குழந்தைங்க சொல் பேச்சு கேட்கலையா? போன் யூஸ் பண்றாங்களா? அப்போ இதை செய்ங்க.!

|

சிறியவர் (kids) முதல் பெரியவர் (adults) வரை அனைவரும் இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் (smartphone) பயன்படுத்தி வருகின்றனர். நமக்கு இருக்கும் பெரும்பாலான நேரத்தை நாம் இப்போது இந்த ஸ்மார்ட் போனில் தான் செலவு செய்கிறோம். அது அலுவலக வேலையாக இருந்தாலும் சரி.. அல்லது பொழுது போக்க நோக்கத்திற்காக (entertainment) இருந்தாலும் சரி.. ஏராளமான நேரங்களில் நமது கைகளில் இந்த ஸ்மார்ட்போன் தான் விளையாடுகிறது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு - ஸ்மார்ட்போன் கூட அப்படி தானே.!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு - ஸ்மார்ட்போன் கூட அப்படி தானே.!

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்கள்.! அதேபோல் தான் நம்முடைய கையோடு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனையும் அதிகமான நேரம் பயன்படுத்தினால் சில தீமைகள் ஏற்படக்கூடும். இந்த தகவல் பல காலமாக கூறப்பட்டு வருகிறது.

இருப்பினும் யாரும் இதை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை. குறிப்பாகச் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இப்பொழுது ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால், பெற்றோர்களுக்கு தான் பயம் ஏற்படுகிறது.

எவண்டா இந்த ஸ்மார்ட்போனை கண்டுபிடிச்சது..!

எவண்டா இந்த ஸ்மார்ட்போனை கண்டுபிடிச்சது..!

குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள் என்று கூறினாலும் - சொல் பேச்சைக் கேட்க மாட்டார்கள்.. அடம்பிடிக்கிறார்கள்.!

சில நேரங்களில் இது பெற்றோர்களைக் கடுப்படையச் செய்கிறது. "எவண்டா இந்த ஸ்மார்ட்போனை கண்டுபிடிச்சது" என்று கடுப்பில் கத்திய நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இனி டீசென்ட்டாக இப்படி ஸ்கிரீன் டைம் செட்டிங்கை மாற்றி விடுங்கள்.

இது பபுள்-கம் இல்லை டிஸ்பிளே தான்.! இழுக்க-இழுக்க விரியும் புது Samsung ஸ்கிரீன் அறிமுகம்.!இது பபுள்-கம் இல்லை டிஸ்பிளே தான்.! இழுக்க-இழுக்க விரியும் புது Samsung ஸ்கிரீன் அறிமுகம்.!

ஸ்மார்ட்போன் ரொம்ப யூஸ் பண்ணாதே என்று இனி கதற வேண்டாம்.!

ஸ்மார்ட்போன் ரொம்ப யூஸ் பண்ணாதே என்று இனி கதற வேண்டாம்.!

ஸ்கிரீன் டைம் செட்டிங்கை (smartphone screen time settings) மாற்றுவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஆப்ஸை, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே (app timer) பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்த நினைத்தால் - உங்கள் குழந்தைகள் அதை பயன்படுத்த முடியாது.

இது சில பெரியவர்களுக்கும் பொருந்தும். இனி "ஸ்மார்ட்போன் ரொம்ப யூஸ் பண்ணாதே.!" என்று கூறுவதற்குப் பதிலாக; இப்படி ஸ்கிரீன் டைம் செட்டிங்கை (screen time setting) மாற்றி அமைத்து விடுங்கள்.

ஒரே அலுத்து.. லாங் பிரஸ் செய்ங்க போதும்.!

ஒரே அலுத்து.. லாங் பிரஸ் செய்ங்க போதும்.!

ஸ்கிரீன் டைம் செட்டிங்கை எப்படி மாற்றி அமைப்பது என்பதை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் நீங்கள் எந்த ஆப்ஸில் டைமிங் செட் செய்ய (apps timing) வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போன் மெனுவிற்குச் (smartphone menu) சென்று, அந்த மொபைல் ஆப்ஸை (mobile apps) லாங் பிரஸ் செய்யவும்.

இப்பொழுது உங்களுக்குக் காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து ஆப்ஸ் இன்போ (Apps Info) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

செவ்வாயில் பனிப்பொழிவு - NASA.! பூமி போல உறைந்து நிறம் மாறுகிறதா ரெட் பிளானட்.!செவ்வாயில் பனிப்பொழிவு - NASA.! பூமி போல உறைந்து நிறம் மாறுகிறதா ரெட் பிளானட்.!

டைம்மர் நேரத்தை எப்படி தேர்வு செய்வது?

டைம்மர் நேரத்தை எப்படி தேர்வு செய்வது?

இப்போது ஆப் இன்ஃபோ என்ற ஆப்ஷன் கீழ் ஸ்க்ரோல் செய்தால், ஸ்கிரீன் டைம் (Screen time) என்று காண்பிக்கப்படும். அந்த விருப்பத்தை கிளிக் செய்யவும்.

பின்பு, அதில் காண்பிக்கப்படும் ஆப் டைமர் (App timer) என்பதை கிளிக் செய்து, இந்த ஆப்ஷனை பயன்படுத்த எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணமாக, இப்பொழுது வாட்ஸ் அப்பை லாங் பிரஸ் செய்து ஆப்ஸ் இன்ஃபோ உள்ளே சென்று ஸ்கிரீன் டைம் கிளிக் செய்து ஆப் டைமர் கிளிக் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை.!

இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை.!

இப்பொழுது வாட்ஸ் அப்பை நீங்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று டைமர் செட் செய்து ஓகே கிளிக் செய்ய வேண்டும்.

அவ்வளவுதான், இனி உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவரோ அல்லது குழந்தைகளோ - இனி வாட்ஸப்பை திறந்து பயன்படுத்த நினைத்தால் ஒரு நாளைக்கு ஒட்டுமொத்தமாக வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மொபைல் பேசி வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பகீர் ரிப்போர்ட்.!மொபைல் பேசி வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பகீர் ரிப்போர்ட்.!

மீண்டும் அந்த ஆப்ஸை எப்படி ரீசெட் செய்வது?

மீண்டும் அந்த ஆப்ஸை எப்படி ரீசெட் செய்வது?

மீண்டும் அவர்கள் பயன்படுத்த நினைத்து ஆப்ஸை கிளிக் செய்தாலும் ஆப்ஸ் திறக்காது. உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது என்று காண்பிக்கப்படும்.

டைம்மரை மீண்டும் ரீசெட் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் ஆப்ஸை லாங் பிரஸ் செய்து சேஞ்ச் டைமர் (change timer) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் டைம் சேஞ்ச் டைமர் என்பதை கிளிக் செய்து, டைமிங் மாற்றி அமைக்க வேண்டும்.

இனி குழந்தையுடன் ஸ்மார்ட்போனும் உங்கள் கட்டுப்பாட்டில்

இனி குழந்தையுடன் ஸ்மார்ட்போனும் உங்கள் கட்டுப்பாட்டில்

இப்பொழுது டைம் அருகில் 00 என்ற விருப்பத்தை இரண்டு பக்கத்திலும் தேர்வு செய்து விட்டால் உங்களுடைய டைமர் கேன்சல் செய்யப்படும். அதற்குப் பின் இயல்பாக நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த ஆப்ஸை திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வருஷம் இந்த Redmi 12C போனை தான் எல்லாம் போட்டிபோட்டு வாங்க போறாங்க.! ஏன்னா விலை கம்மி.!இந்த வருஷம் இந்த Redmi 12C போனை தான் எல்லாம் போட்டிபோட்டு வாங்க போறாங்க.! ஏன்னா விலை கம்மி.!

இந்த அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகள் அதிகமாக யூஸ் செய்யும் ஆப்ஸ்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை வழங்கி அவர்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to setup screen timing for all apps on smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X