சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!

|

இந்தியாவில், வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் மட்டுமே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே நாளில் ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) உடன் சேர்த்து இன்னொரு ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது!

அதென்ன ஸ்மார்ட்போன்? ஒன்பிளஸ் 11-ஐ போலவே அதுவும் 5ஜி ஆதரவுடன் வருமா? அந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? அதன் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

பிப்.7-ல் அறிமுகமாகும் பலவகையான OnePlus தயாரிப்புகள்!

பிப்.7-ல் அறிமுகமாகும் பலவகையான OnePlus தயாரிப்புகள்!

வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள ஒன்பிளஸின் கிளவுட் 11 நிகழ்வின் (OnePlus Cloud 11 Event) போது ஒன்பிளஸ் 11 5ஜி (​​OnePlus 11 5G), ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 (OnePlus Buds Pro 2) மற்றும் நிறுவனத்தின் முதல் கீபோர்டு மற்றும் ஒன்பிளஸ் டிவி 65 க்யூ2 ப்ரோ (OnePlus TV 65 Q2 Pro) என பல வகையான ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்நிலைப்பாட்டில், அதே நாளில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து மேலுமொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!

அதென்ன ஸ்மார்ட்போன்?

அதென்ன ஸ்மார்ட்போன்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 5ஜி உடன் சேர்த்து ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. இந்த தகவல் அமேசான் இந்தியா வழியாக கிடைத்துள்ளது.

அமேசானின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி மாலை 7:30 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும். இருப்பினும் ஒன்பிளஸ் நிறுவனம் இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை!

OnePlus 11R 5G-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

OnePlus 11R 5G-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர், 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான ஸ்டோரேஜ், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜென் ஓஎஸ் 13 போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்!

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 11ஆரில் 50MP + 12MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை 16MP செல்பீ கேமரா இருக்கலாம். கடைசியாக, இந்த ஸ்மார்ட்போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் Airtel 5G அறிமுகம்! எந்தெந்த ஏரியாக்களில் கவரேஜ் கிடைக்கும்? இதோ லிஸ்ட்!கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் Airtel 5G அறிமுகம்! எந்தெந்த ஏரியாக்களில் கவரேஜ் கிடைக்கும்? இதோ லிஸ்ட்!

OnePlus 11R இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

OnePlus 11R இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

பிரபல டிப்ஸ்டர் முகுல் சர்மா வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமானது ரூ 35,000 - ரூ 40,000 க்குள் இருக்கும்.

இந்த விலை, ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்கலாம்; அது 8ஜிபி ரேம் உடன் வரலாம்.

இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது, அதன் விலை ரூ.40,000 - ரூ.45,000 க்குள் இருக்கலாம்!

OnePlus 11-ன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

OnePlus 11-ன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

ஒன்பிளஸ் 11 ஆனது ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலை விட மலிவானதாக இருக்கும். ஆனால் இதன் விலை ஒன்பிளஸ் 10டி மாடலை விட ரூ.5000 அதிகமாக இருக்கலாம்!

இன்னும் தெளிவாக கூறவேண்டுமென்றால் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.54,999 ஆக இருக்கலாம். இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜின் விலை நிர்ணயமாக இருக்கலாம்.

இதே ஸ்மார்ட்போனின் மற்ற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.59,999 மற்றும் ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்!

அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?

OnePlus 11 5G என்னென்ன அம்சங்களை வழங்கும்?

OnePlus 11 5G என்னென்ன அம்சங்களை வழங்கும்?

- 6.7 இன்ச் QHD+ சாம்சங் LTPO 3.0 AMOLED டிஸ்ப்ளே
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 ப்ரொடெக்ஷன்
- HDR மற்றும் டால்பி விஷன் ஆதரவு

- ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP சோனி IMX890 மெயின் கேமரா (f/1.8 / ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் - OIS)
- 48MP சோனி IMX58 அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் (f/2.2)
- 32MP போர்ட்ரெய்ட் சென்சார்
- முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா (f/2.4)

- ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 13.0
- ஆக்டா-கோர் 4nm ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
- 100W SuperVOOV பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh டூயல் பேட்டரி.

Best Mobiles in India

English summary
2 New OnePlus 5G Smartphones Are Launching In India On February 7th OnePlus 11 and OnePlus 11R

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X