Home
Mobile

இதுக்குத்தான வெயிட் பண்ணோம்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. BYBASS சார்ஜிங்.. 12MP AI ரியர் கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு ஏற்ற பக்கா மாடலாக ரியல்மி சி83 5ஜி (Realme C83 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, வெளியீட்டு தேதி, விற்பனை மற்றும் பேட்டரி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போது, சிப்செட், அன்டுடு ஸ்கோர் உள்ளிட்ட விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், மலிவான விலைக்கு பிரீமியம் லுக் கொடுக்கும்படி மாடல்கள் வெளியாகி வருகின்றன. இந்த லிஸ்ட்டில் ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் சேர்ந்துள்ளது. மார்ச் 7 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருப்பதால், அடுத்தடுத்து பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

இதுக்குத்தான வெயிட் பண்ணோம்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆகவே, இந்த தளத்தில் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. பேட்டரி, டியூரபிலிட்டி, டிஸ்பிளே மற்றும் டிசைன் விவரங்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருப்பது தெரிகிறது. ஏனென்றால், பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், பைபாஸ் சார்ஜிங் மற்றும் விசி கூலிங் கொண்ட மாடலாகவும் இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

ரியல்மி சி83 5ஜி அம்சங்கள் (Realme C83 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (Octa Core MediaTek Dimensity 6300 5G) சிப்செட்டை இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஏஐ பூஸ்ட் (AI Boost), 560,000+ அன்டுடு ஸ்கோர் கொண்டுள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டு உள்ளது. 12 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) கிடைத்துள்ளது.

ஆகவே, 18 ஜிபிக்கான ரேம் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். 10 ஆப்களை பேக்கிரவுண்ட்டில் வைத்து இருந்தால், லேக் ப்ரீ அவுட்புட் கிடைக்கும். 5335எம்எம் ஏர்ப்ளோவ் விசி (5334mm Airflow VC) கூலிங் சிஸ்டம் கொடுத்து உள்ளது. ஃப்ளக்ஸ் என்ஜின் (Flux Engine) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) கிடைக்கிறது.

மேலும், பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொண்ட மாடலாகவும் இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏஐ பவர் சேவிங் மோட் உள்ளது. ஆகவே, நாள் முழுவதும் பயன்படுத்தினாலும், பேட்டரி மீதம் இருக்கும். ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாகவும் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும். 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அல்ட்ரா பிரைட் டிஸ்பிளே கொண்டுள்ளது.

மேலும், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்து உள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் கொடுத்து இருக்கிறது. பக்கா டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷனை இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இதுபோக IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைத்து உள்ளது.

இந்த ரெசிஸ்டன்ஸ் கிடைப்பதால், வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி ஏஐ மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு செகண்டரி கேமரா சப்போர்ட் உள்ளது. ஆகவே, டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்ட மாடலாக இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. டூயல் வியூ வீடியோ மோட் கொடுத்து உள்ளது.

மேலும், ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் உள்ளது. ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 8.45 எம்எம் தடிமன் கிடைக்கிறது. 212 கிராம் எடை உள்ளது. ப்ளூமிங் பர்பிள் (Blooming Purple) மற்றும் ஸ்ப்ரவ்டிங் கிரீன் (Sprouting Green) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. ரூ.17,000 பட்ஜெட்டில் இந்த ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme C83 5G With MediaTek Dimensity 6300 5G Chipset Launching on March 7 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X