ஏப்.9 முதல் SALE.. 9000mAh பேட்டரி, IP69K உடன் புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
ஒன்பிளஸின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி அதன் அறிமுகத்திற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அது ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போன் ஆகும். இது ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று இரவு 7 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எப்போது விற்பனை? என்னென்ன அம்சங்கள்? என்ன விலை? இதோ விவரங்கள்:
ஏப்ரல் 7 ஆம் தேதி ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை நடந்த பின்னர் ஏப்ரல் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அமேசான் இந்தியாவிலும் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதால், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தி விட்டது. முதல் மற்றும் முக்கிய அம்சம் - இதன் மிகப்பெரிய 9000mAh பேட்டரி ஆகும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்தால், அது 2.5 நாட்களுக்கும் மேலான பேட்டரி லைஃப்பை வழங்கும்.
வடிவமைப்பை பொறுத்தவரை, முந்தைய மாடலில் இருந்த பில் ஷேப்ட்டு ரியர் கேமரா செட்டப்பிற்கு பதிலாக, ஒன்பிளஸ் நோர்த் 6 ஸ்மார்ட்போனில் ஸ்கொயர் ஷேப்ட்டு ரியர் கேமரா செட்டப் இடம்பெற்றுள்ளது. அதாவது இது ஒன்பிளஸ் 15 மாடலில் இருந்து இன்ஸ்பையர் ஆனது போல் தெரிகிறது. ஒன்பிளஸ் 15 மாடலில் இருந்து "எடுக்கப்பட்ட" மற்றொரு அம்சம் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்பிளே ஆகும்.
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பழைய ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனிலுள்ள ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டின் "இயல்பான" நெக்ஸ்ட் ஜெனரேஷன் சிப்செட் ஆகும். ஆக முந்தைய மாடலை விட சிபியு மற்றும் ஜிபியு செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்களும் இடம்பெறும். பழைய ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் IP65 ரேட்டிங் மட்டுமே இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி லிடியா ப்ரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32எம்பி செல்பீ கேமரா ஆகியவைகள் உள்ளன.
இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம்: ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டீசர்களில், ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் 5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.31,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது
மேலோட்டமாக ஒப்பிட்டு பார்த்தால், அதாவது கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிட்டு பார்த்தால், புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை அதிகமாகவே இருக்கும். ஆனால் உலகளாவிய மெமரி சிப் பற்றாக்குறையால் நிலவும் சூழ்நிலைகளை புரிந்துகொண்டால், இது பெரிய விலை அதிகரிப்பு அல்ல என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications








