முரட்டு 5ஜி போனை இறக்கிய VIVO.. ஏப்.9 முதல் ஆபர் விலையில் SALE.. 7000mAh பேட்டரி, 200MP கேமரா, IP69!
விவோ (VIVO) நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக விவோ வி70 எப்இ 5ஜி (Vivo V70 FE 5G) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை ? என்ன ஆபர்கள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
விவோ வி70 எப்இ 5ஜி விலை: இந்தியாவில் விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ.40,999 மற்றும் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விவோ வி70 எப்இ 5ஜி விற்பனை: விவோவின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் - மான்சூன் ப்ளூ மற்றும் நார்தர்ன் லைட்ஸ் பர்பிள் ஆகிய 2 கலர்களில் விவோவின் அதிகாரப்பூர்வ இணையதளம், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக முன்பதிவு செய்ய கிடைக்கிறது. இது ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் நாட்டில் விற்பனைக்கு வரும்.
விவோ வி70 எப்இ 5ஜி சேல் ஆபர்கள்: விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்னுடன் வாங்கும்போது, ஏஎன்சி வசதியுடன் கூடிய விவோ டிடபுள்யூஎஸ் 3இ இயர்பட்ர் மாடல் ஆனது ரூ.1,499 என்கிற தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், யெஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில், 10 சதவீதம் வரை கேஷ்பேக் அல்லது உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் 10 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களையும் தேர்வு செய்யலாம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்களையும் பெறலாம். கூடவே வி-ஷீல்டு ஸ்கிரீன் பாதுகாப்பிற்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி, ரூ.399-க்கு பைபேக் ஆப்ஷன் மற்றும் ஜியோ வழியாக 18 மாதங்களுக்கு 2000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற கூடுதல் பலன்களும் கிடைக்கும்.
விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1,900 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- HDR10+ சான்றிதழ்
- 6.83-இன்ச் 1.5K (2800×1260 பிக்சல்ஸ்) OLED டிஸ்பிளே
- 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7360-டர்போ சிப்செட்
- 12GB வரையிலான LPDDR5 ரேம்
- 512GB வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 6
- 6 ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்கள்
- எப்/1.88 அபெர்ச்சர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 200 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- எப்/2.2 அபெர்ச்சர், 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் ஆரா லைட் ஆதரவுடன் கூடிய 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- AI மேஜிக் வெதர், AI மேஜிக் லேண்ட்ஸ்கேப் மற்றும் AI ஃபோர்-சீசன் போர்ட்ரெய்ட் போன்ற கேமரா அம்சங்கள்
- AI ஆதரவுடனான 30x சூப்பர் ஜூம் வசதி
- செல்பீ கேமராவை சுற்றியுள்ள Origin Island அம்சம்
- கேமிங் ஹைப்பர்சென்ஸ் ஆடியோவுடன் கூடிய சிமெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்ஸ்
- பேக் பேனலில் உள்ள டார்க்னஸ் க்ளோ டெக்னாலஜி (புற ஊதா ஒளி அல்லது சூரிய ஒளியில் பட்ட பிறகு, குறைந்த வெளிச்சத்தில் பேக் பேனல் மென்மையாக ஒளிரும்)
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- நீருக்கடியில் புகைப்படம் எடுப்பதற்கான ஆதரவு
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு
- 7,000mAh பேட்டரி
- 5ஜி, 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ், பைடூ, க்ளோனாஸ், கலிலியோ, QZSS, நாவிக் மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 163.7×76.2x7.59 மிமீ
- எடையில் சுமார் 200 கிராம்


Click it and Unblock the Notifications








