வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?

|

இதுவரை நீங்கள் எத்தனையோ கேட்ஜெட்களை பார்த்திருப்பீர்கள், உதாரணமாக ப்ளூடூத் ஹெட்செட், ப்ளூடூத் ஸ்பீக்கர், ஏர் டேக், ஜிபிஎஸ் டிராக்கர், என்று வயர்லெஸ் செயல்பாடுகளைப் பயன்படுத்தும் பல கேட்ஜெட்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஏன் பயன்படுத்தியும் இருப்பீர்கள்.

ஆனால், இப்படி ஒரு வயர்லெஸ் கேட்ஜெட்டை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. 'அப்படி என்னப்பா ஸ்பெஷல் கேட்ஜெட்' என்று நீங்கள் கேட்கலாம். இது பார்ப்பதற்கு வெறும் ஸ்டிக்கர் போலத் தான் இருக்கும். ஆனால், இது செய்யக் கூடிய வேலைகள் எல்லாம் வேற லெவெலில் இருக்கும் மக்களே. உங்கள் வாழ்க்கையை வெறும் 15 ரூபாய் ஸ்டிக்கர் மூலம் ஸ்மார்ட்டாக மாற்றலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?

வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா?

NFC ஸ்டிக்கர் என்றால் என்ன? அது என்ன செய்யும்?

நம்புங்கள் அதைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் கேட்ஜெட் தான் NFC ஸ்டிக்கர்கள். வயர்லெஸ் இணைப்புகளை மேலும் சுலபப்படுத்த அறிமுகமாகியுள்ள ஒரு கேட்ஜெட் தான் என்எஃப்சி (NFC) என்று கூறப்படும் நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (Near Field Communication) ஸ்டிக்கர்ஸ். இந்த என்எஃப்சி ஸ்டிக்கர்கள் இரண்டு கேட்ஜெட்டுகளை வயர்லெஸ் கம்யூனிகேஷன் மூலம் இணைக்கும் ஒரு சாதனம் ஆகும்.

இந்த என்எஃப்சி-க்கள் ரேடியோ கதிர்வீச்சுகளை வெளியிடுவதன் மூலம் தகவல் பரிமாற்றத்தை நிகழ்த்துகின்றன. இதற்கு முதலில் நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களில் என்எஃப்சி அம்சம் இருப்பது அவசியம். இந்த என்எஃப்சி-க்களின் சிறப்பு அம்சமே அவை மிகவும் சிறிய ஸ்டிக்கர் (Sticker) அல்லது டாக் (Tag) வடிவத்தில் இருப்பது தான். இதற்கு பவர் சோர்ஸ் (power source) கிடையாது, பேட்டரி கிடையாது, சார்ஜிங் தேவைப்படாது, வாட்டர் ப்ரூஃப், எல்லாவற்றையும் விட இது மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது.

வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா?

NFC ஸ்டிக்கரை வைத்து வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்றலாமா?

மொபைல் வாலெட்டுகள் (Mobile wallet), டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்ட் மூலம் காண்டாக்ட் லெஸ் பேமென்ட்கள் (Contactless Payment) போன்றவற்றை இந்த என்எஃப்சி தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் மேற்கொள்ளலாம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், இந்த NFC ஸ்டிக்கர்களை வைத்து உங்கள் வீட்டையும், உங்கள் வாழ்க்கையையும் ஸ்மார்ட்டாக மற்ற முடியும் என்பதே புது விஷயம்.

வயர்லெஸ் முறையில் மற்ற சாதனங்களை உங்கள் போன் மூலம் இனி நீங்கள் கட்டுப்படுத்த முடியும். இதற்கு நீங்கள் இந்த என்எஃப்சி ஸ்டிக்கர்க்களை பயன்படுத்தலாம். இந்த என்எஃப்சி ஸ்டிக்கர்கள் இயங்க, மற்ற டிவைஸ்களில் இருந்து பவரை எடுத்துக் கொள்ளும். உதாரணத்திற்கு ஸ்மார்ட்போனைக் கொண்டு ஒரு என்எஃப்சி ஸ்டிக்கரை நீங்கள் டாப் (Tap) செய்யும்போது, அது ஸ்மார்ட்போனிலிருந்து பவரை எடுத்து இயங்குகிறது.

வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா?

சிங்கிள் டச் இல் இதையெல்லாம் செய்யலாமா?

உதாரணமாக, உங்கள் இன்ஸ்டாக்ராம் ID, அல்லது எமெர்ஜென்சி தகவல்களை இப்படி கூட நீங்கள் ஷேர் செய்துகொள்ளலாம். உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம்மாக்கவும் இந்த என்எஃப்சி ஸ்டிக்கர்கள் பயன்படும். இந்த ஸ்டிக்கர்களை பயன்படுத்தி அறைகளில் உள்ள விளக்குகள் மற்றும் மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை நீங்கள் சிங்கிள் டச் மூலம் ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும் என்பது சிறப்பானது.

மிகவும் சுலபமான உதாரணமாகக் கூற வேண்டும் என்றால், வீட்டை விட்டு நீங்கள் வெளியில் செல்கிறீர்கள், உங்கள் வீட்டில் இருக்கும் லைட்களை OFF செய்ய வேண்டும் என்றால், இந்த ஸ்டிக்கரை ஒரு முறை டச் செய்தால் போதும். இதற்கு முன், இந்த ஸ்டிக்கர் மூலம் நீங்கள் என்ன செய்யவிருக்கிறீர்கள் என்பதை அந்த ஸ்டிக்கர் உடன் லிங்க் செய்து, ப்ரோக்ராம் ஆன் செய்ய வேண்டும். இது ஒரு ப்ளூடூத் ஹெட்போனை இணைப்பது போன்றது தான்.

குழந்தைகளிடம் பெற்றோரின் தொடர்பு எண் கொண்ட என்எஃப்சி ஸ்டிக்கர்களை அவர்களது பள்ளி பேக்களில் (Bag) கூட ஓட்டிவிடலாம். இதுபோல பல எண்ணில் அடங்காத பல அம்சங்களை ஒரு சிறிய என்எஃப் ஸ்டிக்கர் மூலம் ப்ரோக்ராம் செய்து, பல விதமான பயன்பாடுகளுக்கும் உபயோகிக்கலாம். இன்னும் எதுக்கு வெயிட் பண்ணுறீங்க. உடனே போய் என்எஃப்சி ஸ்டிக்கர் வாங்கி உங்கள் வாழ்க்கையையும் ஸ்மார்ட் ஆக மற்ற ஆரம்பிங்க.

Best Mobiles in India

English summary
How to use NFC stickers and Its Uses To Make Your Life Easy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X