ஏப்.15 ரெடி.. ஒன்னு கேமரா கிங், இன்னொன்னு பேட்டரி கிங்.. ஒரே நாளில் 2 புதிய OPPO போன்கள் அறிமுகம்!
ஒப்போ (Oppo) நிறுவனமானது 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ள தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த ஸ்மார்ட்போன்கள் - ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி (Oppo F33 Pro 5G) மற்றும் ஒப்போ எப்33 5ஜி (Oppo F33 5G) மாடல்கள் ஆகும்.
அறிமுக தேதியுடன், ஒப்போ நிறுவனமானது ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி-யின் வடிவமைப்பு, முக்கிய அம்சங்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கும், அதனுடன் ரிங் எல்இடி ஃப்ளாஷ் உடனான ரெக்டாங்குலர் கேமரா மாட்யூல் டிசைனை கொண்டிருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி மற்றும் ஒப்போ எப்33 5ஜி அறிமுக தேதி: ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி மற்றும் ஒப்போ எப்33 5ஜி ஆகிய 2 மாடல்களை உள்ளடக்கிய புதிய ஒப்போ எப்33 சீரீஸ் ஆனது ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 3 கலர்களில் வாங்க கிடைக்கும்: மிஸ்டி பாரஸ்ட் (Misty Forest), ஸ்டார்ரி ப்ளூ (Starry Blue) மற்றும் பேஷன் ரெட் (Passion Red). இந்த ஸ்மார்ட்போனில் OV50D40 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமராவும், 2 மெகாபிக்சல் டெப்த் கேமராவும் இருக்கும் என்றும் ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி-யில் GC50F6 சென்சார், எப்/2.0 அபர்ச்சர், 18மிமீஃபோகல் லெங்த் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் கூடிய 100 டிகிரி பீல்ட் ஆப் வ்யூ உடனான 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஃப்ரண்ட் கேமராவும் இருக்கும். மேலும், டூயல்-வியூ வீடியோ மற்றும் கலர்ஃபுல் ஃப்ரண்ட் ஃபில் லைட் அம்சங்களும் இதில் இருக்கும்.
மேலும் ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் நேச்சுரல் லைட் (Natural Light), பிளாஷ்லைட் ரிம் லைட் (Flashlight, Rim Light) மற்றும் ஸ்டூடியோ லைட் (Studio Light) போன்ற கேமரா எஃபெக்ட்டுகளும், ஏஐ போர்ட்ரெயிட் க்ளோ அம்சமும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கலர்ஓஎஸ் வெர்ஷனில் இயங்கும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
டிசைன் குறித்த மற்ற உறுதிப்படுத்தல்களை பொறுத்தவரை, ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ரிங் எல்இடி ஃப்ளாஷ் மற்றும் இரண்டு கேமரா லென்ஸ்களை உள்ளடக்கிய செவ்வக ரெக்டாங்குலர் ரியர் கேமரா மாட்யூல் இருக்கும். பேனலின் கீழ் மையத்தில் ஒப்போ பிராண்ட் பெயர் காணப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் பிளாட் ஆன பேக் பேனல் மற்றும் பிளாட் ஆன ஃப்ரேமுடன் வரும்.
இறுதியாக, ஒப்போ எப்33 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69Kரேட்டிங் உடன் வரும் என்பதையும் ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போனின் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கட்டுப்பாடுகள் போனின் வலது பக்கத்தில் உள்ளன; இடது பக்கம் எதுவும் இல்லாமல் , க்ளீன் ஆக உள்ளன.
ஒப்போ எப்33 5ஜி மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளே இடம்பெறலாம். மேலும் இது 50எம்பிஏ செல்பீ கேமராவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன் கூடிய பெரிய 7000mAh பேட்டரி இடம்பெறலாம். ஸ்டோரேஜை பொறுத்தவரை, ஒப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








