ஏப்.21 குறிச்சாச்சு.. 200MP + 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 7050mAh பேட்டரி.. புது OPPO போன்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது வெளியீட்டு தேதி, கேமரா பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்திய மார்கெட்டிலும் வெளியாக இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வந்துள்ளது. ஆகவே, ஓரிரு மாதங்களில் வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. ஆனால், சீனா மற்றும் குளோபல் மார்கெட்டில் வெளியான பிறகே இந்தியாவில் வெளியாகும். இதனால், குளோபல் வெளியீட்டு தேதி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நேரத்தில் குளோபல் மற்றும் சீன மார்கெட்டில் ஒரே நேரத்தில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மட்டுமல்லாமல், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ (OPPO Find X9s Pro) மாடலும் வருகிறது.
இதுபோக ஓப்போ பேட் மினி (OPPO Pad Mini) மற்றும் ஓப்போ எக்னோ கிளிப்2 (OPPO Enco Clip2) ஓப்பன் இயர்பட்ஸ் மாடலும் வெளியாக இருக்கிறது. ஆகவே, ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பிறகு இந்திய வெளியீடு குறித்த விவரங்கள் தெரியவரும். மே மாதத்தில் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். ஹாசல்பிளாட் கேமரா சிஸ்டம் கொண்ட மாடல்களாக இருக்கப் போகிறது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் அல்ட்ராவில் பில்ட்-இன் டெலிகன்வெர்டர் (Built-in Teleconverter) கொடுக்கப்பட உள்ளது. ஹாசல்பிளாட் பிராண்டெட் 50 எம்பி 10எக்ஸ் ஆப்டிகல் டெலிபோட்டோ லென்ஸ் (Optical Telephoto Lens) கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. மேலும், டூயல் 200 எம்பி மெயின் கேமரா கொண்ட மாடலாகவும் இருக்கப் போகிறது.
இந்த விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கேமரா பீச்சர்கள் கசிந்துள்ளது. 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் சோனி எல்ஒய்டி901 (Sony LYT901) சென்சார் கிடைக்கிறது. மேலும், ஆப்டில் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 50 எம்பி 10எக்ஸ் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
இதில் ஜேஎன்எல் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 200 எம்பி 3எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Periscope Telephoto) கிடைக்கிறது. இதுபோக 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 2K ரெசொலூஷன் கொண்ட 6.82 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7050mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வருகிறது.


Click it and Unblock the Notifications








