 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (Octa Core MediaTek Dimensity 8500) சிப்செட் கொடுக்கப்பட உள்ளது.
1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை ஓப்போ கே15 ப்ரோ கொடுக்க உள்ளது. மறுப்புறம், ஓப்போ கே15 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.
இந்த ஓப்போ கே15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க உள்ளது. ஏனென்றால், டர்போ சீரிஸ் மாடல்களாக இவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ப்ரோ மற்றும் ப்ரோ+ மாடல்களாகவே வெளியாகின்றன. இருப்பினும், டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கே13 டர்போ சீரிஸ் போலவே கிடைக்க உள்ளது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுக்க உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதால், ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக பீச்சர்கள் உறுதி செய்யப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








