மார்ச் 6-ல் வரும் புது மோட்டோரோலா 5ஜி போன்.. என்னென்ன அம்சங்கள்.. ஆண்ட்ராய்டு அப்டேட்கள் எத்தனை வருடம்?
இந்தியாவில் வரும் மார்ச் 6-ம் தேதி மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த போனின் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு மூன்று வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும். பின்பு ஐந்து வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 70 Fusion Specifications): 6.78-இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் 10 பிளஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 7s Gen 4 chipset) உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தைக் கொடுக்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் +256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் 50எம்பி சோனி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
தரமான டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த போன் வெளிவரும்.

அதுவும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா போன் அறிமுகமாகும். இந்த போன் இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. பான்டோன் ப்ளூ சர்ஃப் (டர்க்கைஸ்), பான்டோன் கண்ட்ரி ஏர், பான்டோன் சில்ஹவுட் நிறங்களில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்
அதேபோல் 7000mAh பேட்டரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் வெளிவரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802 11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.30,000-க்கு கீழ் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credits: motorola, techlusive


Click it and Unblock the Notifications








