பொங்கலுக்கு புது போன் கன்ஃபார்ம்.. Samsung-ன் இந்த பவர்-பேக்டு 5G Phone மீது ரூ.3500 ப்ரைஸ் கட்!

|

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பவர்-பேக்டு 5ஜி ஸ்மார்ட்போன் (5G phone) ஒன்றின் மீது ரூ.3500 என்கிற விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? விலைகுறைப்பிற்கும் பிறகு இந்த 5ஜி போனின் "ஸ்டேட்டஸ்" என்ன? நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இதோ விவரங்கள்:

2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதுமே ரூ.3500 ப்ரைஸ் கட்!

2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதுமே ரூ.3500 ப்ரைஸ் கட்!

ரூ.3500 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது - சாம்சங் நிறுவனத்தின் மிட்ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் (Mid-range 5G Smartphone) ஆன சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி (Samsung Galaxy M53 5G) ஆகும்.

மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் மீது தற்போது ரூ.3,500 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் - இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே இந்த விலைக்குறைப்பை பெற்றுள்ளன!

ஆசையை தூண்டும் விலை.. ஆர்டர் போட வைக்கும் ஸ்பெக்ஸ்! ஜன.18-ல் அறிமுகமாகும் 2 மாஸ் ஆன 5G போன்கள்!ஆசையை தூண்டும் விலை.. ஆர்டர் போட வைக்கும் ஸ்பெக்ஸ்! ஜன.18-ல் அறிமுகமாகும் 2 மாஸ் ஆன 5G போன்கள்!

பழைய விலை VS புதிய விலை:

பழைய விலை VS புதிய விலை:

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் 6GB+128GB மற்றும் 8GB+128GB என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் முறையே ரூ.26,499 மற்றும் ரூ.28,499 க்கு அறிமுகமானது

தற்போது இந்த இரண்டு வேரியண்ட்களின் மீதும் ரூ.3,500 ப்ரைஸ் கட் கிடைக்கிறது. ஆக 6ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.22,999 க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.24,999 க்கும் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூ, க்ரீன் மற்றும் ப்ரவுன் கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி-ஐ நம்பி வாங்கலாமா?

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி-ஐ நம்பி வாங்கலாமா?

கடந்த 2022 ஆம் ஆண்டு, மே மாத வாக்கில் அறிமுகமாகி இருந்தாலும் கூட, சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி இன்னமும் ஒரு பவர் பேக்டு ஸ்மார்ட்போனாகவே உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி அறிந்த பின்னர், நீங்களே அதை ஒற்றுக்கொள்வீர்கள். சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இதோ:

சைலன்ட் ஆக.. பொங்கல் சிறப்பு விற்பனையை ஆரம்பித்த Amazon.. என்னென்ன ஆபர்களை மிஸ் பண்ணவே கூடாது?சைலன்ட் ஆக.. பொங்கல் சிறப்பு விற்பனையை ஆரம்பித்த Amazon.. என்னென்ன ஆபர்களை மிஸ் பண்ணவே கூடாது?

என்ன டிஸ்பிளே?

என்ன டிஸ்பிளே?

கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 1080x2400 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.7 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸையும் பேக் செய்கிறது.

என்ன ப்ராசஸர்?

என்ன ப்ராசஸர்?

இது மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட் மூலம் இயங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 8GB வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன், 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜை விரிவாக்கும் ஆதரவும் உள்ளது!

சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!

என்னென்ன கேமராக்கள்?

என்னென்ன கேமராக்கள்?

கேமராக்களை பொறுத்தவரை, இதில் குவார் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

அதாவது 108எம்பி மெயின் சென்சார் (எஃப்/1.8 அபெர்ச்சர்) + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா (எஃப்/2.2 அபெர்ச்சர்) + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா (எஃப்/2.4 அபெர்ச்சர்) ஆகியவற்றை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் எஃப்/2.2 அபெர்ச்சர் உடனே கூடிய 32MP செல்பீ கேமரா உள்ளது.

என்ன பேட்டரி?

என்ன பேட்டரி?

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரி உள்ளது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 4, ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் , டால்பி அட்மோஸ், 12 பேண்டுகளுக்கான ஆதரவை வழங்கும் 5ஜி, வேப்பர் கூலிங் சேம்பர், டூயல் சிம் ஆதரவு போன்றவைகளை வழங்குகிறது!

Best Mobiles in India

English summary
Heavy Price Cut On Samsung Best Mid Range 5G phone Check New Price of Galaxy M53 5G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X