Home
Mobile

மிரளவிட்ட விவோ.. 144Hz டிஸ்பிளே.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 6600mAh பேட்டரி.. 200MP கேமரா.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போனின் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், விவோ நிறுவனமானது, பீச்சர்களை உறுதி செய்ய தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களே இப்போது உறுதி செய்யப்பட்டு உள்ளன.

வருகிற மார்ச் 30 ஆம் தேதி சீன மார்கெட்டில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. அதே தேதியில் விவோ எக்ஸ்300எஸ் (Vivo X300s) ஸ்மார்ட்போன் மற்றும் விவோ பேட்6 ப்ரோ (Vivo Pad6 Pro) டேப்லெட் வெளியாக இருக்கின்றன. இதில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300எஸ் மாடல்களில் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர்கள் கிடைக்கின்றன.

மிரளவிட்ட விவோ.. 144Hz டிஸ்பிளே.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. மாடல்?

400 எம்எம் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் மற்றும் 200 எம்எம் காம்பாக்ட் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கிடைக்கிறது. 200 எம்பி ஜீஸ் ஆப்டிக்ஸ் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 4K 60எப்பிஎஸ் ரெக்கார்டிங் கொடுக்கிறது. ஆகவே, சினிமாடிக் லெவல் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதனாலே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

ஏற்கனவே, ஸ்னாப்டிராகன் சிப்செட், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்களுடன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போது, விவோ நிறுவனமே, அதை உறுதி செய்துள்ளது. இதனிடையே விலை விவரங்கள் கசிந்துள்ளன.

விவோ எக்ஸ்300 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X300 Ultra Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொண்ட மாடலாக இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா வெளியாக இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ரா எக்ஸ்டிஆர் டெக்னாலஜி (Ultra XDR Technology) கொண்ட டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 2K ரெசொலூஷன் மற்றும் பிளாட் டிசைனில் கிடைக்கிறது.

ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் வருவதால், ஜீஸ் மாஸ்டர் கலர் காலிப்ரேஷன் (Zeiss Master Color Calibration) கிடைக்கிறது. 6600mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.19 எம்எம் தடிமன் வருகிறது. 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. குவாட் மைக்ரோபோன் சிஸ்டம் (Quad-microphone System) கிடைக்கிறது.

ஏனென்றால், பிரீமியம் வீடியோ ரெக்கார்டிங் கொண்ட மாடலாக இது இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே இப்போது உறுதி செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே, 200 எம்பி டெலிபோட்டோ மற்றும் 200 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருப்பது உறுதியானது. கிரீன் கலரில் கிடைக்க இருப்பதும், டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர்கள் கூடுதல் விலைக்கு கிடைக்க இருப்பதும் உறுதியானது.

இப்போது, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது மார்கெட்டில் கசிந்த விலை மட்டுமே. விவோ நிறுவனமானது, உறுதி செய்யவில்லை. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை 7,500 சீன யுவானாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.1,02,223 பட்ஜெட்டில் இருக்கும். குளோபல் மார்கெட்டிலும் இதே விலைக்கு விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 Ultra With Snapdragon 8 Elite Gen 5 100W Charging Officially Confirmed Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X