Home
Mobile

OnePlus கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல.. 200MP Samsung டெலிபோட்டோ கேமராவுடன் புது போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் இன்று (ஏப்ரல் 7) அதன் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி (OnePlus Nord 6 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ள நிலையில்.. "அடடா இந்த நேரத்தில் இப்படி ஒரு அப்டேட் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க!" என்று கூறும்படியாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அது ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போனை கேமரா குறித்த தகவல் ஆகும். ஒன்பிளஸ் 16 அதன் கேமரா செட்டப்பில் ஒரு தெளிவான மேம்பாட்டை கொண்டுவர உள்ளது. சைனீஸ் டிப்ஸ்டர் ஆன ஸ்மார்ட் பிகாச்சு வழியாக வெளியான புதிய லீக்கின்படி, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறக்கூடும்.

OnePlus கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல.. 200MP Samsung டெலிபோட்டோ!

இதன் சென்சார், சாம்சங்கின் எச்பி5 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எச்பி5 சென்சார் ஆனது ரியல்மி ஜிடி 8 ப்ரோ போன்ற போன்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸை பொறுத்தவரை, இது முந்தைய ஜெனரேஷன் ஸ்மார்ட்போன்களில் இருந்த குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக இருக்கும்.

முன்னதாக வெளியான பிளாக்ஷிப் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் கேமரா செட்டப்பில் ஜூம் வசதிதான் மிகவும் பலவீனமான பகுதி என்று பயனர்கள் தெரிவித்துள்ளனர், குறிப்பாக நடுத்தர ஃபோக்கல் லென்ஸ்களுக்கு அப்பால் இது பலவீனமாக உள்ளது. ஆக 200எம்பி போன்ற அதிக ரெசல்யூஷன் கொண்ட பெரிஸ்கோப் சென்சாருக்கு மாறுவது, அத்தகைய சூழல்களில் - துல்லியத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்த அதிக வாய்ப்பை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

டெலிஃபோட்டோவுடன் சேர்த்து, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் ப்ரைமரி மற்றும் அல்ட்ராவைடு கேமராக்களுக்கு இரண்டு 50எம்பி சென்சார்கள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலான ஃபிளாக்ஷிப் போன்கள் தற்போது பின்பற்றும் அதே கேமரா செட்டப்பை போலவே உள்ளது. அதாவது, லென்ஸ்கள் முழுவதும் ஒரே மாதிரியான ரெசல்யூஷன், மற்றும் "வெளிப்படையான பலவீனங்கள்" குறைவாக இருப்பது!

ஒன்பிளஸைப் பொறுத்தவரை, ப்ரைமரி கேமரா பொதுவாக சிறப்பாகவே செயல்பட்டுள்ளது, ஆனால் லென்ஸ்களுக்கு இடையிலான இடைவெளி மிகவும் தெளிவாக தெரிந்தது. 200எம்பி கேமரா என்கிற இந்த எதிர்பார்க்கப்படும் கேமரா செட்டப் ஆனது "அந்த வேறுபாட்டை" குறைக்க ஒன்பிளஸ் நிறுவனம் முயற்சிப்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 1.5கே டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில அறிக்கைக, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 200ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை அடையக்கூடும் என்று கூறுகின்றன, இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன், 2என்எம் செயல்முறையில் உருவாக்கப்பட்ட குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட்டில், LPDDR6 ரேம் உடன் இணைந்து இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த காம்பினேஷன் - செயல்திறன் மற்றும் ஆற்றல் சேமிப்பில் நல்ல மேம்பாடுகளை குறிக்கிறது. மேலும் இதில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், ண்ட்ராய்டு 17 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 17 ஆகிய அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரலாம்? சீனாவில் இதன் விலை சுமார் CNY 5,000 (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.67,600) முதல் தொடங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது முந்தைய மாடல்களை விட இதன் விலை சற்றே அதிகமாக இருக்கும். அறிமுகத்தை பொறுத்தவரை சீனாவில் இது 2026 க்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம்; அதை தொடர்ந்து 2026 நவம்பர் மாதம் இந்தியா உட்பட மற்ற உலகளவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 16 Tipped to pack 200MP periscope telephoto Samsung HP Sensor camera Why Its Important
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X