இரவு முதல் காலை வரை செல்போன் கேம் விளையாட தடை.! சினா அறிவிப்பு.!

|

இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக நேரம் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 6ஆண்டுகளில் இந்த செல்போன் வீடீயோ கேம் தாக்கம் மிகவும் அதிகம் என்று கூறலாம்.

 குழந்தைகள்

குழந்தைகள்

இந்நிலையில் சீனாவில் உள்ள குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் பல்வேறுகட்டுப்பாடுகளை விதித்துள்ளது, அது என்னவென்று முழுமையாகப் பார்ப்போம்.

ஆன்லைன் கேம்களை விளையாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் கேம்களை விளையாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி 18வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஆன்லைன் கேம்களை விளையாட
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, இந்த வயதினர் இத்தகைய விளையாட்டுகளுக்கு ஆன்லைனில் பணப் பறிமாற்றம் செய்யவும் பல்வேறு விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

டொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு! என்ன இது புதுசா?டொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு! என்ன இது புதுசா?

அரசு செய்தி தொடர்பாளர்

அரசு செய்தி தொடர்பாளர்

குறிப்பாக ஆன்லைன் மூலம் விளையாடப்படும் வீடியோ கேம்களக்கு அந்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாவதாக தெரியவந்துள்ளது, எனவே பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது சீனா. குறிப்பாக இந்த ஆன்லைன் வீடியோ கேம் மூலம் மனநலம் பாதிப்பு ஏற்படும் ஆபயாம் உள்ளது எனவும், உடல்நலத்தை பாதுகாக்கும்வகையில் ஆன்லைன் வீடியோ கேம்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து இந்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீன பல்கலைகழகம்

சீன பல்கலைகழகம்

தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடுவதால் நோய் பாதிப்பு வரும் என்று கடந்த ஆண்டில் உலக சுகாதார மையம்கூறியது. இந்த ஆன்லைன் கேம் மூலம் வரும் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்றால், தங்களது பள்ளி மற்றும் குடும்பத்தினர்மீது அதிக அக்கறை காட்டாமல் தனித்து இருக்கவே விரும்புவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் மேலும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட சீன பல்கலைகழகம் இந்த நோயால் அதிகளவில் ஆண்களே பாதிப்படைவதாக தெரிவித்திருந்தது.

சத்தமின்றி ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?சத்தமின்றி ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

 3மணிநேரங்களும் மட்டுமே இவர்கள் விளையாடலாம்

3மணிநேரங்களும் மட்டுமே இவர்கள் விளையாடலாம்

எனவே தான் சீனா தற்சமயம் புதிய விதிமுறை கொண்டுவந்துள்ளது, அது என்னவென்றால், இரவு 10மணி முதல் மறுநாள் காலை 8மணி வரை 18வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் கேம்கள் விளையாடக் கூடாது எனவும், வாரநாட்களில் அதிகபட்சம் 90நிமிடங்களும் வார இறுதிநாட்களில் அதிகபட்சமாக 3மணிநேரங்களும் மட்டுமே இவர்கள் விளையாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கும் பல காட்டுப்பாடு

நிறுவனங்களுக்கும் பல காட்டுப்பாடு

அதேசமயம் வீடியோ கேம்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் பல காட்டுப்பாடுகளை விதித்துள்ளது சீனா , இது போன்று கட்டுப்பாடுகள் அனைத்து இடங்களிலும் வந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

Best Mobiles in India

English summary
China Introduces Restrictions On Video Games For Minors: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X