இந்த 3 Motorola போன்களையும் ஏப்.7 க்கு முன் வாங்கிய எல்லோரும் கொடுத்து வச்சவங்க.. ஏன்னா?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் இந்தியாவில் தனது 3 ஸ்மார்ட்போன்களின் விலையை இன்று (ஏப்ரல் 7 ஆம் தேதி) முதல் உயர்த்தி உள்ளது. அதாவது இந்த 3 மோட்டோ ஸ்மார்ட்போன்களையும் நேற்றும், அதற்கும் முந்தைய நாட்களிலும் வாங்கிய அனைவருமே அதிர்ஷ்டசாலிகள் என்று கூறலாம்.
உதிரிபாகங்களின் விலை உயர்வு மற்றும் விநியோக சங்கிலி அழுத்தங்களால் ஏற்படும் பரந்த அளவிலான தொழில்துறை போக்கையே, மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது. மோட்டோரோலா நிறுவனம் மட்டுமல்ல - பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்களது லாப வரம்புகளை பராமரிப்பதற்காக, பழைய மாடல்களின் விலையை சரிசெய்வது (அதாவது உயர்த்துவது) அல்லது புதிய மாடல்களின் விலையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை செய்து வருகின்றன; அதையே தான் மோட்டோரோலா நிறுவனமும் செய்துள்ளது.

எந்தெந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளன? எவ்வளவு விலை உயர்த்தப்பட்டு உள்ளன?
1. மோட்டோ ஜி35 (Moto G35)
2. மோட்டோ ஜி57 பவர் (Moto G57 Power)
3. மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் (Motorola Edge 60 Fusion)
மோட்டோ ஜி35 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,999 இல் இருந்து ரூ.12,499 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது; அதாவது ரூ.500 விலை உயர்வை பெற்றுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 இல் இருந்து ரூ.12,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது; அதாவது ரூ.1000 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் விலையான ரூ.14,999 இல் இருந்து ரூ.15,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது; அதாவது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1000 விலை உயர்வை பெற்று உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 இல் இருந்து ரூ.22,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 இல் இருந்து ரூ.24,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 இலிருந்து ரூ.26,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை உயர்வை பெற்றுள்ளது.
2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டதால் மோட்டோ ஜி35 ஸ்மார்ட்போன் தற்போது ஒரு வருடத்திற்கும் மேலான பழமையான மாடலாக உள்ளது. இந்த சீரீஸில் இதுவே மிகவும் மலிவான தேர்வாக இருந்தாலும், இதன் பழமை காரணமாக வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், இதே விலை வரம்பில் உள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் சிறந்த செயல்திறன், அம்சங்கள் மற்றும் நீண்ட கால ஓஎஸ் ஆதரவை வழங்கக்கூடும்.
மோட்டோ ஜி57 பவர் ஸ்மார்ட்போன் - நவம்பர் 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் ஆகும். இது அதன் பிரம்மாண்டமான 7000mAh பேட்டரிக்காக தனித்து நிற்கிறது, இது இரண்டு நாட்களுக்கு மேல் எளிதாக நீடிக்கும் பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இது நம்பகமான டே லைட் கேமரா, நல்ல டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் - சீரான அன்றாட செயல்திறனை வழங்குகிறது.
கடைசியாக உள்ள மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போன் தான் மேற்கண்ட 3 மாடல்களிலும் ரூ.2,000 என்கிற மிகப்பெரிய விலை உயர்வை பெற்றுள்ளது, இது அதனை மிகவும் போட்டி நிறைந்த நடுத்தர விலைப்பிரிவுக்குள் தள்ளியுள்ளது. அப்படியிருந்தும், இது வலுவான மல்டிமீடியா திறன்கள், நம்பகமான பேட்டரி லைஃப், நல்ல டே லைட் கேமராவின் செயல்திறன் மற்றும் க்ளீன் ஆன, கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸ் ஆகிய அனைத்தையும் ஒரு பேக்கேஜ் ஆக கொண்டுள்ள ஒரு முழுமையான ஸ்மார்ட்போனாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications








