மாஸ் என்ட்ரிக்கு ரெடியாகும் Realme 10.! கம்மி விலையில இந்த போனை தான் எல்லாரும் வாங்க போறாங்க.!

|

ரியல்மி நிறுவனம் அதனுடைய அடுத்த புதிய ஸ்மார்ட்போன் மாடலான Realme 10 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய Realme 10 டிவைஸ் இன்று இந்தியாவில் மதியம் 12:30 மணிக்கு (IST) அறிமுகப்படுத்தப்படும்.

டாப் கிளாஸ் அம்சத்துடன் வருகிறதா புது Realme 10
இந்த சாதனம் 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியா டெக் ஹீலியோ G99 சிப்செட் மற்றும் 5,000mah பேட்டரி போன்ற அம்சங்களுடன் வருகிறது. Realme 10 இன் வெளியீட்டை நீங்கள் நேரலையில் பார்க்க ஆர்வமாக இருந்தால், நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்துள்ளீர்கள். இந்த சாதனத்தைப் பற்றிய அனைத்தையும் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

மாஸ் என்ட்ரிக்கு ரெடியாகும் Realme 10.! கம்மி விலைல பெஸ்ட் போன்.!

Realme 10 உடன் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
ரியல்மி நடத்தும் இந்த நிகழ்வை எப்படி லைவ் பார்ப்பது? இந்த புதிய Realme 10 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை என்ன? இதன் அம்சங்கள் என்ன? இதன் விலைக்கு இதில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் கிடைக்கிறது? இதன் முழு சிறப்பம்ச விபரங்கள் என்ன என்பது போன்ற அணைத்து தகவலையும் தெளிவாக பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் நேரடியாக விஷயத்திற்குச் செல்லலாம்.

Realme 10 அறிமுக நிகழ்வை எப்படி லைவ் பார்ப்பது?
Realme 10 வெளியீட்டு நிகழ்வு இன்று (ஜனவரி 9, 2023) இந்தியாவில் மதியம் 12:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிகழ்வு Realme இந்தியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள் மற்றும் Realme இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் YouTube சேனல் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும். Realme 10 அறிமுகத்தை லைவ் பார்ப்பதற்கான மிகவும் வசதியான முறை YouTube வழியாக இருக்கும், எனவே உங்களுக்காகக் கீழே உள்ள YouTube URL லிங்க்-ஐ இங்கே வழங்கியுள்ளோம்.

Realme 10 சிறப்பம்சம்
- 6.5-இன்ச் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே
- பன்ச் ஹோல் கட் அவுட் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் v5
- மீடியா டெக் ஹீலியோ G99 சிப்செட்
- 8GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS2.2 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI 3.0 ஸ்கின்
- டூயல் கேமரா செட்டப்
- 50MP பிரைமரி கேமரா + 2MP B&W போர்ட்ரெய்ட் கேமரா
- 16MP செல்ஃபி கேமரா
- 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5,000mAh பேட்டரி

இந்தியாவில் Realme 10 எதிர்பார்க்கப்படும் விலை
Realme 10 ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ. 14,000 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையிலும் அறிமுகமாகும், இதன் விலை நாட்டில் ரூ. 16,000 ஆக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. Realme 10 சாதனம் க்ளாஸ் வைட் மற்றும் ரஷ் பிளாக் வண்ண விருப்பங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 10 Launch Live Expected Price and Specification Details in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X