டிஸ்பிளேல ஓட்டை இருக்கவங்களாம் ஓரம் போங்க.! நம்மாளு வேற ரகம்.! கேமரா கண்ணுக்கே தெரியாது.!

|

முழு HD டிஸ்பிளே.. புள் HD+ டிஸ்பிளேனுலாம் சொல்லுவாங்க.. ஆனா அது எல்லாமே உண்மையாவே முழு டிஸ்பிளே தானானு கேட்டா? ஆமானு தான் எல்லோரும் பொய் சொல்லுவாங்க.. ஆனா, விஷயம் அப்படி இல்லை.! இனி அப்படிலாம் பொய் சொல்லி ஏமாத்த முடியாது.!

உண்மையாவே ஒரு முழு டிஸ்பிளே போன் என்றால் எப்படி இருக்கனும் தெரியுமா?

உண்மையாவே ஒரு முழு டிஸ்பிளே போன் என்றால் எப்படி இருக்கனும் தெரியுமா?

ஏன்னா? உண்மையாவே ஒரு முழு டிஸ்பிளே போன் என்றால் அதில் செல்பி கேமராவிற்கான நாட்ச் ஓட்டைகளே இருக்கக் கூடாது.

அப்படியான டிஸ்பிளேவை தான் நாம் முழு புள் டிஸ்பிளே போன் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.

அப்படி, எந்த நாட்ச் ஓட்டையும் இல்லாத ஒரு தரமான ஸ்மார்ட்போன் இப்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Nubia RedMagic 8 Pro உலகளவில் அறிமுகம்.!

Nubia RedMagic 8 Pro உலகளவில் அறிமுகம்.!

அது தான் 'நுபியா ரெட்மேஜிக் 8 ப்ரோ' (Nubia RedMagic 8 Pro) சாதனம். இந்த தொடரை நிறுவனம் உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய கேமிங் ஸ்மார்ட்போன், புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC ஐக் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த சாதனம் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2 ப்ளூடூத் இயர்போன்ஸ் அல்லது ஸ்பீக்கரை ஒரே நேரத்தில் போனில் இயக்கலாமா? இதை ட்ரை செய்யுங்க.!2 ப்ளூடூத் இயர்போன்ஸ் அல்லது ஸ்பீக்கரை ஒரே நேரத்தில் போனில் இயக்கலாமா? இதை ட்ரை செய்யுங்க.!

நுபியா ரெட்மேஜிக் 8 ப்ரோ எத்தனை மாடல்களில் அறிமுகமாகிறது?

நுபியா ரெட்மேஜிக் 8 ப்ரோ எத்தனை மாடல்களில் அறிமுகமாகிறது?

அதே வடிவமைப்பில் இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தைகளில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில மாற்றங்களை இப்போது பெற்றுள்ளது.

நுபியா உலகளாவிய மாடல்களுக்கான வன்பொருளிலும் சில மாற்றங்களைக் கொண்டுள்ளது. நுபியா ரெட்மேஜிக் 8 ப்ரோ மேட் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.

நுபியா ரெட்மேஜிக் 8 ப்ரோ+ வாய்டு மாடலா? அப்படியென்றால் என்ன?

நுபியா ரெட்மேஜிக் 8 ப்ரோ+ வாய்டு மாடலா? அப்படியென்றால் என்ன?

அதேசமயம் நுபியா ரெட்மேஜிக் 8 ப்ரோ+ வாய்டு (void) மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் ஒரே ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Nubia RedMagic 8 Pro விலை, விவரக்குறிப்புகள் மற்றும் பிற விவரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாங்க.

அடுத்த மாசம் புது போன் வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்.! மிரட்டல் வருகை.!அடுத்த மாசம் புது போன் வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்.! மிரட்டல் வருகை.!

Nubia RedMagic 8 Pro விலை

Nubia RedMagic 8 Pro விலை

RedMagic 8 Pro Matte ஆனது 12GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விலை $650 ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 53,200 ஆகும்.

அதேபோல் Void மாறுபாட்டின் 16GB ரேம் மற்றும் 512 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை $800 ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.65,500 மட்டுமே.

இந்தியாவுக்கு இந்த போன் எப்போது வரும்?

இந்தியாவுக்கு இந்த போன் எப்போது வரும்?

அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த போன்கள் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இது இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GPay, PhonePe, Paytm-ல் பணத்தை மாற்றி அணுப்பிவிட்டீர்களா? இப்படி செஞ்சா ரிட்டர்ன் வந்துடும்.!GPay, PhonePe, Paytm-ல் பணத்தை மாற்றி அணுப்பிவிட்டீர்களா? இப்படி செஞ்சா ரிட்டர்ன் வந்துடும்.!

6000mAh பேட்டரியா? இது பவர்புல் கேமிங் போன் தானா?

6000mAh பேட்டரியா? இது பவர்புல் கேமிங் போன் தானா?

உலகளாவிய வேரியண்ட் மாடல்கள் பெறும் மிகப்பெரிய மாற்றம் பேட்டரி துறை ஆகும். இரண்டு மாடல்களும் 6000mAh பேட்டரி மற்றும் 65W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.

ஒப்பிடுகையில், சீனாவில் உள்ள RedMagic 8 Pro ஆனது 80W பாஸ்ட் சார்ஜிங்குடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதேசமயம் Pro+ மாடல் 165W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

அடேங்கப்பா.! உலகத்தின் சக்தி வாய்ந்த சிப்செட் கூட இருக்கா?

அடேங்கப்பா.! உலகத்தின் சக்தி வாய்ந்த சிப்செட் கூட இருக்கா?

மீதமுள்ள விவரக்குறிப்புகள் ஒரே மாதிரியானவை. இரண்டு மாடல்களும் Snapdragon 8 Gen 2 SoC கொண்டுள்ளது. வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க பல குளிரூட்டும் வழிமுறைகள் உள்ளன.

ஒரு இன்பில்ட் பேன், ஒரு ஏர் பைப், ஒரு 3D ஐஸ்-கிரேடு டூயல் பம்ப் மற்றும் 10 அடுக்குகள் வரை வெப்ப-சிதறல் பொருட்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த Xiaomi போனுக்காக இன்னும் எவ்வளவு நாள் வெயிட் செய்யணும்? டைமிங் இது தானா?இந்த Xiaomi போனுக்காக இன்னும் எவ்வளவு நாள் வெயிட் செய்யணும்? டைமிங் இது தானா?

உத்து - உத்து பார்த்தாலும் செல்பி கேமராவ உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.!

உத்து - உத்து பார்த்தாலும் செல்பி கேமராவ உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.!

இந்த டிவைஸ் 6.8' இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதம், 960Hz தொடு மாதிரி வீதம் மற்றும் 1300 nits பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இது அண்டர் ஸ்கிரீன் டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. இதன் படி, டிஸ்பிளேவின் அடியில் 16 எம்பி முன் கேமரா மறைக்கப்பட்டுள்ளது. இது கேமிங் பேட் உடன் வருகிறது.

இந்த போனை வாங்க நீங்க ரெடியா?

இந்த போனை வாங்க நீங்க ரெடியா?

இதில் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளது. 50 எம்பி சாம்சங் ஜிஎன்5 பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் ஆகியவற்றுடன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பையும் போன்கள் கொண்டுள்ளது.

இந்த சாதனங்கள் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான RedMagic OS 6.0 இல் இயங்குகின்றன. இதை வாங்க உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்று உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Nubia RedMagic 8 Pro Price and Specifications Details Went Live After Global Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X