1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!

|

மேக்ஸிமா வாட்ச் (Maxima Watch) நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்கள் வரிசையில் மேக்ஸிமா ப்ரோ சாமுராய் (Maxima Pro Samurai Smartwatch) என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ் ஒன்றை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த மேக்ஸிமா வாட்ச்சுகள் பொதுவாகவே நான்-காலிங் ஸ்மார்ட் வாட்ச் (Non Calling Smart Watch) என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த மேக்ஸிமா ஸ்மார்ட் வாட்ச்களில் ப்ளூடூத் மூலம் அழைப்புகளை ஏற்கும் அம்சம் இல்லை. ஆனால், மற்ற எல்லா ஸ்மார்ட் விஷயங்களையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் தடையில்லாமல் செய்கிறது.

1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! இப்படி ஒரு Smartwatch-ஆ!

Maxima Pro Samurai ஸ்மார்ட்வாட்சில் இருக்கும் சிறப்பு என்ன தெரியுமா?

குறிப்பாக, இதன் பேட்டரி ஆயுள் சிறப்பாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இதை விட முக்கியமான விஷயம் இது கம்மி விலையில் வருகிறது. சரி, வாருங்கள், இந்த புதிய மேக்ஸிமா ஸ்மார்ட்வாட்சில் என்னென்ன ஸ்பெஷலாக இருக்கிறது? இதன் விலைக்கு இது வாங்குவது சிறந்ததா? இல்லையா? என்று பார்க்கலாம். மேக்ஸிமா ப்ரோ சாமுராய் வாட்ச் தான் இந்த விலையில் கால் அக்செப்ட்டிங் (Call Accepting) அம்சம் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்சாக இருக்கும் என்று மேக்ஸிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கால் அசெப்டிங் அம்சம் என்பது உங்கள் போனிற்கு வரும் அழைப்புகளை வாட்ச் மூலம் ஏற்கலாம். ஆனால், இதில் மைக் அல்லது ஸ்பீக்கர் இல்லை என்பதனால், வாட்ச் மூலமாக பேச முடியாது. இது தான் ப்ளூடூத் கால்லிங் அம்சம் கொண்ட வாட்ச்களுக்கும் கால் அட்டெண்டிங் வாட்சைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடாகும். இந்த மேக்ஸிமா ப்ரோ சாமுராய் ஸ்மார்ட் வாட்ச்சில் இருக்கும் மற்ற அம்சங்களை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

மேக்ஸிமா நிறுவனத்தின் இந்த மேக்ஸிமா ப்ரோ சாமுராய் ஸ்மார்ட் வாட்ச், 600 நிட்ஸ் பிரைட்னஸ் (Brightness) மற்றும் டச் சப்போர்ட் (Touch Support) கொண்ட 1.85' இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவை (HD Display) கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்சில் மேம்படுத்தப்பட்ட யூசர் இன்டர்பேஸ் (Enhanced User Interface), ஸ்கிரீன் லாக் (Screen Lock), கால் நோட்டிபிகேஷன் (Call Notification) மற்றும் கால் பிக்கப் (Pickup) ஆகிய அம்சங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களும் இதில் உள்ளது.

1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! இப்படி ஒரு Smartwatch-ஆ!

1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதுமா? உண்மையாவா?

ஸ்போர்ட்ஸ் ட்ராக்கிங் (Sports Tracking) அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மேக்ஸிமாவின் மேக்ஸ் ப்ரோ சாமுராய் ஸ்மார்ட் வாட்ச்சிற்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் பத்து நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 மாதத்திற்கு 3 முறை மட்டும் நீங்கள் சார்ஜ் செய்தால் போதும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்சில் இங்கிலீஷ் (English), ஹிந்தி மற்றும் பிற இந்திய வட்டார மொழிகளும் (Regional Languages) இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்ஸிமா நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்தே இந்த மேக்ஸிமா ப்ரோ சாமுராய் ஸ்மார்ட் வாட்சை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட் வாட்சில் அழைப்புகளை ஏற்கும் அம்சம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக மேக்ஸிமா நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே, இதுவரை நான் காலிங் ஸ்மார்ட் வாட்ச்களை மட்டுமே உருவாக்கி வந்த மேக்ஸிமா நிறுவனம், முதல் முறையாக அழைப்புகளை ஏற்கும் அம்சம் கொண்ட மேக்ஸிமா ப்ரோ சாமுராய் ஸ்மார்ட் வாட்ச்சை உருவாக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை என்ன தெரியுமா?

மேக்ஸிமாவின் இந்த மேக்ஸிமா ப்ரோ சாமுராய் ஸ்மார்ட் வாட்ச் அறிமுக விலையாக ரூ. 1,499 என்று விலைக்கு விற்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சை அதிகப்படியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், குறைந்த விலையில் இந்த டிவைஸை அறிமுகம் செய்து இருப்பதாக மேக்ஸிமா நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் (Managing Partner) மஞ்ஜோத் புரேவால் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இது டீசென்ட் அம்சத்துடன் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்சாக இருக்கிறது. நீடித்த பேட்டரி வேண்டும் என்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.

Best Mobiles in India

English summary
Maxima Pro Samurai Smartwatch Launched In India Price and Specification Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X