விட்ராதீங்க ப்ரோ.. வெறும் ரூ.14,499 க்கு Samsung 5G போன்.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு சூப்பர் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி மாடலின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 12 சதவீத தள்ளுபடி போக 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.14,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி மாடலை வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M17 5G Specifications): ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவாக கிடைத்தாலும், 6 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது.
தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 5என்எம் எக்ஸினோஸ் 1330 (Octa Core 5nm Exynos 1330) சிப்செட் கிடைத்துள்ளது. இந்த விலை ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. எக்ஸினோஸ் சிப்செட் கிடைப்பதால், இன்-ஹவுஸ் பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்கும்.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-யூ சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1100 நிட்ஸ் எச்பிஎம் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் பேக் செய்யப்பட்டு உள்ளது.
ஓஐஎஸ் டெக்னாலஜி மட்டுமல்லாமல், ஆட்டோ போகஸ் (Auto Focus) கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) உள்ளன. மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் சப்பயர் பிளாக் (Sapphire Black) ஆகிய கலர்களில் இந்த எம்17 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








