காந்தப்புல பயன்பாட்டின் VR உபகரணத்திற்கு காப்புரிமை பெற்ற சாம்சங்

By Siva
|

எதிர்காலத்தில் உபயோகப்படுத்தும் புதிய பொருட்கள் குறித்து நீங்கள் அறிய் விரும்பினால் அதற்கு சமீபத்தில் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட காப்புரிமை பெற்ற சாதனங்கள் குறித்து அறிந்தாலே போது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாம்சங் நிறுவனம் பெற்ற காப்புரிமை தான் இன்றைய தலைமுறையின் ஹாட் டாக் ஆக உள்ளது.

காந்தப்புல பயன்பாட்டின் VR உபகரணத்திற்கு காப்புரிமை பெற்ற சாம்சங்

காந்தப்புல சக்தி உடைய வெர்ட்சுவல் ரியாலிட்டி என்று கூறப்படும் VR உபகரணத்தை சமீபத்தில் சாம்சங் நிறுவனம் அமெரிக்க அரசிடம் காப்புரிமையை பெற்றுள்ளது. இந்த உபகரணங்கள் காந்த புலங்களை பயன்படுத்தும், காந்தப்புலன்களின் பயன்பாடு இன்னும் துல்லியமான வாசிப்பு மற்றும் கண்காணிப்பு மற்றும் நிலைப்படுத்தல் ஆகியவற்றை உறுதி செய்யும்.

இந்த உபகரணம் எவ்வாறு இயங்குகிறது என்பதை காப்புரிமை மேலும் விளக்குகிறது. VR தவிர, இதுபோன்ற கட்டுப்படுத்திகள் மற்ற சாதனங்களுடன் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தப்புல பயன்பாட்டின் VR உபகரணத்திற்கு காப்புரிமை பெற்ற சாம்சங்

மேலும் ஒரு VR ஹெட்செட் குறித்த காப்புரிமை மேலும் கூறுவது என்னவெனில் இது ஒரு 'மூல' சாதனம் பொருத்தப்பட்ட உபகரணம். மூல சாதனம் அநேகமாக தனித்தன்மையுடன் இருக்கும் அதுமட்டுமின்றி இந்த சாதனம் காந்த புலத்தையும் வெளியிடுகிறது. காந்தப்புலம் வெளியேற்றவும், அந்த சாதனாத்தின் தூரத்தையும் கணக்கிடவும் உதவும்

காந்தப்புல பயன்பாட்டின் VR உபகரணத்திற்கு காப்புரிமை பெற்ற சாம்சங்

இந்த உபகரணத்தின் காப்புரிமை குறித்து இந்த இரண்டாவது படம் கூறுவது என்னவெனில் ஒரு பயனருடன் ஒரு தொலைக்காட்சி மூலம் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் விளக்குகிறது. இந்த படத்தில் ஒரு வாடிக்கையாளர் ஒரு VR ஹெட்செட் அணிந்திருக்கவில்லை ஆனால், காந்தப்புலத்தை வெளிப்படுத்தும் 'மூல உபகரணம் அல்லது 'VR வழங்கும் சாதனத்தை அவர் எங்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்.

இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு சாதனம் அந்த வாடிக்கையாளரின் பின்புற பாக்கெட்டில் உள்ளது. திரையில் காட்டப்படும் காட்சி அம்சங்களுடன் வாடிக்கையாளர் தொடர்பில் இருக்கின்றார். அவருடைய பிரதான கவனம் VR இல் இருக்கும்போது, அந்த சாதனம் "இன்னொரு உருவகத்திற்கு" பயன்படுத்தப்படலாம் என்று காப்புரிமை கூறுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
A new Samsung patent describes a type of VR controller which will use magnetic fields to establish communication with the corresponding equipment.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X