ஒரு நாள் மட்டும் காத்திருங்கள் போதும்! ரூ.10,000க்குள் அறிமுகமாகும் பக்கா ஸ்மார்ட்போன்!

|

Infinix Note 12i ஸ்மார்ட்போனானது நாளை (ஜனவரி 25, 2023) அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கான மைக்ரோசைட் பிளிப்கார்ட் தளத்தில் நேரலையில் வந்திருக்கிறது. இந்த டீஸர் பக்கத்தில் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த போனின் விலை குறித்த விவரங்களும் தெரிய வந்திருக்கிறது.

ஒரு நாள் காத்திருங்கள்: ரூ.10000க்குள் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்!

Infinix Note 12i

Infinix Note 12i ஸ்மார்ட்போனானது முன்னதாக இந்தோனேசிய சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் நாளை இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால் இதன் இந்திய மாடல் சிறிய வடிவமைப்பு மாறுபாடுகளை கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் Flipkart Microsite

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அதன் சமீபத்திய பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக Infinix Note 12i மாடலை நாளை இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டுவர இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் பிரத்யேச சலுகை வழங்கப்படும் என பிராண்ட் குறிப்பிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு

Infinix Note 12i ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் பிரத்யேக மைக்ரோசைட் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்ட XOS 12 மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஃபுல் எச்டி ஸ்ட்ரீமிங் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்பதும் அதற்கான Widevine L1 சான்றிதழைப் பெற்றுள்ளது என்பதும் மைக்ரோசைட்டில் காட்டப்பட்டுள்ளது.

ஒரு நாள் காத்திருங்கள்: ரூ.10000க்குள் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்!

6.7 இன்ச் HD+ AMOLED டிஸ்ப்ளே

பிளிப்கார்ட் தளத்தில் தோன்றிய டீசர் பக்கத்தின் மூலம் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே ஆனது 1,000 nits உச்ச பிரகாச ஆதரவை வழங்குகிறது. இன்ஃபினிக்ஸ் நோட் 12ஐ ஆனது 6ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இதன் ரேம் பவரை 7ஜிபி வரை விரிவாக்கம் செய்ய முடியும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் கூலிங் சிஸ்டம்

Infinix Note 12i ஸ்மார்ட்போனில் கேமிங் ஆதரவுக்கு என டார் லிங்க் மற்றும் கேம் பூஸ்ட் தொழில்நுட்பம் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனை வெப்பம் அடையாமல் பாதுகாப்பதற்கு என குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடிய 10 அடுக்கு கூலிங் சிஸ்டம் இருக்கிறது. இந்த குளிரூட்டும் முறையானது சார்ஜிங் மற்றும் பயன்பாட்டின் போது பேட்டரியை வெப்பமடையாமல் பாதுகாக்கிறது. பேட்டரி அம்சம் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

50எம்பி பிரைமரி லென்ஸ்

Infinix Note 12i கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், 50எம்பி பிரைமரி லென்ஸ் உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெப்த் லென்ஸ் மற்றும் ஏஐ லென்ஸ் ஆதரவுகள் இதில் இருக்கும் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடியோ கால் மற்றும் செல்பி அழைப்புகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி கேமரா ஆதரவு இருக்கும்.

Infinix Note 12i விலை

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தோனேசியாவில் Infinix Note 12i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனானது ஆல்பைன் ஒயிட், ஃபோர்ஸ் பிளாக் மற்றும் மெட்டாவர்ஸ் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது.

ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்

Infinix Note 12i ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்தோனேசியாவில் IDR 2,199,000 (தோராயமாக ரூ.12,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000க்குள் இருக்கும் என இன்ஃபினிக்ஸ் குறிப்பிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. சிறந்த ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டால் Infinix Note 12i நல்ல தேர்வாக இருக்கும். ரூ.10,000க்கு கீழ் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Smartphone Launch under Rs 10,000 on January 5? Infinix Note 12i Microsite Appears on Flipkart!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X