அப்போ இதுவும் உறுதியா! இனி நெருங்கக் கூட முடியாது: பட்ஜெட் விலையில் Samsung Galaxy A34 5G!

|

சாம்சங் நிறுவனம் ஏ சீரிஸ் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனான Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போனை விரைவில் சந்தையில் கொண்டு வருவதற்கான பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது முன்னதாக பல சான்றிதழ் தளங்களில் எக்ஸினோஸ் செயலி உடன் காணப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி

தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி இன் கொரிய மாறுபாடு கீக்பெஞ்ச் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மாடல் எண் M-A346N உடன் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் காணப்படுகிறது. இது MediaTek Dimensity 1080 SoC ஐக் குறிக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 920 சிப்செட்டின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். ரெட்மி நோட் 12 தொடரில் இதே சிப்செட் தான் பொருத்தப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

Samsung Galaxy A34 5G ஸ்மார்ட்போன் கீக்பெஞ்சின் சிங்கிள் கோர் சோதனையில் 778 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதேபோல் மல்டி கோர் சோதனையில் 2332 புள்ளிகளை பெற்றிருக்கிறது. கீக்பெஞ்ச் பட்டியலின் படி, சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் பொருத்தப்பட்டிருக்கிறது.

6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே

6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே

Samsung Galaxy A34 5G இன் ரெண்டர்கள் முன் மற்றும் பின் வடிவமைப்பு இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் டியர் டிராப் நாட்ச் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஆதரவு இடம்பெறும் என கூறப்படுகிறது.

48 எம்பி முதன்மை கேமரா

48 எம்பி முதன்மை கேமரா

பின்புற வடிவமைப்பு குறித்து வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என கூறப்படுகிறது. Samsung Galaxy A34 5G ஆனது 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட் சென்சார் மற்றும் ஒரு மேக்ரோ லென்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் இடம்பெறும் எனவும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ ஸ்கின் மூலம் இது இயக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

விரைவில் அறிமுகமாக வாய்ப்பு

விரைவில் அறிமுகமாக வாய்ப்பு

அதேபோல் Samsung Galaxy F14 வரும் நாட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஃப் 13 இன் மேம்பட்ட பதிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஃப் தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தைக்கு கொண்டு வர தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கேலக்ஸி எஃப்13க்கு அடுத்தப்படியாக கேலக்ஸி எஃப் 14 அறிமுகமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன் ஆகும்.

5ஜி இணைப்பு இருக்குமா?

5ஜி இணைப்பு இருக்குமா?

91Mobiles இன் அறிக்கைபடி, Galaxy F14 ஜனவரி 2023 முதல் வாரத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் தொடர் ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பைப் பெறுமா என்பது இதுவரை உறுதி செய்யவில்லை. ஆனால் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் இது பொதுவான அம்சமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A34 5G Appeared in GeekBench: Best Budget Smartphone Ready to Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X