Just In
- 6 min ago
உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!
- 9 min ago
OnePlus 11R விலை விவரம் வெளியானது: இனி அறிமுக தேதி சொன்னால் மட்டும் போதும்.!
- 1 hr ago
சூப்பர் டிவிஸ்ட்! அதிக விலைக்கு வருமென்று நினைத்த Samsung Galaxy S23 போனின் வியப்பூட்டும் விலை நிர்ணயம்!
- 1 hr ago
இது மனுஷனா ரோபோவா? கட்டுமான பணியில் ரோபோட் ஆதிக்கம்.! நம்ம பியூச்சர் பியூஸ் போய்விடுமோ?
Don't Miss
- News
இழுத்து அணைத்து.. இண்டீசண்ட் மாணவர்! டீசண்டாக நடந்து கொண்ட அபர்ணா பாலமுரளி! இப்படி ஒரு தண்டனையா?
- Lifestyle
உங்க குழந்தை இவ்வுளவு நேரம் தூங்குவதுதான் அவங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம் தெரியுமா?
- Movies
அதுக்கு நான் செட் ஆக மாட்டேன்.. அண்ணனுடன் கம்பேர் செய்துக் கொண்ட நடிகர் கார்த்தி!
- Automobiles
காருக்குள் திடீர்ன்னு அழுகுன முட்டை நாத்தம் அடிக்குதா! அப்ப இதான் மாத்துனா தான் அது சரியாகும்!
- Sports
போட்டி கட்டணத்தில் 60% அபராதம்.. முதல் ODIல் இந்திய அணி தவறு செய்ததாக குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
- Finance
Google: 12000 ஊழியர்கள் பணிநீக்கம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆல்பபெட்..!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
ஓ.. இதுனால தான் இந்த போனுக்கு இவ்வளவு டிமாண்ட்-ஆ.! ஒரே கலர்ல வேர்ல்ட் பேமஸ் ஆகிடுச்சே.!
சுமார் 94 ஆண்டுகளாக தொலைத்தொடர்புத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தையும் வாடிக்கையாளர்களையும் தக்கவைத்திருக்கும் மோட்டரோலா (Motorola) நிறுவனம் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு மொபைல் போன்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட் போன் வடிவமைப்பிலும் சாதிச்சிட்டு வருதுணுதான் சொல்லனும்.
சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட மோட்டொ எட்ஜ் 30 ஃப்யூஷன் (Moto Edge 30 Fusion) ஸ்மார்ட் போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த மோட்டோ எட்ஜ் 30 ஃப்யூஷனின் புதிய வேரியண்ட் ஒன்றை அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வேரியண்ட் டிசம்பர் 2022ல் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இப்போது அதன் இந்தியப் பயணத்தை ஆரம்பம் செய்யவுள்ளது.

ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் இந்த புதிய ஸ்மார்ட் போன் வேரியண்ட் பிரத்தியேகமாக ஃப்ளிப்கார்ட் (Flipkart) இணையதளத்திலும் மற்ற சில்லறைக் கடைகளில் கிடைக்கும் என்று மோட்டொரோல இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதற்கு முன் கடைகளில் கிடைத்த மோட்டொ எட்ஜ் 30 ஃப்யூஷன் ஸ்மார்ட் போன் காஸ்மிக் க்ரே (Cosmic Grey) மற்றும் சோலார் கோல்ட் (Solar Gold) என்ற இரு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஸ்மார்ட் போன் 6.55 இன்ச் FHD+ வளைந்த டிஸ்ப்லேவை கொண்டுள்ளது. இந்த திரை 144 Hz ரிஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (Brightness), HDR10+ சப்போர்ட்டுடன் 10-பிட் (Bit) ஸ்க்ரீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மோட்டொ எட்ஜ் 30 ஃப்யூஷன் ஸ்மார்ட் போனின் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா க்ளாஸ்ஸால் (Corning Gorilla Glass) பாதுகாக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆண்ட்ராய்ட் 12 தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த மோட்டொ எட்ஜ் 30 ஃப்யூஷன் ஸ்மார்ட் போன் 8 GB LPDDR5 RAM மற்றும் 128 GB UFS 3.1 உள் சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட் போன் இரண்டு தலைமுறை பழமையான Snapdragon 888+ 5G SoC சிப் செட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆண்ட்ராய்ட் 13, 14 ஆகியவற்றிற்கு மேம்படுத்தப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட் போனில் மூன்று பின்பக்க கேமராக்களும் ஒரு செல்ஃபி கேமராவும் இருக்கிறது. முன்பக்க பிரைமரி கேமராக்களில் OIS கொண்ட 50MP கேரமாவும், அதனுடன் சேர்த்து 13MP செகண்டரி அல்ட்ரா வைட் ஆங்கில் லென்ஸ் (Ultra-wide angle lens) மற்றும் 2MP டெப்த் சென்சார் (Depth Sensor) உள்ளது. இதனுடன் 32MP செல்ஃபி கேமரா வசதியும் உள்ளது.
68W அதிவேக பாஸ்ட் சார்ஜின் தன்மை கொண்ட 4400mAh கொண்ட பேட்டரியை இந்த ஸ்மார்ட்போன் பேக் செய்கிறது. இவற்றுடன் சேர்த்து திரையின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் (in-built fingerprint scanner), IP52, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, Wi-Fi 6E, திங்க் ஸீல்ட் (ThinkShield), டால்பி ஆடம் அம்சம் கொண்ட டுயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (dual stereo speakers with Dolby Atmos), GPS மற்றும் NFC ஆகியவையும் உள்ளது.
இதே அம்சங்களுடன் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் புதிய வேரியண்ட் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரே வித்தியாசம், அது மெஜன்தா (Magenta) நிறத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மிகவும் பளிச்சென்ற தோற்றம் கொண்டுள்ள இந்த புதிய வேரியண்ட் ஸ்மார்ட் போன் மோட்டோ எட்ஜ் 30 ஃப்யூஷன் விவா மெஜந்தா (Moto Edge 30 Fusion Viva Magenta) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நிற ஸ்மார்ட் போன் பான்டோன் (Pantone) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 39,999-ற்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகவிருக்கும் இந்த ஸ்மார்ட் போனை இன்டஸின்ட் வங்கியின் க்ரெடிட் கார்ட் (InduaInd Bank Credit Card) பயன்படுத்தி வாங்குவோருக்கு 3,500 ரூபாய் உடனடி தள்ளுபடி உள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470