ஒவ்வொரு WhatsApp சாட்-ஆ பாஸ்வோர்ட் போட்டு லாக் பண்ண முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!

|

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் (smartphone) இல்லாத நபர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். முக்கியமான தகவல்களை சேமித்து வைப்பது, முதல் வங்கி பரிவர்த்தனை வரை அனைத்துமே ஸ்மார்ட் போன் மூலம் இப்போது நாம் செய்துவிடலாம்.

ஸ்மார்ட்போன் நமது கைகளுக்கு வந்த உடன், நம்முடைய வேலைகள் எவ்வளவு சுலபமாக ஆனதோ இல்லையோ.. அனைவருமே ஒரு பெரியளவு ஆபத்துக்குள் சிக்கிக் கொண்டோம் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக, பிரைவசி (privacy) என்பது இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக தனிப்பட்ட தகவல்கள் உள்ள பைல்களையும், சேட்டுகளையும் பத்திரப்படுத்தி வைப்பது மிகவும் அவசியமாக உள்ளது.

ஒவ்வொரு WhatsApp சாட்-ஆ பாஸ்வோர்ட் போட்டு லாக் பண்ண முடியுமா? முடியும்

முந்தைய காலங்களில் மொத்த போனையும் பாஸ்வேர்ட் போட்டு லாக் (password lock) செய்து வைக்கும் வசதி மட்டுமே இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக், குறிப்பிட்ட ஆப்ஸ்களை மட்டும் லாக் (password lock apps) செய்து கொள்வது போன்ற அம்சம் கொண்டுவரப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட சாட்களை மட்டும் லாக் (chat password lock apps) செய்து வைத்துக் கொள்ளும் அம்சம் கொண்ட செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கியமான தகவல் தொழில்நுட்ப செயலி என்றால் அது வாட்ஸ் ஆப் (WhatsApp) தான். குடும்பத்தார், நண்பர்களுடன் உரையாடுவது தாண்டி தொழில் ரீதியான உரையாடல்களும் இப்போது வாட்ஸ்அப்பில் நிகழ ஆரம்பித்து விட்டது. உங்கள் தனிப்பட்ட சாட்களையோ, தொழில் ரீதியான உரையாடல்களையோ மற்றவர்கள் பார்க்காமல் இருக்க இனி வாட்ஸ்அப் மொத்தத்தையும் லாக் போட்டு (WhatsApp lock) வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் வாட்ஸ்அப் சாட்களை (WhatsApp chat) மட்டும் தனியாக லாக் செய்து கொள்வதற்கு ஏதுவாக பல தர்ட் பார்டி (Third Party) செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) தற்போது செயல்பாட்டில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் "சேட்லாக்கர் ஃபார் வாட்ஸ் சாட் (Chat Locker for Whats Chat)" என்ற ஆப்ஸ் ஆகும். இந்தத் தர்ட் பாட்டி ஆப்ஸ், கூகுள் பிளே ஸ்டோரிலேயே டவுன்லோட் செய்து கொள்ள கிடைக்கிறது. இதைப் பயன்படுத்துவதும் மிகவும் எளிது.

ஒவ்வொரு WhatsApp சாட்-ஆ பாஸ்வோர்ட் போட்டு லாக் பண்ண முடியுமா? முடியும்

- உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோரை ஓபன் செய்து அதில் 'சாட் லாக்கர் ஃபார் வாட்ச் சாட்' என்று டைப் செய்யவும்.
- அந்த செயலியை ஓபன் செய்து டவுன்லோட் (download) கொடுத்து இன்ஸ்டால் செய்யவும்.
- பிறகு அந்த ஆப்பை ஓப்பன் செய்து நான்கு இலக்க எண் கொண்ட பாஸ்வேர்டை (Password) என்டர் செய்யவும்.
- இதுதான் நீங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று நினைக்கும் சாட்களை பாஸ்வோர்ட் போட்டு வைக்க உதவும் ஆப்ஸ் ஆகும்.
- அதன் பிறகு நீங்க எந்தெந்த கான்டாக்ட்ஸ்களின் (Contacts) சாட்களை பாஸ்வோர்ட் லாக் போட வேண்டும் என்று தேர்வு செய்யுங்கள்.
- எந்த சாட்டை லாக் செய்ய நினைக்கிறீர்களோ அவற்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அவ்வளவுதான்.. அந்த சாட் லாக் செய்யப்பட்டுவிடும்.
- இனி நீங்கள் whatsapp-ஐ ஓப்பன் செய்து நீங்கள் பாஸ்வேர்ட் ப்ரொடெக்ட் (Password Protect) செய்து வைத்த காண்டாக்டின் சாட்டை ஓபன் செய்யும் போது உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.
- நீங்கள் சரியான பாஸ்வோர்டை கொடுத்தால் மட்டுமே உங்களால் அந்த சேட்டை ஓபன் செய்து அதில் இருக்கும் செய்திகளைப் பார்க்க முடியும்.
- இனி நீங்கள் தைரியமாக உங்கள் போனை நண்பர்களிடமும் உங்கள் குடும்பத்தாரிடமும் கொடுக்கலாம்.
- இது வாட்ஸ் அப் நிறுவனத்திற்குச் சொந்தமானது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
- இது ஒரு தர்ட் பார்ட் செயலி என்பதால் இதை இன்ஸ்டால் செய்து யூஸ் செய்வது உங்கள் தனிப்பட்ட விருப்பமே.
- தர்ட் பார்ட்டி ஆப்ஸ்களை எப்போதும் சற்று கவனத்துடன் எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது நல்லது.

Best Mobiles in India

English summary
Is it possible to lock every WhatsApp chat with a password

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X