Home
Mobile

இந்த தேதிகளை குறிச்சு வச்சிக்கோங்க.. மார்ச் 2026 இல் அறிமுகமாகும் 8 புதிய போன்கள்!

2026 பிப்ரவரி மாதத்தில் பெரிய எண்ணிக்கையிலான புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் மற்றும் கூகுள் பிக்சல் 10ஏ உள்ளிட்ட சில தரமான போன்கள் அறிமுகம் ஆகின. ஷாவ்மீ 17 சீரீஸும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இருப்பினும், 2026 மார்ச் மாதம் ஆனது (ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு) இன்னும் பெரிய உற்சாகமான மாதமாக அமைய போகிறது. ஹானர் தொடங்கி, நத்திங், ஆப்பிள், மோட்டோரோலா மற்றும் போக்கோ உள்ளிட்ட பல பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடுகளால் மார்ச் 2026 நிரம்பி வழியப்போகிறது. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

மார்ச் 2026 இல் அறிமுகமாகும் 8 புதிய போன்கள்!

1. ஹானர் மேஜிக் வி6 மற்றும் 2. ஹானர் ரோபோ போன் - இவ்விரு ஸ்மார்ட்போன்களும் மார்ச் 1, 2026 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போன் ஆனது ஹானர் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆகும். இது மேம்பட்ட ட்யூரபிலிட்டி, அதிக பேட்டரி திறன் மற்றும் இன்னும் மெலிதான வடிவமைப்பில் கவனம் செலுத்துகிறது.

மேஜிக் வி6 ஸ்மார்ட்போன் ஆனது 200எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 120W வேகமான சார்ஜிங் கொண்ட 7,150mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் நிறுவனத்தின் கூற்றுப்படி இது முழு அளவிலான நீர்ப்புகாப்பு பாதுகாப்பு மற்றும் பீடோ சாட்டிலைட் கம்யூனிகேஷனுக்கான ஆதரவை ஆகியவைகளையும் கொண்டிருக்கும்

மேலும் மார்ச் 1 ஆம் தேதி அன்று நடக்கும் MWC 2026 நிகழ்வில் ஹானர் நிறுவனம் அதன் ரோபோ போனையும் வெளியிடும். நினைவூட்டும் வண்ணம் கடந்த ஜனவரி 2026 இல் நடந்த CES 2026 நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனின் ஒரு முன்னோட்டத்தை ஹானர் நிறுவனம் வழங்கியது. ஹானர் இதை தொழில்துறையின் முதல் "ரோபோ போன்" என்று அழைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மறைக்கப்பட்ட ரோபோ-கை கிம்பல் உள்ளது.

3. நத்திங் போன் 4ஏ மற்றும் 4. நத்திங் போன் 4ஏ ப்ரோ - இவ்விரு ஸ்மார்ட்போன்களும் மார்ச் 5, 2026 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன. ரீடிசைன் செய்யப்பட்ட கிளிஃப் பார் லைட்டிங் சிஸ்டம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்கள் மிட்-ரேன்ஜ் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ப்ரோ மாடல் ஆனது இந்த ஆண்டு பெரிய மேம்படுத்தல்களை பெறுவதாகத் தெரிகிறது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 140எக்ஸ் வரை ஜூம் திறன்களுடன் 50MP சோனி ப்ரைமரி கேமராவை கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிக பயன்பாட்டின் போது வெப்பச் சிதறலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட யூனிபாடி அலுமினிய பிரேமையும் கொண்டிருக்கலாம்

டிஸ்பிளேவை பொறுத்தவரை நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அதன் முன்னோடியை விட சற்று பெரியதாகும், வேகமானதும் கூட. மற்றொரு சாத்தியமான கூடுதலாக இது ஒரு Glyph Matrix லைட்டிங் சிஸ்டமையும் பெறலாம். அறியாதோர்க்ளுக்கு இது நத்திங் நிறுவனத்தின் சிக்னேச்சர் LED நோட்டிபிகேஷன்டிசைன் ஆகும்.

சுவாரசியமாக ஸ்டாண்டர்ட் நத்திங் போன் 4ஏ மாடலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி இது மூன்று 50MP ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். இது 0.6x அல்ட்ரா-வைட் வியூ மற்றும் 70x வரை ஜூம் செய்வதை ஆதரிக்கலாம்.

செல்பீகள் மற்றும் வீடியோ கால்புகளுக்கு இது 32MP கேமராவை பேக் செய்யலாம். இது லைட்டிங் விளைவுகளுக்காக 63 மினி-LEDகளால் ஆன கிளிஃப் பார் டிசைன் உடன், நத்திங்கின் டிரான்ஸ்பரென்ட் டிசனையும் தக்கவைத்து கொள்ளலாம். இது 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்

5. ஆப்பிள் ஐபோன் 17இ - இது மார்ச் 4, 2026 அன்று அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆப்பிள் இதை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்வில் ஆப்பிள் அதன் பட்ஜெட் விலை ஐபோன் 17இ மற்றும் பிற தயாரிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஏ19 சிப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஐபோன் 17 மாடலை இயக்கும் அதே சிப் ஆகும், ஆனால் டவுன்லாக் செய்யப்பட்ட சிபியு மற்றும் ஜிபியு-வை கொண்டிருக்கலாம்.

6. மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் - இது 7, மார்ச் 2026 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. விலையை தவிர, எட்ஜ் 70 ஃப்யூஷன் பற்றிய எல்லாவற்றையும் மோட்டோரோலா ஏற்கனவே டீஸ் செய்துள்ளது. இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு 1.5K டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட், 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7,000mAh பேட்டரி, 50MP சோனி LYT-710 ப்ரைமரி சென்சார், 13MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் குறிப்பிடப்படாத மேக்ரோ கேமரா ஆகியவைகளை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் 32MP செல்பீ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

7. போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் 8. போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் - இது மார்ச் 2026 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்விரு மாடல்களுமே பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவை இலக்காக கொண்டு அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 8 Upcoming Smartphone Launches in March 2026 iPhone 17e Motorola Edge 70 Fusion and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X